கும்பம் டிசம்பர் மாத பொதுப்பலன்கள்:
கும்ப ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம், சமுதாயத் தொடர்புகள், நட்புறவு போன்றவை மூலம் நன்மைகள் ஏற்படக்கூடும். சிலர், வேலை தொடர்பான மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம். மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் உங்களுக்குளேயே நீங்கள் பூட்டி வைத்துக் கொண்டிருக்கும் சிந்தனைகள், இப்பொழுது வெளிப்படக்கூடும். இது தொடர்பாக, நண்பர்களிடமிருந்தும், நலம் விரும்பிகளிடமிருந்தும் நீங்கள் ஆதரவை எதிர்பார்க்கலாம். உங்கள் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக, எந்த மாற்றம் நிகழ்ந்தாலும், அதிலிருந்து பொதுவாக நீங்கள் பயனடையக்கூடும். வாழ்க்கையில் நிலையானது மாற்றம் ஒன்று தான் என்பதையும் உணரும் நீங்கள், அந்த மாற்றங்களுக்கு ஏற்ற வகையில், தனிப்பட்ட முறையிலும், உத்யோகம் தொடர்பாகவும், உங்களையே மாற்றிக் கொள்ளக்கூடும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
இப்பொழுது உங்கள் கவனம், காதல் மீது இருக்கக் கூடும். ஆனால், செவ்வாய் கிரக அமைப்பின் காரணமாக, நீங்கள் அளவுக்கு அதிகமான துணிச்சலுடன் இருக்கக்கூடும். இது உங்கள் துணைவருக்குப் பிடிக்காமல் போகலாம். பிறருக்கு, குறிப்பாக உங்கள் துணைவருக்கு, நீங்கள் அதிகாரம் செலுத்துபவராகக் காட்சியளிக்கலாம். ஆனால் இந்த இடத்தில், நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறீர்கள் என்பது தான் உண்மையாக இருக்கும். அதே நேரம், சுக்கிரன் உங்களை மென்மையாகப் பேசுமாறு செய்யக்கூடும். சூரியனின் காரணமாக, உங்கள் ஆளுமையும், பிரகாசமும் பிறர் அறியுமாறு வெளிப்படக்கூடும். இந்த மாதம், காதல் விவகாரங்களில் முன்னேற்றம், அவை தொடர்பாக நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது போன்றவை முக்கியத்துவம் பெறக்கூடும்.
மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: சூரிய பகவான் பூஜை
நிதி:
பணவரவு நன்றாக இருக்கும். முன்பு ஏதாவது முறைகேடுகள் நிகழ்ந்திருந்தாலும், நிதி தொடர்பான மன அழுத்தம் ஏற்பட்டிருந்தாலும், அவை எல்லம் இந்த மாதம் தீர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. சிலர் விஷயத்தில், பலநாட்களாக வராமல் இருந்து வந்த அவர்களது பணமும், கடவுள் அருளால், இப்பொழுது வந்து சேர்ந்து விடும் வாய்ப்புள்ளது. வங்கி அல்லது நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து உங்களில் சிலர் வாங்கியுள்ள கடனையும், இப்பொழுது அடைத்து விடக்கூடும். இதன் மூலம், புது வருடத்தில், உங்கள் வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயத்தை நீங்கள் துவக்கலாம்.
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: சுக்ர பகவான் பூஜை
வேலை:
உங்கள் பணித்திறன் சிறந்து விளங்கக்கூடும். உங்கள் வேலையில் குறிப்படத்தக்க முன்னேற்றமும் ஏற்படக்கூடும். இப்பொழுது நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்களோ, அவ்வளவு தூரம், வேலையில் உங்களால் முன்னேற்றம் காண முடியும் என்று கூடக் கூறலாம். இருப்பினும், வெற்றிக்கான உங்கள் பாதையில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். ஆனால், இவற்றை ஒவ்வொன்றாகச் சமாளித்து, எவ்வாறு உங்கள் பாதையிலிருந்து விலக்கிக் கொள்ளலாம் என்பதும் உங்களுக்குத் தெரியும் எனலாம். ஊதிய உயர்வு, உங்கள் வேலைப் பொறுப்பு போன்றவை குறித்தும் கூட, நீங்கள் இப்பொழுது உங்கள் உயரதிகாரிகளிடம் பேசலாம். உங்கள் தகுதிக்கு ஏற்றதை எல்லாம், உரிமையுடன் கேட்டுப் பெறும் தைரியம் இப்பொழுது உங்களிடம் இருக்கும் எனலாம்.
தொழில்:
கூட்டு வியாபாரம் சாதகமாக அமையக்கூடும். சிலர், அவர்களது வருங்கால தொழில் கூட்டாளிகளை சந்தித்து, அவர்களுடன் நல்ல ஒப்பந்தங்கள் செய்து கொள்ளக்கூடும். போட்டி வணிகம் அல்லது டெண்டர்கள் போன்றவையும் உங்களுக்குச் சாதகம் தரலாம். ஆனால், முதலீடுகள் செய்வதற்கு முன்பாக, நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வது நல்லது. சவாலான முயற்சிகளில் இறங்குவது குறித்தும், நீங்கள் மிக கவனமாக முடிவு செய்வது நல்லது.
தொழில் வல்லுநர்கள்:
ஆராய்ச்சியை விரும்பும் கும்ப ராசி தொழில் வல்லுநர்கள், ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்த விவாதங்களையே மேற்கொள்வர். எந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதற்கு முன்னர், அது குறித்த அனைத்துத் தகவல்களையும், அதனால் விளையக் கூடிய சாதக, பாதகங்கள் குறித்தும், அவர்கள் நன்கு அறிந்து கொள்ள விரும்புவர். உங்கள் அறிவாற்றலும், அனுபவமும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறக்கூடும். ஆனால் மற்றவர்களின் புகழ்ச்சி காரணமாக, சுயநலவாதியாக மாறிவிடாமல், எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தன்நிலை உணர்ந்து, அடக்கத்துடன் நடந்து கொள்வது, உங்களுக்கு நலன் தரும்.
வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: சுக்ர பகவான் பூஜை
ஆரோக்கியம்:
மருத்துவ உதவிக்கான தேவை எதுவும் இன்றி, இப்பொழுது நீங்கள் ஆரோக்கியமாகவே இருப்பீர்கள் எனலாம். தலைவலி, வேலையின் காரணமாக மன அழுத்தம் போன்ற சிறு தொந்தரவுகள் இருந்தாலும், அவை கூட இப்பொழுது குணமாகி விடக்கூடும். உடற்பயிற்சி, தியானம், ஆரோக்கியமான உணவு போன்றவை, எதிர்காலத்தில் உங்கள் உடல்நிலையை நன்கு பராமரிக்க உதவும்.
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை
மாணவர்கள்:
மாணவர்களுக்குப், பொதுவாக, இது ஒரு நல்ல மாதமாக அமையக்கூடும். அயல்நாடுகள் செல்ல விரும்புவோருக்கு, அவர்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கக்கூடும். பிரச்சனை அதிகம் இன்றி, கல்விக் கடன்களும் கிடைக்கக்கூடும். குறிப்பாக, அவர்களுக்குப் பிடித்த கல்வி நிறுவனம், பாடத் திட்டம் போன்றவற்றில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும்; அவர்கள் விரும்பியது கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். நீங்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி, அதில் சிறந்து விளங்கக்கூடும். மேலும், போட்டித் தேர்வுகள், அல்லது வேலை போன்றவையும் சிலருக்கு அதிர்ஷ்டகரமாக அமையலாம்.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: குரு பகவான் பூஜை
சுப தினங்கள்: 1, 2, 3, 4, 12, 17, 18, 19, 20, 22, 21, 27, 28, 29
அசுப தினங்கள்: 5, 6, 8, 9, 10, 11, 13, 14, 15, 16, 23 24, 25, 26, 30, 31
Leave a Reply