Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

மீனம் டிசம்பர் மாத ராசி பலன் 2020 | December Matha Meenam Rasi Palan 2020

November 10, 2020 | Total Views : 556
Zoom In Zoom Out Print

மீனம் டிசம்பர் மாத பொதுப்பலன்கள்:

மீன ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம், மன அழுத்தம் தருவதாக இருக்கும் அதே நேரம், நன்மைகள் தருவதாகவும் அமையக்கூடும். கல்வி, குடும்பம், காதல் வாழ்க்கை, அல்லது பண விஷயங்கள் போன்ற எதுவாக இருந்தாலும், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவு தேவை என்பதை இப்பொழுது நீங்கள் உணரக்கூடும். எல்லாவற்றையும் நாம் தனி ஒருவராக இருந்து நடத்தி, முடித்து விட முடியாது; அதற்கு மற்றவர்களின் ஒத்துழைப்பு தேவை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளக்கூடும். எற்ற நபர்கள், சரியான சூழ்நிலை போன்றவற்றின் ஆதரவு இருக்குமானால், நீங்கள் பலவற்றையும் சாதிக்கலாம். விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். பிறரை நம்புவது என்பதன் பொருள், நீங்கள் பலவீனமானவர் என்பதோ அல்லது பிறரைச் சார்ந்திருப்பவர் என்பதோ அல்ல. இது, உங்களுக்கான, இந்த மாதத்தின் பாடமாக அமையக்கூடும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள். 

  

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதல் வாழ்க்கை சரியான பாதையில் செல்லும் என்றாலும், செவ்வாய் கிரகத்தின் அமைப்பால், பொறாமை, கோபம் போன்றவற்றால் பிரச்சனைகள் எழலாம். உங்கள் துணைவர் மீது நம்பிக்கை கொள்ள நீங்கள் விரும்பினாலும், குழப்பம், அகம்பாவம் போன்றவை காரணமாக, இவ்வாறு செய்ய உங்களால் இயலாமல் போகலாம். சுக்கிர கிரகம் உங்களை மென்மையாகப் பேசச் செய்தாலும், செவ்வாய் உங்களை ஒரு ஒற்றனாகக் கூட மாற்றிவிடக் கூடும். எனவே, நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியம். எந்த உறவும் வலிமையாக இருக்க வேண்டுமென்றால், அதில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம்.   
மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: சுக்கிர பகவான் பூஜை

நிதி:

பணவரவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும். சிலருக்கு எதிர்காலம் குறித்த கவலைகளும் இருக்கக்கூடும். இப்பொழுது, நிச்சயமில்லாத, ஆபத்தான முதலீடுகள் செய்வதோ, பிறருக்குப் பணம் கடன் கொடுப்பதோ நல்லதல்ல. பணவிஷயங்கள் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர், பெற்றோர்கள், நண்பர்கள் அறிவுரையக் கேட்பது நல்லது. இதன் மூலம், யாருக்கெல்லாம் பணம் கடன் கொடுக்கலாம், யாருக்குக் கொடுக்கக் கூடாது போன்றவை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள இயலும். 

நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை   

வேலை:

வேலையில் சுமாரான முன்னேற்றம் இருக்கக்கூடும்; ஆனால் அத்துடன் கூட, மன அழுத்தமும் ஏற்படக்கூடும். இந்த நேரத்தில், சக ஊழியர்கள் உங்களைக் கைவிட்டு விடக்கூடும்; உயரதிகாரியும் உங்களுக்கு ஆதரவாக இல்லாமல் போகலாம். அலுவலகத்தில் எந்த வித நன்மதிப்பைப் பெறுவதற்கும், நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் கடினமாக உழைக்கும் அளவுக்கு உழைக்காத சில சக ஊழியர்கள் வெற்றி பெறக்கூடும்; அதே நேரம் தீவிரமாகப் பணியாற்றியும் கூட, அங்கீகாரம் பெறுவதற்கு நீங்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கலாம். இது உங்களை விரக்தியடையச் செய்யலாம். 

தொழில்:

கூட்டு வியாபாரத்தில் சில பிரச்சனைகள் எழலாம். உங்களில் சிலர், வருங்காலத்தில் உங்களுடன் கூட்டுத்தொழில் செய்யக் கூடியவர்களை சந்தித்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்புள்ளது. ஆனால், உங்கள் தொழிலின் இலக்குகள், வெற்றி, லாபகத்தன்மை போன்றவை குறித்து, உங்களால் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க இயலாமல் போகலாம். சிலரது தொழில் கூட்டளிகள் சமரசம் செய்து கொள்ள விரும்பாத நிலை ஏற்படலாம். இது உங்களை, உணர்ச்சி வசப்படவும், அவசர முடிவுகள் எடுக்கவும் வைக்கலாம். எனவே எச்சரிக்கையுடன் செயலாற்றுங்கள்; சரியான தருணத்திற்காகக் காத்திருங்கள். 

தொழில் வல்லுநர்கள்:

மீன ராசி தொழில் வல்லுநர்கள், உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், சிந்தித்துச் செயலாற்றுபவர்களாகவும் இருப்பார்கள். எந்தப் பிரச்சனையையும் தங்கள் உணர்வுபூர்வமான அறிவாற்றல் மூலம் புரிந்து கொண்டு, அதற்குத் தீர்வு காண விரும்புவார்கள். உணர்வுகளின் அடிப்படையிலான உங்களது இந்த அறிவாற்றல், உயதிகாரியின் பாராட்டைப் பெறக்கூடும். ஏதாவது உதவிக்காக, அவர் உங்களை அணுகவும் கூடும். ஆனால் உணர்வுகளுக்கு, அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பது, நடைமுறைபூர்வமான அம்சங்களிலிருந்து உங்கள் கவனத்தைத் திருப்பி விடக்கூடும். எனவே, எச்சரிக்கை தேவை. 

வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: சுக்ர பகவான் பூஜை   

ஆரோக்கியம்:

உங்கள் உடல்நிலை சீராகவே இருக்கக்கூடும். எனினும், சில சாதாரண காரணங்களுக்காக, உங்களில் சிலருக்கு மருத்துவ ஆலோசனை அல்லது பரிசோதனை தேவைப்படலாம். வேலை பளு காரணமாக, சிலர், மன அழுத்தம், கழுத்து வலி போன்றவற்றால் பாதிக்கப்படலாம். உடற்பயிற்சி, தியானம் செய்யுங்கள்; சத்தான உணவு உட்கொள்ளுங்கள். இவை உங்களுக்கு, நீண்ட காலப் பயனளிக்கும். 

ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: சந்திர பகவான் பூஜை     

மாணவர்கள்:

மாணவர்களுக்கு, இது, ஓரளவு சாதகமான மாதம் எனலாம். ஆனால் சிலர், அவர்கள் விரும்பும் கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் சேர இயலாமல் போகலாம். இது அவர்களை விரக்தியடையச் செய்யலாம். பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் அல்லது சக மாணவர்களின் அழுத்தம் காரணமாக, மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். அவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களுடைய கனவுகள் இருக்கும். அவற்றை நிறைவேற்றிக் கொள்வது, அவர்களின் ஆசையாக இருக்கும். 

படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை  

சுப தினங்கள்: 9, 10, 11, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22, 30
அசுப தினங்கள்: 1, 2, 3, 4, 5, 6, 8, 12, 21, 23 24, 25, 26, 27, 28, 29, 31

banner

Leave a Reply

Submit Comment