மகரம் டிசம்பர் மாத ராசி பலன் 2020 | December Matha Magaram Rasi Palan 2020

மகரம் டிசம்பர் மாத பொதுப்பலன்கள்:
மகர ராசி அன்பர்களுக்கு, இது, பல நன்மைகளைத் தரும் மாதமாக அமையக் கூடும். கல்வி, குடும்பம், காதல் வாழ்க்கை, பண விவகாரங்கள் என எதுவாக இருந்தாலும் சரி, இப்பொழுது உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் வாய்ப்புள்ளது. உங்கள் மீதும், எல்லாம் வல்ல இறைவன் மீதும் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் பயனாக, சவால்களை எல்லாம் சமாளித்து நீங்கள் வெற்றியடையக்கூடும். நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்பது குறித்து தெளிவாக இருங்கள்; அந்த இலக்குகளை அடைய, முனைப்புடன் செயலாற்றுங்கள். இவ்வாறு நீங்கள் செய்தால், வாழ்க்கையில் உங்கள் முன்னேற்றத்திற்கு, கிரகங்கள் கண்டிப்பாகத் துணைபுரியும் என எதிர்பார்க்கலாம். இந்தக் காலகட்டத்தில், சிலர், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ளக்கூடும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல் உறவுகள் நன்றாக அமையக்கூடும். ஆனால், செவ்வாய் கிரகத்தின் அமைப்பு காரணமாக, கோபத்தால் விளையும் பிரச்சனைகள் சிலவற்றை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். பிறர் மீது, குறிப்பாக உங்கள் துணைவர் மீது, நீங்கள் ஆதிக்கம் செலுத்த முயலக்கூடும். சுக்கிர கிரகம் உங்களை அமைதியாக பேச வைக்கக்கூடும்; அதே நேரம், செவ்வாய் உங்கள் பேச்சை சற்றே கடுமையாக்கக் கூடும். எனவே, கவனமாக இருக்கவும். உறவுகளை சுமுகமாகப் பராமரிக்க விரும்பினால், உங்கள் பேச்சிலும், செயலிலும், நீங்கள் பக்குவமாக நடந்து கொள்வது முக்கியமாகும். கோபம் உறவுகளைக் கடுமையாக பாதித்து விடலாம் என்பதை இப்பொழுது நீங்கள் உணரக்கூடும்.
மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை
நிதி:
பணவரவு மிகச் சிறப்பாக இருக்கக்கூடும். ஆனால் அது சீராக இல்லாமல் இருக்கக்கூடும் என்பதால், உங்களுக்கு சில நேரங்களில் மன அழுத்தம் ஏற்படலாம். இந்த நேரத்தில், நிச்சயமில்லாத, பாதுகாப்பற்ற முதலீடுகளில் இறங்க வேண்டாம். இது ஒரு சூதாட்டத்திற்கு ஒப்பானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில், வீட்டுப் பெரியவர்கள், அலுவலக உயரதிகாரிகள் போன்றவர்களின் அறிவுரையைக் கேட்பது நல்லது. இதன் மூலம், எங்கு முதலீடு செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். இதனால், அதிக லாபம் கிடைக்காவிட்டாலும், நீங்கள் பண நஷ்டம் அடையாமல் இருக்கலாம்.
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: சனி பகவான் பூஜை
வேலை:
பணியில் முன்னேற்றம் தரும் காலமாக இது அமையக்கூடும். இருப்பினும், இந்த வளர்ச்சி, சிலருக்குப் போதுமானதாகவும், அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாகவும் இல்லாமல் போகலாம். பதவி உயர்வுக்காகவும் நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம். இதுவும் உங்களுக்கு எரிச்சலூட்டலாம். பணியிடத்தில், மேலோட்டமான உறவுகள் இப்பொழுது முடிவுக்கு வந்து, உயர்பதவியில் உள்ளோர், சக ஊழியர்கள், கீழ் பணிபுரிபவர்கள் போன்றவர்களுடன் புதிய, நல்ல உறவுகள் ஏற்படலாம்.
தொழில்:
கூட்டுத் தொழில் உங்களை பரபரப்பாக வைத்திருக்கக்கூடும். சிலருக்குத், தங்கள் வருங்காலத் தொழில் கூட்டளிகளைச் சந்தித்து, அவர்களுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த நேரத்தில் நீங்களும் சரி, உங்கள் கூட்டளிகளும் சரி, தொழில் தொடர்பாக எந்தவிதத் தீவிரமான நடவடிக்ககை எடுக்கவும் விரும்பமாட்டீர்கள். எந்த வித நடவடிக்கையில் துணிச்சலாக இறங்கலாம், எதில் அவ்வாறு இறங்கக் கூடாது என்பது குறித்து, நீங்கள் இப்பொழுது தெளிவாகச் சிந்தித்து, முடிவு செய்து விடுவது நல்லது. முதலீடுகள் விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவும். முதலீடுகள் செய்வதற்கு முன், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும்.
தொழில் வல்லுநர்கள்:
மகர ராசி தொழில் வல்லுநர்கள், சாதாரணமாகவே, ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர்களாகவும், அறிவாற்றல் வாய்ந்தவர்களாகவும் இருக்கக்கூடும். எந்தச் செயலில் இறங்குவதற்கு முன்னரும், அது குறித்து அவர்கள் தீவிரமாக யோசித்து, அதன் சாதக, பாதகங்களை எடைபோட விரும்புவர். உயரதிகாரிகள், உங்கள் ஆராய்ச்சித் திறன் கண்டு மகிழ்ச்சி அடையவும், உங்களைப் பாராட்டவும் வாய்ப்புள்ளது. ஆனால், அளவுக்கு அதிகமான ஆராய்ச்சி மனநிலையுடன் செயலாற்றுவது நல்லதல்ல. இதனால், உங்கள் பணி தொடர்பான நடைமுறை விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த முடியாமல் போய்விடலாம்.
வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: சுக்ர பகவான் பூஜை
ஆரோக்கியம்:
மருத்துவ உதவி எதுவும் தேவையின்றி, இப்பொழுது உங்கள் உடல்நிலை சாதாரணமாகவே இருக்கும் எனலாம். ஆனால் வேலைப் பளு, பதட்டம் காரணமாக, உங்களில் சிலருக்கு, மன அழுத்தம், தலைவலி போன்றவை ஏற்படலாம். ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும்; உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றைத் தவறாமல் செய்யவும். இந்த எளிய நடைமுறைகள் நீண்ட காலப் பயனளித்து, உங்கள் உடல்நிலையைச் சீராகப் பராமரிக்க உதவும்.
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: குரு பகவான் பூஜை
மாணவர்கள்:
மாணவர்களுக்குப் பொதுவாக, இது பயனுள்ள காலமாக இருக்கக் கூடும். ஆனால் சிலர், அவர்கள் விரும்பிய கல்லூரியிலோ, கல்வி நிறுவனத்திலோ சேர இயலாமல் போகலாம். இது உங்கள் மனவுறுதியைக் குறைத்துவிடலாம். கல்விக் கடன் தொடர்பாகவும் சில பிரச்சனைகள் எழலாம். இவ்வாறு கடன் பெற்றிருக்கும் மாணவர்கள் சிலர், அதைத் திருப்பிச் செலுத்துவது குறித்து, மன அழுத்தத்துக்கு ஆளாகலாம். ஆனால் அவர்கள் தங்கள் பாடங்களில் தீவிர கவனம் செலுத்தி, படிப்பில் சிறந்து விளங்கக்கூடும். இதன் காரணமாக, மூத்தவர்கள், வேலைக்காக இவர்களைப் பரிந்துரை செய்யும் வாய்ப்பும் உள்ளது.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை
சுப தினங்கள்: 4, 5, 6, 8, 9, 10, 11, 17, 18, 19, 20, 22, 21, 30, 31
அசுப தினங்கள்: 1, 2, 3, 12, 13, 14, 15, 16, 23 24, 25, 26, 27, 28, 29
