AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

August Monthly Libra Rasi Palangal 2019 Tamil

July 29, 2019 | Total Views : 1,337
Zoom In Zoom Out Print

துலாம் ராசி -​​ பொதுப்பலன்கள்

துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதப் பலன்கள், கலவையாக இருக்கும். உங்கள் இலக்குகளிலும், செயல்களிலும் உரிய கவனம் தேவை. வேண்டாத குழப்பங்கள் காரணமாக, பணிகளை முடிப்பதில் சிக்கல் எழலாம். எனினும் நம்பிக்கை இழக்காமல், தடைகளை சமாளித்து, பணிகளை முழுமூச்சுடன் மேற்கொள்ள வேண்டும். முக்கியப் பணிகளை ஒத்திப் போடாமல், குறித்த நேரத்தில் அவற்றை சரியாக முடிப்பதும் அவசியம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில சிறிய பிரச்சினைகளும், கவலைகளும் இருக்கக் கூடும். விவேகத்துடன் செயல்பட்டு, இவற்றை முறையாகக் கையாள வேண்டும். மனநிறைவுக்கு முக்கியம் அளித்துச் செயல்பட்டால், வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு, தியானப் பயிற்சி போன்றவை பதட்டத்தைத் தணிக்கும். உங்கள் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆரோக்கியம் திருப்தி அளிக்கும். 


துலாம் ராசி -​​ காதல் / திருமணம்

காதல் துணையுடனும் சரி, வாழ்க்கைத் துணையுடனும் சரி, நீங்கள் சுமுக உறவைப் பராமரிப்பது அவசியம். இதற்காகவும், தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும், மூத்தவர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. பிறரது தவறுகளையும், குற்றங்களையும் பெருந்தன்மையுடன் மன்னிப்பதன் மூலம், நீங்கள் அனைவரிடமும் இணக்கமான உறவை வளர்த்துக் கொள்ள முடியும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை  


துலாம் ராசி -​​ நிதி

குடும்பத் தேவைகள், குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவு போன்றவற்றுக்காக அதிக செலவுகள் செய்ய வேண்டி வரும். இவற்றைக் கட்டுப்படுத்துவதும் கடினமாக இருக்கும். எனவே பண விஷயங்களில் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். எந்த நிலையிலும் சேமிப்பை நிறுத்தாமல் தொடர்வது நன்மை தரும். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: அங்காரக  பூஜை  


துலாம் ராசி -​​ வேலை

அலுவலகத்தில் படிப்படியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். பணிகளை குறித்த நேரத்தில் முடித்து, வேலையில் நீங்கள் நல்ல பெயர் எடுப்பீர்கள்.  மேலதிகாரிகளுடன் உங்கள் உறவும் நன்றாகவே இருக்கும். பணி நிமித்தமான சிறிய பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.  

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன் பூஜை

 
துலாம் ராசி -​​ தொழில்

தொழில் முன்னேற்றத்திற்கு மிகவும் ஏற்ற காலமாக இது விளங்கும். எனவே இதை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தொழில் கூட்டாளிகள் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இது, உங்கள் தொழில் மேலும் சிறக்கத் துணை புரியும். 


துலாம் ராசி -​​ தொழில் வல்லுனர்

தொழில் வளர்ச்சி திருப்தி அளிக்கும். இது பெயரையும், புகழையும் கூட பெற்றுத் தரும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் போட்டி, பொறாமை, அவர்களால் ஏற்படும் தொல்லைகள் போன்றவையும் விலகும். பிறர் ஆதரவும் கிடைக்கும். இவை அனைத்தும், பணியில் மேலும் முன்னேற்றம் காணும் வகையில், உங்களை அதிக உற்சாகத்துடன் பணியாற்ற வைக்கும்.

 
துலாம் ராசி -​​ ஆரோக்கியம்

துலாம் ராசி அன்பர்களின் உடல்நிலை, இந்த மாதம், மேம்படும். ஆற்றலும், உற்சாகமும் பெருகும். சுறுசுறுப்பும், நல்லாரோக்கியமும் உங்களுக்கு  மகிழ்ச்சி அளிக்கும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை 


துலாம் ராசி -​​ மாணவர்கள்

நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். ஆனால், உங்கள் நண்பர்களில் சிலர் உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்கக்கூடும். இது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே உங்கள் அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அதைப்பற்றி அவர்கள் பேசவும் அனுமதிக்காதீர்கள். உங்களில் சிலர், தொண்டு நிறுவனம் மூலம் கல்வி நிதி உதவி பெறும் வாய்ப்பு உள்ளது.  

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 2,3,5,6,7,10,11,12,13,15,17,18,20,21,22,26,27,28
அசுப தினங்கள்: 1,4,8,9,14,16,19,23,24,25,29,30,31

banner

Leave a Reply

Submit Comment