கன்னி ராசி - பொதுப்பலன்கள்
கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம், அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்டும் என்றே சொல்லலாம். உங்கள் இலட்சியங்களை அடையவும், விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் இது மிகவும் உகந்த நேரமாகும். தைரியமும், தன்னம்பிக்கையும் உங்கள் செயல்திறனை அதிகரிக்கும். இவை உங்கள் ஆர்வத்தைப் பெருக்கி, முயற்சிகளில் வெற்றி தேடித்தரும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கை வசதிகள் பெருகும். சமுதாயத்தில் பிறருடன் சுமுகமாக உறவு நிலவும். தானே முன்வந்து, சமூக சேவையிலும் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் விசேஷங்கள் நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் மீது, நீங்கள் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாகவே இருக்கும். பொதுவாக வாழ்க்கை, இன்பமாகச் செல்லும்.
கன்னி ராசி - காதல் / திருமணம்
காதலர்களுக்குத் தங்கள் துணையுடன், நல்லுறவு நிலவும். உங்கள் துணையின் தனிப்பட்ட பிரச்சினைகளில் நீங்கள் காட்டும் அக்கறை காரணமாக, அவர்களின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் சுமுக உறவைப் பராமரிப்பதிலும், நீங்கள் உரிய கவனம் செலுத்துவீர்கள். இதற்காக, அவர்களது அறியாமையையும், தவறுகளையும் நீங்கள் பொறுத்துக் கொள்வது நல்லது. திருமணத்திற்குத் தக்க துணை அமையும் வாய்ப்பும் உள்ளது.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பகவான் பூஜை
கன்னி ராசி - நிதி
பொதுவாக உங்கள் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். இப்பொழுது உங்கள் வருமானம் சிறிதாவது கூடும் வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் கையிருப்பும், வங்கியிருப்பும் அதிகரிக்கும். ஆனால் செலவுகளைப் பொறுத்தவரை எச்சரிக்கை தேவை. அவற்றைக் கண்காணித்துக் குறைத்துக் கொள்வது நல்லது. கொடுத்த கடனை வசூலிப்பதில் தடைகள் நேரலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: சூரியன் பூஜை
கன்னி ராசி - வேலை
உங்கள் வேலை சாதாரணமாகச் செல்லும். செயல்திறன் திருப்திகரமாக இருக்கும். எனினும் அலுவலகத்தில், சில விஷயங்களில் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும், தேவையற்ற ஆர்வத்தையும் தவிர்க்கவும். மேலதிகாரிகள் சில நேரங்களில் உங்கள் பொறுமையை சோதிப்பார்கள். பணி முன்னேற்றமும் மந்த கதியில் இருக்கக் கூடும். எனினும், சக பணியாளர்கள் முழு ஆதரவு அளிப்பார்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: புதன் பூஜை
கன்னி ராசி - தொழில்
தொழிலில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் வட்டாரங்களிலும் அங்கீகாரம் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களும் உங்கள் செயல்திறனைப் பாராட்டுவார்கள். இதன் மூலம், ஆதாயம் கிடைக்கும்; மனநிறைவும் ஏற்படும். உங்கள் தொழிலிற்கு அரசாங்க ஆதரவும் கிடைக்கும்.
கன்னி ராசி - தொழில் வல்லுனர்
கன்னி ராசித் தொழில் வல்லுனர்கள், அவர்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் பெறுவார்கள். வேலைகளை நன்கு செய்து முடிப்பதற்காக நீங்கள் முன்வைக்கும் புதிய வழிமுறைகள், நல்ல முறையில் செயல்பட்டு வெற்றி தேடித் தரும். இதனால் பதவி உயர்வை நீங்கள் எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் உங்கள் நிலையும் உயரும். சமூகத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும். எனினும், நிறைவேற்ற வேண்டிய பணிகளை, விரைந்து முடிக்க நீங்கள் நடவடிக்கை மேற்கொள்வது நல்லது.
கன்னி ராசி - ஆரோக்கியம்
அஜீரணக் கோளாறுகளால் நீங்கள் அவதியுறும் வாய்ப்புள்ளதால், தகுந்த மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம், உங்கள் உடல்நிலையில் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் பலவற்றைத் தவிர்க்க முடியும். தவிர, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதும் நன்மை தரும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
கன்னி ராசி - மாணவர்கள்
மாணவர்களுக்கு இந்த மாதம், சுமாராகவே இருக்கும். நண்பர்களின் தாக்கத்தால், நீங்கள் மனக் குழப்பத்திற்கு ஆளாக நேரிடும். இது போன்ற குழப்பமான மனநிலை காரணமாக, நீங்கள் சரியாகப் படிக்க முடியாமல் போகலாம். இந்த நேரத்தில், அதிகம் பேசுவதைக் குறைத்துக் கொள்வது நன்மை தரும். மேலும், மற்றவர்களின் கண்ணோட்டத்தையும் புரிந்து கொள்வதன் மூலம், பல பிரச்சினைகளையும் புரிந்து கொண்டு, அவற்றுக்குத் தீர்வு காண முடியும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 2,3,5,6,7,10,11,12,13,15,17,18,20,26,27,28
அசுப தினங்கள்: 1,4,8,9,14,16,19,21,22,23,24,25,29,30,31

Leave a Reply