AstroVed Menu
AstroVed
search
search

August Monthly Scorpio Rasi Palangal 2019 Tamil

dateJuly 29, 2019

விருச்சிகம் ராசி -​​ பொதுப்பலங்கள் 

விருச்சிக ராசி அன்பர்களே! இது உங்களுக்கு சுமாரான மாதமாகவே இருக்கும். வேலையில் தடைகள் ஏற்படலாம். ஆனால் அவற்றைக் கண்டு துவண்டு போய் விடாதீர்கள்; பணிகளை ஒத்திப் போடுவதையும் தவிர்த்து விடுங்கள். தனிப்பட்ட வாழ்விலும், சிலரது நன்மதிப்பு கெட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருக்கவும். ஏமாற்றங்களின் காரணமாக மனம் துவண்டு போகலாம். இதன் விளைவாக உங்களால் சில சரியான முடிவுகளை எடுக்க இயலாமல் போகலாம். சமூகத்தில், முரண்பட்ட செயல்பாடுகளையும், வாக்கு வாதங்களையும் தவிருங்கள். நிதி மற்றும் பணி தொடர்பான நெருக்கடிகள் காரணமாக மன உளைச்சலுக்கும் ஆளாவீர்கள். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் அனுசரித்து நடந்து கொண்டால், உங்களால் இந்த நிலையிலும் ஓரளவு அமைதியான வாழ்க்கை நடத்த முடியும். ஆரோக்கியத்திலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், தகுந்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு உடல்நிலையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

விருச்சிகம் ராசி -​​ காதல் / திருமணம்

குடும்ப வாழ்க்கையில், அமைதியும், மகிழ்ச்சியும் குறைந்து காணப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் பரஸ்பர புரிந்துணர்வும் இல்லாமல் போகலாம். தனிப்பட்ட உறவுகளில் காணப்படும் பிரச்சினைகளும் உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். வாழ்க்கைத் துணையின் நடவடிக்கைகளும் திருப்தி தராமல் போகலாம். இவற்றின் காரணமாக உணர்ச்சி வசப்பட்டு விடாமல், பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுடன் இணக்கமாக இல்லாதவர்களுடன், நீங்கள் உறவு கொண்டாடுவதைத் தவிர்த்து விடுங்கள்.

 திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு  பூஜை

விருச்சிகம் ராசி -​​ நிதி 

நீங்கள் சில பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். தேவையான செலவுகளை, அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதற்கேற்ப செய்வது அவசியம். செலுத்த வேண்டிய கடன்களுக்கு தகுந்த முன்னுரிமை அளித்து, அவற்றை திருப்பிச் செலுத்துவதும் அவசியம். நீங்கள் இப்பொழுது, வங்கியிலிருந்து கடன் பெறும் வாய்ப்புள்ளது. தேவைகளை சமாளிக்க, உங்கள் நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன்  பூஜை  



விருச்சிகம் ராசி -​​ வேலை

பணியில் உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். இது உங்கள் செயல்திறனை பாதிக்கக் கூடும். அலுவலகத்தில், கருத்து வேறுபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில், காலந்தவறாமல் பணியாற்றுங்கள்; ஒவ்வொரு பணியையும் முறையாகவும், உரிய நேரத்திலும் முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன், பணிகளை உங்களால் சிறப்பாக ஆற்ற முடியும்.  

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன்  பூஜை  


விருச்சிகம் ராசி -​​ தொழில்

இந்த மாதம் தொழிலில் தொடர்ந்து வெற்றி காண்பீர்கள். எனினும், போட்டியாளர்கள் தொல்லை அளிப்பார்கள். தொழில் திட்டங்களைத் தீட்டுவதிலும், அவற்றை செயல்படுத்துவதிலும் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை, நம்பிக்கையான நபர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள்; இதில் கவனமாகவும் இருங்கள். 

 

விருச்சிகம் ராசி -​​ தொழில் வல்லுனர் 

விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம், தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ஆனால் அவற்றின் மூலம், நீங்கள் அதிக பலன்களை எதிர்பார்க்க இயலாது. மேலதிகாரிகளுடன் மோதலைத் தவிர்ப்பது, உங்கள் வளர்ச்சிக்கு உதவும். சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் நன்மை தரும். உங்கள் ஆக்கபூர்வமான அணுகுமுறை, முக்கியப் பணிகளை நிறைவேற்றுவதில் உதவிகரமாக இருக்கும். உங்கள் பணிக்கான உரிய அங்கீகாரமும் இப்பொழுது உங்களுக்குக் கிடைக்கும். 


விருச்சிகம் ராசி -​​ ஆரோக்கியம்

உங்கள் மனதில் தோன்றும் இனம் தெரியாத பய உணர்வு, மன அழுத்தத்தை அளிக்கக் கூடும். இதனால் நீங்கள் அதிக உணர்ச்சி வசப்படவும் வாய்ப்புள்ளது. இரத்த அழுத்தத்திலும் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். முறையான உணவு மற்றும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம், உடல்நிலையை நீங்கள் நன்கு பராமரிக்க முடியும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை 

 

விருச்சிகம் ராசி -​​ மாணவர்கள்

உங்கள் திறமை, இப்பொழுது கல்வியில் முன்னேற உதவிகரமாக இருக்கும். உங்கள் முற்போக்கான சிந்தனை, பாடங்களை வெற்றிகரமாகப் படித்து முடிக்கவும் துணைபுரியும். எதிர்காலம் தொடர்பான முக்கியமான முடிவுகளை எடுக்க இது மிகவும் ஏற்ற நேரம் ஆகும். எனினும், உரிய அங்கீகாரம் பெற, நீங்கள் அதிகம் போராட வேண்டி இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் போல, உங்கள் நலனை விரும்புவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நன்மை தரும்.  

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை 


சுப தினங்கள்: 2,3,5,6,7,10,11,12,13,15,17,18,20,21,22,23,28
அசுப தினங்கள்: 1,4,8,9,14,16,19,24,25,26,27,29,30,31


banner

Leave a Reply