Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

August Monthly Capricorn Rasi Palangal 2019 Tamil

July 29, 2019 | Total Views : 869
Zoom In Zoom Out Print

மகரம் ராசி -​​ பொதுப்பலன்கள்

மகர ராசி அன்பர்களே! நீங்கள் தொழிலில் ஊக்கத்துடன் செயல்படும் மாதம் இது. பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், இது மிகவும் ஏற்ற நேரமாகும். வேலையில் புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரக்கூடும். உங்கள் உரையாடல் மற்றும் எழுத்தாற்றல் சிறந்து விளங்கும். இது, நீங்கள் பிரச்சினைகளை எளிதில் சமாளிக்க உதவும். உங்கள் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களை வெல்லவும் துணை புரியும். அதிர்ஷ்டமும் உங்களுக்கு ஓரளவு கை குடுக்கும். இந்த மாதம் நீங்கள் பெறும் அனுபவங்கள் யாவும், உங்கள் வளர்ச்சிக்கு உதவுவதாகவே அமையும்.   

மகரம் ராசி -​​ காதல் / திருமணம்

காதல் துணையுடனான உறவு இனிக்கும். சிலருக்கு புதிய காதல் மலரும் வாய்ப்பும் உள்ளது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் கௌரவமும், மதிப்பும் சிறந்து விளங்கும். உங்களில் சிலர் விடுமுறைக்கு வெளியிடங்களுக்கும் செல்லக்கூடும். உறவினர்களையும் நீங்கள் திருப்திப் படுத்துவீர்கள். எனினும், பிறருக்கு உறுதி மொழி அளிப்பதில் கவனமாக இருக்கவும். இது தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்.

 திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன்  பூஜை


மகரம் ராசி -​​ நிதி 

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இது உங்களுக்குச் சாதகமான மாதம் ஆகும். தாராளமான பணப்புழக்கம் காணப்படும். பல வகையிலும் வருமானம் வந்து சேரும். இப்பொழுது நீங்கள் முதலீடுகளும் செய்ய முடியும். சொத்துக்களை வாங்கும் முயற்சியிலும் இறங்குவீர்கள். எனினும், ஆபத்தான முதலீடுகளைச் செய்ய வேண்டாம். ஊக வணிகம், சூதாட்டம் போன்றவையும் இழப்பை ஏற்படுத்தக்கூடும். உங்கள் செலவுகளையும் நீங்கள் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது நல்லது.  

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: குரு பூஜை  
 

 

மகரம் ராசி -​​ வேலை 

பணியில் சில தடைகள் ஏற்படலாம். வேலை தொடர்பான சில பிரச்சினைகளும் எழலாம். பொதுவாக, அலுவலக சூழ்நிலையும் சாதகமாக இருக்காது. கிடைக்கும் பலன்களும் சாதாரணமாகவே இருக்கும். இதனால் உங்களிடம் மனத்தளர்ச்சியும் தோன்றலாம். பிறருடன் மிக நெருக்கமாகப் பழகுவதையும், சக ஊழியர்களுடன் வாக்குவாதம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.  

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: அங்காரக பூஜை  


மகரம் ராசி -​​ தொழில்

இந்த மாதம், மகர ராசி அன்பர்களின் தொழில் சிறப்பாக நடக்கும். பணியிடத்தில் நன்மதிப்பும் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு, நல்ல, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும். தொழில் வளர்ச்சியும் உங்களுக்குத் திருப்தி தரும். 


மகரம் ராசி -​​ தொழில் வல்லுனர் 

தொழில் வல்லுனர்கள் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணியிடத்தில் நீங்கள் சில புதிய யுக்திகளைப் புகுத்தி, மாற்றத்தைக் கொண்டு வருவீர்கள். இதனால் ஏற்படும் வளர்ச்சி, உங்களுக்குத் திருப்தி தரும். உங்களிடம் வந்து சேரும் அதிகப்படியான வேலையை, உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் ஒப்படைப்பது, பயன் தருவதாக அமையும்.

 
மகரம் ராசி -​​ ஆரோக்கியம்

உடல்நிலையில் ஏற்படும் சில சீர்கேடுகள், உங்களுக்குக் கவலை தரலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகளும் தோன்றலாம். இவற்றை நீங்கள் திறமையாகச் சமாளிப்பது அவசியம். உங்களைச் சுற்றி நிலவும் சூழ்நிலையும், உங்களை அமைதியற்றவராக ஆக்கலாம். எச்சரிக்கையாக இருக்கவும்.  

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை 


மகரம் ராசி -​​ மாணவர்கள்

மாணவர்களுக்கு இது சாதாரண மாதமாகவே இருக்கும். பாடங்களை படித்து முடிப்பதில் பதட்டம் நிலவக்கூடும். உங்களில் சிலரது கர்வமான நடத்தை, சில எதிர்பாராத பிரச்சினைகளையும் உருவாக்கக்கூடும். இப்பொழுது உங்கள் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருப்பது நல்லது. எனினும், உங்கள் தன்னம்பிக்கையும், பிறருடன் இனிமையாகப் பழகும் இயல்பும் சாதகம் தரும்.

 
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை

சுப தினங்கள்: 2,5,6,7,10,11,12,13,15,17,18,20,21,22,23,26,27,28
அசுப தினங்கள்: 1,3,4,8,9,14,16,19,24,25,29,30,31

banner

Leave a Reply

Submit Comment