தனுசு ராசி - பொதுப்பலன்கள்
தனுசு ராசி அன்பர்கள், தாங்கள் முன்னேறுவதற்கு, அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடின உழைப்பையே நம்ப வேண்டிய மாதம் இது. பணியிடத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். பல்வேறு வகையான நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பலதுறைகளிலும் உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதிலும், அதிக லாபங்களைப் பெறுவதிலும் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். பெற விரும்பும் யாவும், இப்பொழுது உங்களுக்குத் தாமதமாகக் கிடைக்கக் கூடும். பயணங்கள், குடும்ப உறுப்பினர்களின் மருத்துவம் போன்றவை காரணமாக, செலவுகள் அதிகரிக்கும். எந்த நிலையிலும் தன்னம்பிக்கையைத் தளர விடாதீர்கள். உங்கள் புன்னகையுடன் கூடிய முகமும், வசீகரமான தோற்றமும் மற்றவர்களிடம் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். உங்கள் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். இந்த நேரத்தில், தேவையற்ற பல விஷயங்களையும் மனதில் போட்டுக் குழப்பி, உடலுக்கும், மனதிற்கும் பதட்டம் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். இப்பொழுது அதிகரிக்கும் உங்கள் ஆன்மீக நாட்டமும், ஆர்வமும், இது தொடர்பாக உங்களுக்குத் துணை புரியும்.
தனுசு ராசி - காதல் / திருமணம்
உறவுகள், பொதுவாக, உங்களுக்கு மகிழ்ச்சி தராமல் போகலாம். எனவே அவற்றை நீங்கள் கவனமாகக் கையாள வேண்டும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உறவுப் பிணைப்பு வலுப்படும். பிரச்சினைகளைத் திறந்த மனதுடன் அணுகுவதும், விமரிசனங்களைத் தவிர்ப்பதும், நிலைமையை சீராக்க உதவும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: அங்காரக பூஜை
தனுசு ராசி - நிதி
பொருளாதார நிலைமை திருப்தி தராது. எதிர்பாராத செலவுகள் கவலையை அளிக்கும். மருத்துவத்துக்காகவும், பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே, இந்த மாதம் பணப்பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது. பண, பொருள் இழப்பும் ஏற்படலாம் அல்லது பிறரால் நீங்கள் ஏமாற்றப்படலாம். எச்சரிக்கையாக இருக்கவும். எந்தக் காரணத்தைக் கொண்டும், பணத்தை கடனாகக் கொடுக்க வேண்டாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: சனி பூஜை
தனுசு ராசி - வேலை
பணியில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சக பணியாளர்களுடன் சிறு சச்சரவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மறைமுக எதிரிகளும் உங்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். வேலையில் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்களுடன் சுமூக உறவைப் பராமரிப்பது நல்லது. யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். மக்கள் உங்களை தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளதால், உங்கள் பேச்சு, உரையாடல் போன்றவற்றில் கவனமாக இருக்கவும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜை
தனுசு ராசி - தொழில்
தொழில் மந்தமாகவே செல்லும். வியாபார இலக்குகளை எட்டுவதில் சிக்கல்கள் எழக்கூடும். ஆனால், இது போன்ற எதிர்மறை விளைவுகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள். வரும் காலங்களில் உங்களுக்கு அனுகூலமான நிலை ஏற்படும். எனவே தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
தனுசு ராசி - தொழில் வல்லுனர்
இந்த மாதம் உங்கள் முயற்சிகள், உரிய பலன்களை அளிக்காது எனலாம். இதனால் ஏமாற்றங்களும் ஏற்படும். இந்த நேரத்தில் நீங்கள் கடினமாகப் பாடுபட வேண்டியது அவசியம். அலுவலகத்திலும், சில அசௌகரியங்களும், வருத்தங்களும் ஏற்படலாம். எனவே பொறுமையுடன் அமைதி காப்பது நல்லது.
தனுசு ராசி - ஆரோக்கியம்
உடல்நிலையில் கவனம் தேவைப்படலாம். சிறு ஆரோக்கியப் பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த மாதம் நீங்கள் மந்தமாகவும், அமைதியின்றியும் இருக்க நேரிடும். தனிமையில் இருப்பதையும், அதிக பதட்டத்திற்கு ஆளாவதையும் தவிர்க்க முயலுங்கள். இதேபோல, தேவையற்ற கவலைகளையும் தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
தனுசு ராசி - மாணவர்கள்
தனுசு ராசி மாணவர்களுக்கு, இது நல்ல மாதமாக இருக்கும். இப்பொழுது உங்கள் நேர்மையான கடின முயற்சி, நல்ல பலன் தரும். அதிக நேரம் ஒதுக்கிப் படிப்பதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்திலும், பொது விவகாரங்களிலும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 3,5,6,7,10,11,12,13,15,17,18,20,21,22,23,26
அசுப தினங்கள்: 1,2,4,8,9,14,16,19,24,25,27,28,29,30,31

Leave a Reply