கும்பம் ராசி - பொதுப்பலன்கள்
கும்ப ராசி அன்பர்களுக்கு, இது பயன் தரும் மாதமாக அமையும். அலுவலகத்தில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்களுக்கான லட்சியங்களை உருவாக்கிக் கொண்டு, அவற்றை அடையக் கடினமாக உழைத்து வெற்றியடைவீர்கள். உங்கள் தளராத முயற்சியும், அர்ப்பணிப்பும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுத் தரும். வருமானமும் கணிசமாக உயரும். உங்கள் நன்னடத்தையும், பெருந்தன்மையும் மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத் தரும். எனினும் குறித்த நேரத்திற்குள் பணிகளை முடிப்பது நன்மை தரும். நீண்ட கால முதலீடுகளில் பணம் சேமிப்பதும் நலம் பயக்கும். சில நேரங்களில் நீங்கள் எளிதில் கோபம் அடையக்கூடும். அதனால் வெளியிடங்களில் உங்கள் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்திற்காக அதிக நேரம் ஒதுக்குவதன் மூலம், அங்கு மகிழ்ச்சி காணமுடியும். உங்கள் வசீகரமான நடை, உடை, பாவனை உங்களுக்குப் புகழ் சேர்க்கும். இந்த மாதம், பொதுவாக, உங்கள் நோக்கங்கள் நிறைவேறும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
கும்பம் ராசி - காதல் / திருமணம்
குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உரிய முக்கியத்துவமும், மதிப்பும் அளிப்பீர்கள். இதனால் உங்கள் இருவரிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களுடனும் நல்லுறவு நிலவும். தனிப்பட்ட வாழ்க்கை இன்பமாகக் கழியும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: புதன் பூஜை
கும்பம் ராசி - நிதி
உங்கள் பொருளாதார நிலை கணிசமாக உயரும் எனலாம். பழைய சொத்து அல்லது வாகனத்தை விற்று, அதில் வரும் பணத்தைக் கொண்டு, புதிய வீடு அல்லது வாகனம் வாங்கவோ, மாற்றி அமைத்துக் கொள்ளவோ வாய்ப்புள்ளது. ஊக முதலீடுகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினருக்கான மருத்துவ செலவு ஏற்படக்கூடும். இவ்வாறு இந்த மாதம் உங்கள் நிதிநிலை, சிறப்பாகவே காணப்படுகிறது.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: கேது பூஜை
கும்பம் ராசி - வேலை
பணி நிமித்தமாகப் பயணங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சிலருக்குப் புதிய வேலைகளும் கிடைக்கக்கூடும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை
கும்பம் ராசி - தொழில்
தொழில் ஆக்கப்பூர்வமாக நடைபெறும். நீங்கள் விரும்பும் கூட்டாளியுடன் வியாபார நடவடிக்கைகளில் இறங்க, இது உகந்த நேரம் ஆகும். பொருட்களின் உற்பத்தியையும், அவற்றின் விற்பனையையும் ஒருங்கிணைப்பதன் மூலம், நீங்கள் எதிர்பார்த்த பலனை அடைய முடியும். நீங்கள் தனித்தமையுடன் செயல்பட்டு, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கும்பம் ராசி - தொழில் வல்லுனர்
கும்ப ராசி தொழில் வல்லுனர்களுக்கும், இந்த மாதம் சிறப்பாகவே இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெற முடியும். அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். செல்வாக்கு மிக்க நபர்களுடன் நல்ல உறவு நிலவும். நன்மைகள் சற்று அதிகமாகவே கிடைக்கும்.
கும்பம் ராசி - ஆரோக்கியம்
உடல்நிலை சீராக இருக்கும். ஆனால், பணிச்சுமை காரணமாக மன உளைச்சல் அல்லது பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. சூழ்நிலையை சமாளிக்க தியானம் மேற்கொள்வது நல்லது. தள்ளிப் போடாமல், சரியான நேரத்தில் உணவை உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
கும்பம் ராசி - மாணவர்கள்
கல்வி சிறந்து விளங்கும். மாணவர்களிடம் பெரும் ஆற்றலும், வேகமும் காணப்படும். உங்கள் துணிச்சலும், அறிவுத்திறனும் மேம்படும். இவை, நீங்கள் பாடங்களைத் திறமையாகவும், நேரப்படியும் படித்து முடிக்க உதவும். இந்த நேரத்தில், உங்களுக்கென குறிக்கோள்களை உருவாக்கிக் கொண்டு, உறுதியுடன் செயல்பட்டு அவற்றை எட்டுவீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 2,3,7,10,11,12,13,15,17,18,20,21,22,23,26,27,28
அசுப தினங்கள்: 1,4,5,6,8,9,14,16,19,24,25,29,30,31

Leave a Reply