Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மேஷம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 | August Matha Mesham Rasi Palan 2021

July 6, 2021 | Total Views : 685
Zoom In Zoom Out Print

மேஷம் ஆகஸ்ட் 2021 பொதுப்பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் பணியில் இருப்பவர் என்றால் இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும் என்றாலும் மலை போல பணிகள் வந்து குவியும். அதிக பணிகள் காரணமாக சோர்வும் களைப்பும் ஏற்படும். அதன் காரணமாக நீங்கள் நிம்மதியான தூக்கத்தைக் கூட இழக்க நேரும். நீங்கள் தொழில் செய்பவர் என்றால் இந்த மாதம் உங்களுக்குத் தொழில் சிறப்பாக நடக்கும் என்றாலும் அதிக அளவில் போட்டியாளர்களை சந்திக்க நேரும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்ப்பதும் தள்ளிப்போடுவதும் உங்களுக்கு நன்மை பயக்கும். நீங்கள் கூட்டுத் தொழில் செய்கிறீர்கள் என்றால் இந்த மாதம் நீங்கள் பல நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

இளம் வயது மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் காதல் வயப்படக் கூடும். அதன் மூலம் மனதில் இன்பம் பொங்கும்.  நீங்கள் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். நீங்கள் திருமணம் ஆனவர் என்றால் உங்களுக்கு இடையே அன்பும் புரிதல் உணர்வும் அதிகரிக்கும். தாம்பத்தியம் சிறக்கும். அன்னியோன்யம் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமையும் நெருக்கமும் அதிகரிக்கும். 

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை

நிதிநிலை:

நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் முன்னேற்றம் கண்டு அதன் மூலம் உங்கள் வருமானம் பெருகும். தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் சிறப்பாகச் செயலாற்றி அதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் பண வரவை இந்த மாதம் நீங்கள் எதிர்பார்க்கலாம்.  

நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை

உத்தியோகம்:

பணியில் இருக்கும் மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வைப் பெறுவார்கள். அதே சமயத்தில் நீங்கள் அதிக பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். பணிகள் மலை போல வந்து குவியும். அந்தப் பணிகளை முடிப்பதற்குள் உங்களுக்குச் சோர்வும் களைப்பும் ஏற்படும். நீங்கள் தகவல் தொடர்பு மற்றும் அச்சுத் துறையில் பணிபுரிபவர் என்றால் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். நீங்கள் வெளி நாட்டு வேலைக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால் உங்கள் எண்ணம் கை கூடும். 

உத்தியோக உயர்வுக்கு முருகன் பூஜை

சுயதொழில்:

நீங்கள் சொந்தமாகத் தொழில் அல்லது வியாபாரம் செய்கிறீர்கள் என்றால் உங்கள் தொழில் மூலம் கிட்டும் வருமானம் சுமாராக இருக்கும். உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும் என்றாலும் தொழிலில் போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். என்றாலும் நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள்.  இந்த மாதம் புதிய தொழில் நடத்துவது அல்லது புதிய தொழிலுக்கு முதலீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும். 

சுய தொழிலில் லாபம் கிடைக்க அஷ்ட லக்ஷ்மி பூஜை

தொழில் சார்பு வல்லுநர்கள்:

மேஷ ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் தொழில் சிறப்பாக நடக்கும். அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும்.  நீங்கள் ஆர்கிடெக்சர் துறையைச் சேர்ந்தவர் என்றால் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.  நீங்கள் வெளிநாட்டு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்கள் எண்ணம் கைகூடும். நடிப்புத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

ஆரோக்கியம்:

அதிக பணிகள் காரணமாக மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். இதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தியானம் மற்றும் நடைப்பயிற்சி நன்மை பயக்கும். வயதான பெண்களுக்கு மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். மருத்துவ ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது  நன்மை பயக்கும்.

மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை

கல்வி:

பள்ளியில் படிக்கும் மேஷ ராசி  மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். நன்றாகப் படித்துத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் சிறிது கவனச் சிதறல்கள் ஏற்படலாம். ஆராய்ச்சி கல்வியில் படிக்கும் மாணவர்கள் தங்களது ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள்.

மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை

சுப நாட்கள்: 

10, 14, 16, 21, 23, 24, 28, 30, 31

அசுப நாட்கள்:

11, 12, 26, 27

banner

Leave a Reply

Submit Comment