ரிஷபம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 | August Matha Rishabam Rasi Palan 2021

ரிஷபம் ஆகஸ்ட் 2021 பொதுப்பலன்கள்:
ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் வருமானம் அதிகரிக்கும். செலவுகள் குறையும். சேமிப்பு உயரும். நீங்கள் கடந்த காலத்தில் மேற்கொண்ட முதலீடுகளின் மூலம் சிறந்த லாபம் பெறுவீர்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இந்த மாதம் திருமணம் நிச்சயம் ஆகக் காண்பார்கள். குடும்பத்தின் மூத்த வயதினரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் குடும்பத்தில் குதூகலமும் அமைதியும் காணப்படும். நீங்கள் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர் என்றால் இந்த மாதம் உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் தடைகளைத் தாண்டி சிறப்பாகப் பணியாற்றி தங்கள் இலக்குகளை எட்டுவார்கள். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
ரிஷப ராசி இளம் வயதினர் தங்கள் மனதில் எழும் காதலை வெளிப்படுத்த அனுகூலமான தருணங்களை சந்திப்பார்கள். திருமணமான தம்பதியருக்கு இடையே சுமுகமான உறவு காணப்படும். தாய் மற்றும் தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.
காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை
நிதிநிலை:
உங்கள் நிதிநிலையை மேம்படுத்திக் கொள்வதற்கு இந்த மாதம் நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளின் மூலம் ஆடம்பரம் மற்றும் வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உங்கள் மனதில் பரோபகார எண்ணம் வளரும். எனவே நீங்கள் பிறருக்கு உதவி செய்வீர்கள். பிறர் மூலம் உதவியும் பெறுவீர்கள். ஆன்மிகம் மற்றும் தரும காரியங்களுக்கு பணம் செலவு செய்வீர்கள். உங்களது இந்தச் செயல் குடும்பத்தாருக்கு பெருமை அளிக்கும்.
கடன் பிரச்சனை தீர ருண விமோச்சன பூஜை
உத்தியோகம்:
உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். உங்கள் முயற்சி மூலம் முன்னேற்றமும் பாராட்டும் பெறுவீர்கள். நீங்கள் திறம்பட பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுக்கு அலுவலகத்தில் அதிக சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள். அதன் மூலம் உங்கள் பணிகள் எளிதாகும்.
உத்தியோக மேன்மைக்கு துர்கா பூஜை
சுயதொழில்:
நீங்கள் சுய தொழில் செய்பவர் என்றால் இந்த மாதம் புதிய தொழில் தொடங்குவீர்கள். அதில் உங்கள் கவனம் முழுவதையும் செலுத்துவீர்கள். பல புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரும். நீங்கள் சிறப்புடன் செயலாற்றி வாடிக்கையாளர்களின் ஆதரவு மற்றும் பாராட்டைப் பெறுவீர்கள்.
சுய தொழில் சிறக்க சனி பூஜை
தொழில் சார்பு வல்லுநர்கள்:
இந்த மாதம் நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். என்றாலும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதைக் கருத்தில் கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். எனவே அதீத தன்னம்பிக்கை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பணிகளை எளிதாக்கிக் கொள்ளும் வகையில் நீங்கள் சில உபகரணங்களை வாங்குவீர்கள்.
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்காது என்றாலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மனது உற்சாகமாக இருக்கும் காரணத்தால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை
கல்வி:
இந்த மாதம் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். பதட்டமற்ற நிலை காணப்படும். விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறையில் இருக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை பெறுவார்கள். மாணவர்கள் கவனம் சிதறாமல் கல்வி கற்பார்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் ஊக்கம் உங்களை மேம்படுத்தும். முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள்.
மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணேஷ பூஜை
சுப நாட்கள்:
10, 14, 16, 21, 23, 24, 30, 31
அசுப நாட்கள்:
1, 2, 11, 12, 26, 27, 28, 29
