Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மேஷம் ஏப்ரல் மாத ராசி பலன் 2020 | April Month Rasi Palan 2020 Mesham

March 10, 2020 | Total Views : 707
Zoom In Zoom Out Print

மேஷ ராசி பொதுபலன்கள் :

இந்த மாதம் தன்னம்பிக்கையும், தைரியமும் நிறைந்து காணப்படும். குடும்பத்தில் நல்ல சந்தோஷம் நிலவும். பணவரவு மிகச்சிறப்பாக காணப்படும். சகோதரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் சிறிது மனக்குழப்பங்கள் ஏற்ப்படலாம். தாய் உங்களிடம் பாசமாக இருப்பர்கள். வேலை உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. பெண்களால் லாபம் உண்டாகும். தொழில் துறையில் தடங்கல்களுக்கு பின் முன்னேற்றம் ஏற்படும். பக்திமார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். கோவில் தரிசனத்திற்காக வெளியூர் செல்ல நேரிடும். ஜீவனம் நன்றாக இருக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் கைகூடும். செய்தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

மேஷ ராசி காதல் மற்றும் திருமணம் :

காதல் இந்த மாதம் நன்றாக இருக்கும். திருமண விஷயங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் அன்பும், பாசமும் நிறைந்து காணப்படும். மேலும் குடும்பத்துடன் விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வீர்கள். தம்பதிகள் இணக்கமான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மேஷ ராசி நிதி :

இந்த மாதம் நிதி நிலைமையில் நல்லமுன்னேற்றம் காணப்படும். வண்டி, வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்கள் போன்ற தொழில் மூலம் அதிக லாபம் பெறலாம். உங்கள் பொருளாதார தேவைகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும்.

மேஷ ராசி வேலை :

இந்த மாதத்தில் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உங்கள் பணி அமையும். வேலை முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உங்கள் நேர்மையும், அர்ப்பணிப்பும் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். பணியிடத்தில் உங்கள் மதிப்பை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.

மேஷ ராசி தொழில் :

இந்த மாதம் தொழில் சிறப்பாக நடைபெறும். ஆனால் இடை இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து விலகும். சில நேரங்களில் நீங்களே உங்களுக்கு கஷ்டத்தை வரவழைத்து கொள்வீர்கள். அதை தவிர்க்க வயதானவர்களுக்கு சனி கிழமைகளில் அன்னதானம் கொடுப்பது உங்கள் நிதி நிலைமை மேன்மையாக்கும்.

மேஷ ராசி தொழில் வல்லுனர்களுக்கு :

இது உங்களுக்கு ஒரு முன்னேற்றம் தரும் காலமாகும். உங்கள் திறமையால் அனைத்துத் தொழில் ரீதியான பணிகளையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் கவனமும், அர்ப்பணிப்பு உணர்வும் பாராட்டுகளைப் பெற்றுத்தரும். ஆனால், கூடுதல் பொறுப்புகளை ஏற்காதீர்கள். உங்களால் அவற்றை முடிக்க முடியாமல் போகலாம்.

மேஷ ராசி ஆரோக்கியம் :

நீங்கள் ஏற்கனவே உடல் பாதிப்பில் இருந்தால் இந்த மாதம் உடல் நலம் பெறுவீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து விலகலாம். பழங்கள், பச்சைக் காய்கறிகள் மற்றும் உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற சத்தான உணவுகள் போன்றவை, உங்களுக்கு நல்ல உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

மேஷ ராசி மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் தேவை. படிப்பதை சிலர் மறந்து விடுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்கள் படிப்பு சீரான போக்கில் இருக்கும். நண்பர்களுடன் நட்பு ஏற்படக்கூடிய காலம். உங்கள் நேர்மறையான அணுகுமுறை நட்பு வட்டத்திலும் குடும்பத்திலும் பிரச்சினைகளை தவிர்க்க உதவியாக இருக்கும். உங்களின் ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம் தேடலுக்கு எங்களை அணுகவும்.
 

சுப நாட்கள் : 5,6,13,14,15,18,19,20

அசுப நாட்கள் : 7,8,11,12,21,22

banner

Leave a Reply

Submit Comment