Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

கும்பம் ஏப்ரல் மாத ராசி பலன் 2020 | April Month Rasi Palan 2020 Kumbam

March 10, 2020 | Total Views : 985
Zoom In Zoom Out Print

கும்ப ராசி பொதுப்பலன்கள் :

இந்த மாதம் சிறுது கடினமான மாதமாகும். தொழில் துறையில் கவனம் தேவை. நிதி மற்றும் தொழில்துறை தொடர்பான நடவடிக்கைகள் கும்ப ராசிக்காரர்களுக்கு சுமாராகத்தான் இருக்கும். தொலை தூரங்களிலிருந்து உங்களுக்கு வரவேற்பு அழைப்புகள் வரும். இதனால் நீண்ட பயணங்களை நீங்கள் மேற்கொள்ளுவீர்கள். நீங்கள் புனித யாத்திரை செல்ல நேரிடலாம். உங்கள் வருவாய், அதிக செலவுகள் காரணமாக பாதிப்பு ஏற்படும். பணம் போட்டு புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். பிரயாணங்களில் அதிக கவனம் தேவை. உங்களுடைய கவனமற்ற எண்ணங்கள் காரணமாக, சில சமயங்களில் உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் ஏற்படாமல் போகலாம். கவனமாக இருங்கள்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

கும்ப ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

காதல் வாழ்க்கை இந்த மாதம் சுமாராக இருக்கும். இந்த மாதம் துர்க்கை அம்மனை வெள்ளிகிழமைகளில் வழிபடுவது நல்லது. உங்கள் காதல் துணையிடம் நீங்கள் வைக்கும் திருமணக் கோரிக்கை, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப்படும். குடும்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நீங்கள் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

கும்ப ராசி நிதி :

இந்த மாதம் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். உங்கள் நிதி நிலைமை இந்த மாதம் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். உங்களுடைய வருமானம் உங்கள் அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இருக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு மிகவும் பயனுள்ள மாதமாக இருக்கும்.

கும்ப ராசி வேலை :

இந்த காலகட்டத்தில், பல்‌வேறு காரணங்களால் எழும் சிக்கல்களைத் தவிர்க்க, நீங்கள் தாற்காலிகமாக, பொறுமையாக இருப்பது நல்லது. உங்கள் வேலையில் நிலையான முன்னேற்றம் இருக்காது. பணியிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கீழ் பணிபுரியும் வேலையாட்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்.

கும்ப ராசி தொழில் :

உங்கள் தொழில் வளர்ச்சியை உங்கள் செயல்திறனால் பூர்த்தி செய்து கொள்வீர்கள். மேல் அதிகாரிகளுடன் நட்போடு பழகுங்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்தக் காலகட்டத்தில் உங்கள் செயல்திறன் அதிகமாகும். தொழில் வளர்ச்சியில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்துவீர்கள்.

கும்ப ராசி தொழில் வல்லுநர் :

வேலையில் இப்பொழுது கவனமாக இருக்ககூடிய நேரம் ஆகும். உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு, உங்களுக்குப் புதிய பொறுப்புகளைக் கொண்டு வந்து சேர்க்கும். பாராட்டுகளுடன் கூட, லாபகரமான பதவி உயர்வும் நீங்கள் பெறலாம். உங்கள் பங்களிப்பு, நீங்கள் ஏற்கும் பணிகளுக்கு நல்ல உறுதுணையாக அமையும்.

கும்ப ராசி ஆரோக்கியம் :

இந்த மாதம் உடல் நலன் சுமாராக இருக்கும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்குங்கள். அன்றாடம் தியானம் செய்யத் தவறாதீர்கள்.

கும்ப ராசி மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களுடன் நல்லுறவை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் படிப்பு சீரான போக்கில் இருக்கும். உங்கள் உடல் நிலை உங்கள் படிப்பை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.உங்களின் ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம் தேடலுக்கு எங்களை அணுகவும்.

சுப நாட்கள் : 1,2,11,12,9,10,13,14,15,28,29

அசுப நாட்கள் : 3,4,7,8,16,17

banner

Leave a Reply

Submit Comment