AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

கடகம் ராசி பலன் ஏப்ரல் 2021 | April Month Kadagam Rasi Palan 2021

dateMarch 4, 2021

கடகம் ராசி பலன் ஏப்ரல் 2021 பொதுப்பலன்:

இந்த மாதம் கடக ராசியினருக்கு அனுகூலமான  பலன்கள் கிடைக்கும்  என்றாலும் வீணான  வாக்குவாதங்கள் அல்லது சண்டைகளில் நீங்கள் ஈடுபடுவது கூடாது. இந்த மாதம் சில அலைச்சல்கள் இருக்கும். பயணத்தின் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். , குறிப்பாக நீண்ட நெடுந்தூர பயணத்தின் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தந்தை மற்றும் தந்தை போன்ற நபர்களுடன் சுமூக உறவு பாதிப்படையும். அலுவலகத்திலும் உங்கள் உயர் அதிகாரிகளுடன் கருத்து மோதல் ஏற்படாத வகையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மிகம் , மறை பொருள் அல்லது ஆராய்ச்சி  மற்றும் ஆய்வு சம்பந்தப்பட்ட ஜோதிடம் உள்ளிட்ட கலைகளில் உங்கள் ஆர்வம் கூடும்.  உங்கள்  வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவில் சண்டை சச்சரவுகள் காரணமாக சில பிரச்சினைகள் எழும். உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். நீங்கள் வாழ்வில் உன்னதமான முன்னேறமும் வளர்ச்சியும் காண்பீர்கள்.  தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு :

திருமண வயதில் இருக்கும் கடக ராசி அன்பர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். கணவன் மனைவிக்கு  இடையே குடும்ப விவகாரங்கள்  சம்பந்தமான பிரச்சினைகள் எழும் வாய்ப்பு உள்ளது. உங்கள் மனதில் இருக்கும் பாரங்களை இறக்கிவைக்க நீங்கள் நண்பரகளை நாடிச் செல்வீர்கள். உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நண்பர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவை நல்லிணக்க உறவாக மாற்ற நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். 

திருமண உறவில் நல்லிணக்கம் பெருக : குரு பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் நிதிநிலை சீராக இருக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும் நீங்கள் உங்கள் பொருளாதாரத்தில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். இது உங்கள் நிதி விஷயங்களில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மூலமாக வருமானம் உயரும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் போதுமான அளவு பணம் கையில் புழங்கும். உங்கள் முதலீடுகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்ளும் முன் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.  வெளிநாட்டு தொழில் தொடர்பு  மூலம் நீங்கள் அதிக அளவில் லாபம் ஈட்டுவீர்கள். இந்த மாதம் நீங்கள் சேமிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். 

நிதிநிலையில் நீங்கள் மேன்மை பெற : லக்ஷ்மி குபேர பூஜை

வேலை :

உத்தியோகத்தில்  இருக்கும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் சுபம் நாற்றும் அசுபம் என  இரண்டும் கலந்த பலன்கள் காணப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்கள் பணிக்கான அங்கீகாரம் பெறுவீர்கள். புதிய நண்பர்கள்  கிடைப்பதன் மூலம் உங்கள் சமூக வட்டம் விரிவடையும். வங்கி மற்றும் அரசுத் துறையில் பணிபுரிபவர்களுடன் உங்களுக்கு தொடர்பு ஏற்படும். வேலையற்றவர்களுக்கு  இந்த மாதம் சிறந்த வேலை கிடைக்கும். வெளி நாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வெளி நாட்டு வேலை வாய்ப்பு கிட்டும். உங்கள் கோபம் காரணமாக உங்களுக்கு கிடைக்கும் சிறந்த வாய்ப்புகளை நீங்கள் இழக்க நேரலாம் என்பதால் கவனம் தேவை. பணி நிமித்தமான சில அலைச்சல்கள் இருக்கும் என்றாலும் அவற்றின் மூலம் நீங்கள் நன்மையான பலன்களைப் பெறுவீர்கள்.

தொழில் :

தொழில் செய்பவர்கள், குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள்.  தொழிலில் ஒப்பந்தங்கள் சம்பந்தமான விஷயங்களில் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். ஒன்றிற்கு இரண்டு முறை படித்து சரிபார்த்து பின்னர் கையொப்பம் இட வேண்டும். வெளிநாட்டு வியாபாரங்கள்  மூலம் லாபம் காண்பீர்கள். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.  வெற்றியும் காண்பீர்கள். பதிய முதலீடுகளை மேற்கொள்ளும் போது ஆபத்தான தொழில் முதலீடுகளை மேற்கொள்ளதீர்கள்.  வெளிநாட்டில் உங்கள் தொழிலுக்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். 

தொழில் வல்லுனர்கள் :

இந்த மாதம் தொழிலில் நீங்கள் பதற்றம் கொள்ளும் வகையில் சில விஷயங்கள் நடக்கும். இது உங்கள் மனதை பாதிக்கும்.  உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதை கருத்தில் கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டால்  உங்கள் இலக்குகளை நீங்கள் எட்ட முடியும். 

வேலை மற்றும் தொழிலில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை 

ஆரோக்கியம் :

உங்கள் தேக ஆரோக்கியம் இந்த மாதம் சுமாராக இருக்கும்.  என்றாலும் நீங்கள் கவலை கொள்ளும் அளவில் பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் சோம்பலை ஒழித்து சுறுசுறுப்புடன் செயல்பட முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :  சூரியன் பூஜை 

மாணவர்கள் :

கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் சில தடைகளை சந்திப்பார்கள். கடின உழைப்பும் விடா முயற்சியும் மேற்கொள்வதன் மூலம் மாணவர்கள் வெற்றி காண்பார்கள். ஆராய்ச்சி படிப்பில் இருக்கும் மாணவர்கள் தங்கள் முயற்சிகளில்  வெற்றி காண்பார்கள். கலைத் துறை மற்றும் படைப்புத் துறையில் இருக்கும் மாணவர்கள் தங்களுக்கு சாதகமான பலன்களைப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சிறிது கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள்.  தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நீங்கள் வெற்றி காண இயலும்.  

கல்வியில் மேன்மை பெற :  குரு பூஜை

சுப நாட்கள் :   1, 2, 3, 9, 10, 14, 17, 18, 19, 20, 21, 22, 23, 29, 30, 31.
அசுப நாட்கள் :  4, 5, 6, 7, 8, 11, 12, 13, 15, 16, 24, 25, 26, 27, 28.


banner

Leave a Reply