மிதுனம் ராசி ஏப்ரல் 2021 பொதுப்பலன்:
மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு கலப்புப் பலன்களே இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் எந்தொவொரு காரியத்திலும் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் கிட்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் நீங்கள் ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். நீங்கள் கலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். உங்களின் தன்னலம் காரணமாக நீங்கள் மேற்கொள்ளும் பணிகளை செவ்வனே முடிக்க இயலாத நிலை இருக்கும். சில பணிகளை முடிக்க மறந்துவிடும் வாய்ப்பும் உள்ளது. கணவன் மனைவி சுமூக உறவில் சில பின்னடைவுகள் இருக்கும். குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். நீங்கள் உங்கள் பொறுப்புகளை சரிவர முடிக்க இந்த மாதம் கிரக நிலைகள் சாதகமாக உள்ளன என்ற காரணத்தினால் நீங்கள் பொறுமையுடன் செயல்பட்டு வெற்றியைக் காண இயலும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்
காதல் / குடும்ப உறவு :
காதல் வயப்பட்டிருக்கும் மிதுன ராசி அன்பர்கள் இந்த மாதம் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். திருமண வயதில் இருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும். இந்த மாதம் அவசரப்பட்டு துணை தேட வேண்டாம். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து உண்மையாகவும் அனுசரணையாகவும் நடந்து கொள்வார்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண :சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
பொருளாதார விஷயத்தில் இந்த மாதம் நீங்கள் எதிர்பார்க்காத திருப்பங்களை எதிர்கொள்வீர்கள். அது உங்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும். உங்கள் தந்தை வழி உறவின் மூலம் நீங்கள் திடீர் ஆதாயங்ளைப் பெறுவீர்கள். சில பொருளாதார பிரச்சினைகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பணம் சேமிப்பு விஷயத்தில் வீட்டில் இருக்கும் மூத்த நபர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் செல்வம் பெறுவீர்கள். என்றாலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆலயங்களுக்கு தொண்டு அல்லது நன்கொடை அளிப்பதன் மூலம் உங்கள் அதிர்ஷ்டம் மேலும் பெருகும்.
உங்கள் நிதிநிலை மேம்பட: குரு பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் பணியிடத்தில் சில எதிர்பாராத நிகழ்வுகளை சந்திப்பீர்கள். அவற்றுள் சில உங்களுக்கு சாதகமானதாக இருக்கலாம். சிலஉங்களுக்கு பாதகமானதாக இருக்கலாம். ஒரு சமயம் அதன் மூலம் நீங்கள் அதிர்ஷ்டம் பெறும் வாய்ப்பும் கிட்டும். நீங்கள் பணியிடத்தில் சில பிரச்சினைகளுக்கு தீர்வு கூறுவீர்கள். நீங்கள் தைரியத்துடனும் திறமையுடனும் செயல்பட்டு பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள் அதிக பணிகள் காரணமாக உங்களுக்கு மனப் பதட்டம் ஏற்படும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் கடின உழைபுற்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் உள்ளூரில் பணி புரிவதை விட வெளி இடம் அல்லது வெளி நாடு சென்று பணி புரிவதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உங்கள் வசதிகள் யாவும் பெருகும்.
தொழில் :
கூட்டுத் தொழில் செய்யும் மிதுன ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். நீங்கள் வெளிநாட்டு தொடர்புடைய தொழில் செய்பவர் என்றால் உங்கள் அணுகுமுறை மற்றும் கருத்துக்கள் அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். தொழில் சம்பந்தமாக சில அலைச்சல்கள் காணப்படும். பயணத்தின் போது நீங்கள் சில தடைகளை சந்திப்பீர்கள். என்றாலும் நல்ல மனிதர்களின் தொடர்புகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் எதிர்பாராத திசையில் இருந்து உங்களு தொழில் வாய்ப்புகள் வரும். என்றாலும் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.
தொழில் வல்லுனர்கள் :
தனது உள்ளுணர்வின் மூலம் பிறரின் உள்ளம் அறியும் திறன் உங்களிடம் இருக்கும் என்றாலும் உங்களின் இந்தக் குணமே உங்களுக்கு சாதகமான பலனை அளிக்கும் என்றாலும் இதன் மூலம் சில இடர்களையும் நீங்கள் சந்திக்க நேரும். அச்சுத் துறை, வணிகம், ஐடி போன்ற துறைகளில் இருந்தால் பணியில் பதட்டமான நிலை இருக்கும். பணிகள் மலை போல வந்து குவியும். எதிர்பாராத சில பணிகளை முடிக்க வேண்டி நீங்கள் வெளி நாடு செல்ல நேரலாம். எனவே உங்கள் கடமைகளை நீங்கள் கவனமாக செய்ய வேண்டும். உங்கள் மேலதிகார்கள் உங்கள் அறிவுத்திறனை பாராட்டுவார்கள். நீங்கள் சாதுரியமாக நடந்து கொண்டால் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.
உங்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : புதன் பூஜை
ஆரோக்கியம் :.
உங்கள் ஆரோக்கியத்தில் சீரான நிலை காணப்பட இந்த மாதம் வாய்ப்பில்லை. சிறிய அளவிலான உடல் உபாதைகள் உங்களை வருத்தினாலும் நீங்கள் சமாளித்து முன்னேறுவீர்கள். மருத்துவ சிகிச்சை மற்றும் அதற்கான செலவுகளை நீங்கள் மேற்கொள்ள நேரும். எனவே உங்கள் உணவு முறையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். யோகா மற்றும் தியானம் உங்கள் மனப் பதட்டத்தைப் போக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஆரோக்கியம் மேம்பட : ருத்ர பூஜை
மாணவர்கள் :
மாணவர்கள் சென்ற மாதத்தை விட இந்த மாதம் கவனமுடன் செயல்படுவார்கள்.என்றாலும் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். சோம்பலும் பதட்டமும் அவர்களை ஆட்கொள்ளும். என்றாலும் புத்தி கூர்மையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் கவனச் சிதறலுக்கு ஆளாவார்கள். என்றாலும் கவனமுடன் படித்தால் எளிதில் வெற்றி காண்பார்கள். கல்லூரி முடித்த மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வார்கள். கல்விக்கான உதவித் தொகை விரும்பும் மாணவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெற்று உதவித் தொகை பெறுவார்கள்.
கல்வியில் மேன்மை பெற : சனி பூஜை
சுப நாட்கள் : 7, 8, 9, 10, 13, 14, 15, 19, 21, 22, 23, 24, 29, 30, 31.
அசுப நாட்கள் : 1, 2, 3, 4, 5, 6, 12, 13, 16, 17, 18, 20, 25, 26, 27, 28.
Leave a Reply