சிம்மம் ராசி பலன் ஏப்ரல் 2021 | April Month Simmam Rasi Palan 2021
சிம்மம் ராசி பலன் ஏப்ரல் 2021 பொதுப்பலன்:
சிம்ம ராசி அன்பர்களே! நீங்கள் சிறந்த மாற்றங்களைக் கண்டு வாழ்வில் சந்தோஷமாக இருக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். மாதத்தின் முதல் அரைப் பகுதியைக் காட்டிலும் இரண்டாம் பகுதியில் அதிர்ஷ்டத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் சில பதட்டமான சூழ்நிலையையும் நீங்கள் எதிர் கொள்ள நேரும். உங்கள் நிதிலை சீராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வீர்கள். குடும்பத்திலும் அமைதியான சூழல் இருக்கும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களின் ஆலோசனை உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தரும். நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தால் வேலை மாற்றம் விரும்புவீர்கள். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். நல்ல சம்பளத்துடன் கூடிய சிறப்பான வேலை கிடைக்கும். என்றாலும் பணியிடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் முன்கோபம் காரணமாக நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். எல்லாத் திசைகளில் இருந்தும் உங்களுக்கு பண வரவு இருக்கும். நீங்கள் செல்வ வளத்தைப் பெறுவீர்கள். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்

காதல் / குடும்ப உறவு :
நீங்கள் திருமணத்திற்குக் காத்திருப்பவர் என்றால் உங்களுக்கு திருமணமாகும் காலம் வந்து விட்டது. உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை கிடைக்கப் பெறுவீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு மாதத்தின் முற்பகுதி யை விட பிற்பகுதியில் நல்லுறவு காணப்படும். பணியிடத்தில் அதிக வேலை காரணமாக குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழிக்க இயலாது போகும். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவழிக்க முயலுங்கள். கடினமான வார்த்தைகளை மற்றும் செயல்களை தவிர்த்து விடுங்கள்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண: சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் குடும்பத்தில் சுப செலவுகளை மேற்கொள்வீர்கள். வீட்டில் குழந்தைப் பிறப்பு, திருமணம் போன்ற மகிழ்ச்சி தரும் சுப காரியங்கள் நடக்கும். அது தொடர்பான பயணங்கள் குறித்த செலவுகளையும் நீங்கள் மேற்கொள்வீர்கள். நீங்கள் கடன் அற்ற வாழ்க்கை வாழ விரும்புவீர்கள். உங்கள் தாய் வழி அல்லது மனைவி வழி உறவு மூலம் நிதி உதவி அல்லது சொத்துக்களைப் பெறுவீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை
வேலை :
இந்த மாதம் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள் என்றாலும் உங்கள் வார்த்தை மற்றும் செயல்களில் கவனம் தேவை. பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவார்கள். நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். பணியில் சில பிரச்சினைகள் எழும். உங்கள் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் பிறருடன் தைரியமாகச் செயல்படுவீர்கள். உங்கள் தகவல் தொடர்புத் திறன் சிறப்பாக இருக்கும். நீங்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள்
தொழில் :
கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். சென்ற மாதம் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். சிறந்த வருமானம் கிட்டும். தொழில் சார்ந்த பயணங்கள் உங்களுக்கு நன்மை அளிக்கும். நீங்கள் ஆடை மற்றும் உணவுத் துறையில் பனி புரிபவர் என்றால் நீங்கள் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். நீங்கள் பொழுதுபோக்குத் துறையில் இருப்பவர் என்றால் சிறந்த வெற்றியை இந்த மாதம் எதிர்பார்க்கலாம். உங்கள் கடின உழைப்பு மற்றும் வெற்றிக்கான பாராட்டைப் பெறுவீர்கள்.
தொழில் நிபுணர்கள் :
இந்த மாதம் உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். இதனால் நீங்கள் பயனற்ற சில செயல்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் பணியில் தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடன் பணி புரிபவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள். பயணத்தின் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் குழுவினருடன் இணைந்து சிறப்பாகச் செயல்படுவீர்கள்.
ஆரோக்கியம் :
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் அதிக பணிகள் கராணமாக தலைவலி, அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க காயத்ரி மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியய்த்தில் கவனம் செலுத்த யோகா மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள் :
கல்வி பயிலும் சிம்ம ராசி மாணவ மாணவியர்கள் இந்த மாதம் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உங்களுக்கு உறு துணையாக இருப்பார்கள். நீங்கள் மனம் ஒருமித்து ஈடுபாட்டுடன் பாடங்களைப் பயில்வீர்கள். இதனால் உங்கள் கவனிப்புத் திறன் சிறப்பாக இருக்கும். அதன் மூலம் நீங்கள் கல்வியில் பிரகாசிப்பீர்கள். வெளிநாடு சென்று பயில விரும்பும் மாணவர்கள் இந்த மாதம் தங்கள் விருப்பங்கள் நிறைவேறக் காண்பார்கள்.
கல்வியில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை
சுப நாட்கள் :   6, 7, 8, 9, 10, 11, 12, 18, 19, 20, 23, 26, 27, 28, 29, 30.
அசுப நாட்கள் :  1, 2, 3, 4, 5, 13, 14, 15, 16, 17, 21, 22, 24, 25, 31






      
      




