AstroVed Menu
AstroVed
search
search
x

துலாம் ராசி பலன் ஏப்ரல் 2022 | April Matha Thulam Rasi Palan 2022

dateMarch 11, 2022

துலாம் ராசி பலன் ஏப்ரல் 2022 பொதுப்பலன்கள்:

துலாம் ராசி அன்பர்களே! குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். திருமணமான தம்பதிகளின் தாம்பத்திய வாழ்வு சிறக்கும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை நீடிக்கும். காதலர்கள் கவனமுடன் இருக்க வேண்டிய காலக்கட்டம் இந்த மாதம். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அதிர்ஷ்டகரமான மாதம் ஆகும். இந்த மாதம் உங்கள் பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணிகள் மலை போலக் குவியும் என்றாலும் பணியிடத்தில் அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் கவனம் தேவை. மாணவர்கள் மனதை ஒருமுகப் படுத்தி படிக்க வேண்டும்.  தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள் 

துலாம் ராசி பலன் ஏப்ரல் 2022 | April Matha Thulam Rasi Palan 2022

காதல் / குடும்பம்:

காதலர்கள் இந்த மாதம் சில சண்டை சச்சரவுகளை சந்திக்க நேரும். உறவில் சலசலப்பு இருக்கும். மனஸ்தாபங்கள் உண்டாகலாம். கவனம் தேவை. கணவன் மனைவி உறவு ஒற்றுமையுடன் காணப்படும். சுமுகமான உறவு இருக்கும். இந்த மாதம் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரித்து காணப்படும். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். 

காதல் உறவு மேம்பட சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் நிதிநிலையைப் பொறுத்தவரை உங்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கும். இந்த மாதம் பங்கு வர்த்தகத்தில் ஏற்றம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். வீடு மற்றும் வண்டி பராமரித்தல் பேன்ற வகையில் செலவீனங்கள் ஏற்படும். 

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை சிறப்பான சூழல் இருக்கும். நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்புடன் பணியாற்றுவீர்கள். பணிகள் அதிகம் இருக்கும். மலை போலக் குவியும் பணிகள் உங்களை திக்கு முக்காட வைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். . 

தொழில்:

நீங்கள் சுய தொழில் புரிபவர் என்றால் இந்த மாதம்  அதிக லாபத்தையும் நல்ல முன்னேற்றத்தையும்   எதிர்பார்க்கலாம். குறிப்பாக  பங்கு வர்த்தகத்தில் துறையில் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்றம் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் அதிக லாபங்களை எதிர்பார்க்க முடியாது தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் தொழில் வல்லுனர்கள்  சிறப்பாகச் செயல்படுவார்கள் பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும்.வாடிக்கையாளர்கள்
மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் உங்கள் வளர்ச்சிக்கு உதவும். கல்வித்துறையில் பணிபுரியும் தொழில் வல்லுனர்கள் தங்கள் துறையில் திறமை மற்றும் புத்திசாலித்தனத்தின் மூலம் சாதிப்பார்கள்.. 

உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண சனி பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் உங்கள்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறுநீரகம் சம்மந்தப்பட்ட உடல்நல பாதிப்பு ஏற்படலாம். போதுமான நீர் உட்கொண்டு இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். பெற்றோர்களின்  உடல் நிலையில் சிறிது கவனம் தேவை.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை

மாணவர்கள்:

பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் இந்த மாதம் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவார்கள். பல புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு படிப்பில் தேர்ச்சி பெறுவார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்த அதிக முயற்சிகளை மேற்கொண்டு தடைகளையும் தாண்டி கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் பேராசிரியர்களின் உதவியுடன் ஆராய்ச்சியில் வெற்றி பெறுவார்கள்.  

கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை

சுப நாட்கள்: 

16, 18, 19, 21, 22, 23, 25, 26, 27, 28.

அசுப நாட்கள்:

15, 17, 20, 24, 29, 30.

Tags Tags:

    Leave a Reply