விருச்சிகம் ராசி பலன் ஏப்ரல் 2022 | April Matha Viruchigam Rasi Palan 2022

விருச்சிகம் ராசி பலன் ஏப்ரல் 2022 பொதுப்பலன்கள்:
அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் குடும்ப அமைதி காக்கப்படும். தம்பதிகள் தங்களுக்குள் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் குடும்ப உறவுகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். வீட்டில் மூத்தவர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நன்மை பயக்கும். பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். இந்த மாதம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய நண்பர்கள் மூலம் உங்களுக்கு தன உதவி கிடைக்கும். தங்களின் பொருளாதார நிலையும் முன்னேற்றம் அடைந்து காணப்படும். உத்தியோகத்தில் மந்த நிலை இருக்கும். தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவர்கள் முயற்சி செய்து முன்னேறுவார்கள். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
கணவன் மனைவி கருத்தொருமித்து புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுத்தும் நடந்து கொள்வார்கள். இதனால் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். தேவையற்ற பேச்ச்சுக்கள் மற்றும் வீண் வாகுவாதங்களைத் தவிர்க்க வேண்டும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற துணை கிடைக்கும்.
காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
உங்கள் நிதிநிலை ஏற்றம் காணும் வகையில் கிரக நிலைகள் உள்ளன. பிட் காயின் மற்றும் பங்கு வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதற்க்கும் லாபங்களை ஈட்டுவதற்கும் இந்த மாதம் ஏற்றதாக உள்ளது. இந்த மாதம் பயணங்கள் மற்றும் உணவுக்காக அதிக செலவுகள் செய்வீர்கள்.
வேலை:
இந்த மாதம் உத்தியோகத்தைப் பொறுத்தவரை மந்த நிலை காணப்படும். உரித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் போகலாம். நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்குரிய பலன்கள் கிடைப்பது அரிதாக இருக்கும். உத்தியோகம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவு எடுங்கள்.
தொழில்:
தொழில் சிறப்பாக நடக்கும். அதிக வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவார்கள். நீங்கள் தொழிலை விஸ்தீரணம் செய்வீர்கள் அதன் மூலம் நல்ல வருமானமும் லாபமும் கிட்டும். சுயதொழில் செய்பவர்கள் தங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ள புதிய தொழிலைத் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு சுய தொழிலில் தன ரீதியான நல்ல முன்னேற்றம ஏற்படும். ஆயத்த ஆடை சம்மந்தப்பட்ட கூட்டுத் தொழில் உங்களுக்கு லாபத்தை அளிக்கும்.
தொழில் வல்லுனர்கள்:
உத்தியோகத்தில் உள்ள தொழில் வல்லுனர்களின் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உயர்கல்வி நிறுவனங்களில் பணியில் உள்ள தங்களுக்கு சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. வீண் வக்குவாதத்தை தவிர்பது நன்மை பயக்கும். அரசு உத்தியோகத்தில் உள்ள தொழில் வல்லுனர்களான உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
உத்தியோகம் மற்றும் தொழிலில் சிறக்க சனி பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதனை தக்க வைத்துக்கொள்ள நீங்கள் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது நலம் பயக்கும். உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள உண்ணும் உணவில் கவனம் தேவை.
உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை
மாணவர்கள்:
இந்த மாதம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். தடைகள் பல வந்தாலும் முயன்று நீங்கள் முன்னேறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் விடா முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி மாணவர்கள் மனதை ஒருமுகப் படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் கடுமையாக உழைத்து ஆராய்ச்சி செய்வதன் மூலம் ஆராய்ச்சியில் வெற்றி காண்பீர்கள்.
கல்வியில் வெற்றி கிடைக்க கனேஷா பூஜை
சுப நாட்கள்:
11, 12, 13, 14, 16, 18, 19, 21, 22, 23.
அசுப நாட்கள்:
9, 10, 15, 17, 20, 24.
