AstroVed Menu
AstroVed
search
search

கன்னி ராசி பலன் ஏப்ரல் 2022 | April Matha Kanni Rasi Palan 2022

dateMarch 11, 2022

கன்னி ராசி பலன் ஏப்ரல் 2022 பொதுப்பலன்கள்:

கன்னி ராசி அன்பர்களே! சீராகச் செல்லும் குடும்ப உறவுநிலை உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். இருவரும் கருத்தொருமித்து பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு வீட்டில் பெரியவர்களின் ஆதரவு கிட்டும். பொருளாதார நிலை சற்று அனுகூலமாக இருக்கும். தொழில் சிறப்பாக நடக்கும்.  சுயதொழிலில்  நீங்கள் லாபகரமான விஷயங்களை எதிர்பார்க்கலாம். கூட்டுத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் முயற்சி மற்றும் கடின உழைப்பை மேற்கொள்வதன் மூலம் வெற்றி காணலாம். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள் 

காதல் / குடும்பம்:

இளம் காதலர்கள் இனிய நேரத்தை சந்திப்பார்கள். காதலர்களுக்கு இடையே நல்ல இணக்கம் நிறைந்து காணப்படும். இந்த மாதம் திருமணத்திற்குக்  காத்திருப்பவர்களுக்கு  கெட்டி மேளம் கொட்டும் வாய்ப்பு உள்ளது. மனதிற்கு பிடித்த வரன் அமையும். நீங்கள் அனுசரித்துச் செல்வதன்  மூலம் குடும்ப உறவுகள் சீராகவும்  அமைதியாகவும்  இருக்கும்.

காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை

நிதி நிலை:

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சற்றே அனுகூலமான நிலை இருக்கும் கையிருப்புப் பணத்தைக் கொண்டு  உங்கள் அன்றாடத் தேவைகளை நீங்கள் எளிதாக  சமாளிப்பீர்கள். பணத்தை எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். வாகனம் பராமரிப்பதற்கான செலவுகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். 

நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை

வேலை:

உத்தியோகச் சூழ்நிலையை நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். உங்கள் உழைப்பிற்கேற்ற பலன்  கிடைப்பதும் அரிது. நீங்கள் சற்று காலம் காத்திருந்தால் உழைப்பின் பலனைப் பெற முடியும். இந்த மாதம் அரசு உத்தியோகத்தை பொறுத்தவரை மந்த நிலை  காணப்படும். உரித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் போகலாம். தனியார் உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடினமாக உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைப்பது அரிதாக இருக்கும். 

தொழில்:

நீங்கள் சுய தொழில் செய்பவராக இருந்தால் சுறுசுறுப்பாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்கும்.கூட்டுத்தொழில் செய்பவர்களின்  வருமானம் அதிகரிக்கும். ஏற்றுமதி சம்மந்தப்பட்ட தொழில் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவு எடுங்கள்.                                                                                                                                                                                                                       

தொழில் வல்லுனர்கள்:

சுயதொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தனியார் துறையில் வேலை செய்யும் தொழில் வல்லுனர்களுக்கு வேலை பளு அதிகம் இருக்கும். ஓய்வின்றி உழைப்பதன் காரணமாக உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் காணப்படும். ஓய்விற்கும் நேரம் ஒதுக்கி பணியாற்ற வேண்டியது அவசியம்.

உத்தியோகம் மற்றும் தொழில் உயர்வுக்கு முருகன் பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும்  கவனம் செலுத்த வேண்டும். சிறுநீரகம் சம்மந்தப்பட்ட உடல் நல பாதிப்பு ஏற்படலாம். போதுமான நீர் உட்கொண்டு இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. 

உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி செயல்படுவார்கள். அதன் மூலம் அவர்களின் கவனிப்புத் திறன் அதிகரிக்கும். வெற்றி கிட்டும்.    உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கவனச் சிதறலுக்கு ஆட்படும் வாய்ப்பு உள்ளதால்  படிப்பில் கவனம் தேவை. ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்க்ளுக்கு வெளி நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். 

மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணேஷா பூஜை

சுப நாட்கள்: 

6, 7, 8, 11, 12, 13, 14. 

அசுப நாட்கள்:

1, 2, 3, 4, 5, 9, 10, 


banner

Leave a Reply