AstroVed Menu
AstroVed
search
search
x

2022 New Year Rasi Palangal Kumbam

dateNovember 9, 2021

2022 புத்தாண்டு கும்ப ராசி பொதுப்பலன்கள்:

உங்கள் குடும்ப உறவு சிறப்பாக இருக்கும். கணவன்  மனைவி கருத்தொருமித்து வாழ்வீர்கள். உறவினர்களிடம் உறவு சிறப்பாக இருக்கும் என்றாலும் மூத்த உடன்பிறப்புகளுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும்.  பொருளாதார நிலையைப் பொறுத்த வரை இந்த மாதம் உங்கள் வருமானம் கணிசமாக உயரும். உங்கள் சேமிப்பு உங்களுக்கு கை கொடுக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி பயில்வார்கள்.

 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

வேலை / தொழில்:

பணியில் இருக்கும் கும்ப ராசி அன்பர்கள் தங்கள் பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கக் காண்பார்கள். பணியிடத்தில் புதிய நண்பர்களைப் பெற்று தங்கள் நட்பு வட்டம் விரிவடையக் காண்பார்கள். சக பணியாளர்களின் நல்ல ஒத்துழைப்பைப் பெறுவார்கள். சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் கும்ப ராசி அன்பர்கள் தங்கள் தொழில் சிறப்பாக நடைபெறக் காண்பார்கள். அதன் மூலம் கணிசமான வருமானம் பெறுவார்கள். ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். 

உத்தியோகம் மற்றும் தொழில் சிறக்க சனி பூஜை

காதல் / திருமணம்:

கும்ப ராசி இளம் வயது காதலர்கள் இந்த வருடம் தங்கள் காதலில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கக் காண்பார்கள். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். ஒருவர் மூலம் மற்றவர் ஆதாயம் காண்பார்கள். இது நாள் வரை கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவில் ஒற்றுமையும் இணக்கமும் காணப்படும். தாம்பத்திய உறவு சிறக்கும். உறவில் அன்னியோன்யம் கூடும். 

காதல் மற்றும் திருமண உறவு மேம்பட குரு பூஜை

நிதி நிலைமை:

உங்கள் வருமானம் கணிசமாக உயரும். உங்கள் சேமிப்பின் மூலம் லாபம் காண்பீர்கள். வெளிநாடு தொடர்புடைய தொழில் , ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் நீங்கள் நல்ல ஆதாயமும் பண வரவும் பெறுவீர்கள். உங்கள் கடந்த கால முதலீடுகள் மூலம் தன லாபம் ஏற்படும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல் போன்ற விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். 

நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை

மாணவர்கள்: 

பள்ளிக் கல்வி மாணவர்கள் இந்த வருடம் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதனைக் கருத்தில் கொண்டு முயற்சி செய்து படிக்க வேண்டும் உங்கள் மனதில் பதட்ட நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அமைதியாகச் செயல்பட வேண்டும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையுடன் கடினமாக உழைத்துப் படித்தால் வெற்றி நிச்சயம். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரிக்கும். படிப்பில் வெற்றி கிடைக்கும். 

கல்வியில் வெற்றி கிடைக்க கனேஷா பூஜை

ஆரோக்கியம்: 

கும்ப ராசி அன்பர்கள் இந்த வருடம் தங்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சுவாசம் மற்றும் நுரையீரல் சம்மந்தப் பட்ட பிரச்சனைகள் வரலாம். தினமும் பிராணாயாமம் அல்லது  மூச்சுபயிற்சி செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக வைத்துக்கொள்ள இயலும். தாயாருக்கு  கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவ ஆலோசனை பெறுவது நன்மை பயக்கும். 

உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

சனிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு பசு நெய் தீபமேற்றி வழிபாடு செய்து வர தன வரவு அதிகரிக்கும். 
சனிக்கிழமைகளில் ஏழை மாணவர்களுக்கு அன்ன தானம் செய்வது நல்லது.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

சுக்கிரன் பூஜை

சாதகமான மாதங்கள் : 

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், நவம்பர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : 

மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர். 


banner

Leave a Reply