AstroVed Menu
AstroVed
search
search

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் கும்பம் ராசி | 2020 New Year Rasi Palangal Kumbam

dateDecember 18, 2019

பொதுப்பலன்கள்

கும்ப ராசி அன்பர்களுக்கு, 2020 ஆம் வருடம், குறிப்பாக அதன் முதல் காலாண்டு, பணம் கொழிக்கும் நேரமாகத் திகழும். செல்வ மழை பொழிவதுடன் கூட, இந்த நேரத்தில், உங்கள் வாழ்க்கைத் துணை தேடலும், வெற்றிகரமாக நிறைவேறும். இந்த நேரத்தில், துணிச்சலும், அதிர்ஷ்டமும் உங்களுக்குக் கை கொடுக்கும். ஊக வர்த்தகமும் லாபம் தரும். அடுத்து வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நீங்கள், சுப செலவுகள் செய்யக்கூடும். ஜூன் மாதத்தில் உங்களில் சிலர், வீடு, வாகனம் போன்ற ஏதாவது ஒன்றை வாங்கும் வாய்ப்பும் உள்ளது. ஜனவரி, ஜூன் மாதங்களில் எதிர்பாராத ஆதாயங்களும் கிடைக்கக்கூடும்.

நவம்பர், டிசம்பர் மாதங்களிலும், நீங்கள், வருமானமும், லாபமும் ஈட்டலாம். இந்த காலகட்டத்தில், பணித்துறையிலும் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். ஆனால் செலவுகளைக் குறைத்துக் கொள்ளாவிட்டால், சில நேரங்களில், பணத்தட்டுப்பாடும் ஏற்படலாம். எச்சரிக்கை தேவை.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

வேலை

2020 இல் உங்கள் வேலை நிலவரம், மந்தமாகவே இருக்கக்கூடும். எனவே தன்னம்பிக்கையுடன், கடும் முயற்சி செய்வதன் மூலமே, பணியில் நீங்கள் முன்னேற முடியும். எனினும், நவம்பர், டிசம்பர் மாதங்கள் சாதகம் தரக்கூடும். மே, ஜூன் மாதங்கள், தொழில் நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக சேவைத் தொழிலிற்கு நல்ல பலனை அளிக்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில், நீங்கள், தேனீக்களைப் போல, மிக சுறுசுறுப்பாக உழைப்பீர்கள்.

வேலை, தொழில் மேம்பட Kala Bhairava Fire Lab (Homa)

காதல், மணவாழ்க்கை, உறவுகள்

முதல் 3 காலாண்டுகளில் அதிக ஆர்வமின்றிச் செல்லும் காதல் உறவுகள், கடைசி 3 மாதங்களில் பிரகாசமடையும். அப்பொழுது துணையிடம் உங்கள் அன்பு நன்கு வெளிப்படும். வருடத்தின் முதல் 5 மாதங்களில் திருமணத்திற்கு தகுந்த வரன் தேடும் முயற்சி, வெற்றி பெறும். இந்தக் காலகட்டங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டால், திருமணம் கைகூடும் வாய்ப்பும், துணைகளுக்குள் நல்ல இணக்கம் ஏற்படும் வாய்ப்பும் உருவாகும்.

உறவுகள் சிறக்க Venus Fire Lab (Homa)

நிதி

வருடத்தின் பெரும்பகுதி, பண வரவு, பொருள் வளர்ச்சி, நிதி ஆதாயங்கள் போன்றவற்றுக்குச் சாதகமாகவே உள்ளது. இந்த ஆதாயங்கள், வழக்கமானவையாகவும் இருக்கலாம்; எதிர்பாராதவையாகவும் இருக்கலாம். இவ்வாறு நீங்கள் நல்ல பொருளாதார ஸ்திரத்தன்மையை அனுபவிக்க முடியும். இப்பொழுது செய்யப்படும் செலவுகளும், சுப காரியங்களுக்காகவே இருக்கும். தொழில் முனைவோர் லாபங்களை ஈட்டுவார்கள்; பணியில் இருப்பவர்கள் சம்பள உயர்வைக் காண்பார்கள். ஆனால் ஊக வர்த்தகம் வேண்டாம்; அது ஆபத்தில் முடியக் கூடும்.

நிதிநிலை ஏற்றம் பெற Kanakadhara Lakshmi Abhishekam

கல்வி

படிப்பில் சுமாரான பலன்களே காணப்படுவதால், மாணவர்கள், இந்த ஆண்டு கடுமையாக உழைத்தே, கல்வியில் முன்னேற்றம் அடைய முடியும். எனவே மாணவர்களாகிய நீங்கள், படிப்பில் அதிக நேரம் செலவிடுங்கள்; மனதை ஒருமுகப்படுத்திப் படியுங்கள்; அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றுங்கள்; அப்பொழுது தான், நீங்கள் நினைத்ததை சாதிக்க முடியும். அயல் நாட்டுக்குச் சென்று, கல்வி கற்க விரும்புபவர்கள், ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில், நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

கல்வியில் வெற்றி பெற Mercury Yantra

ஆரோக்கியம்

2020 இன் ஆரம்ப காலம் மற்றும் இறுதிக் காலம் இரண்டிலும், நீங்கள் ஓரளவு ஆரோக்கியத்துடனேயே இருக்க முடியும். இந்த காலங்களில் நோய்கள், உடற்கோளாறுகள் போன்றவை உங்களைத் தாக்கக் கூடும். ஆனால் இடைப்பட்ட காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில், உடல்நிலை நன்றாக இருக்கும். நோய்களும் குணமாகக் கூடும். நீங்கள் விரும்பும் கடவுளை வழிபட்டு வேண்டுவதன் மூலம், ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க Hanuman Yantra

பரிகாரங்கள்

ருத்ர பூஜை அல்லது ருத்ராபிஷேகம் செய்யவும்

பகவான் ஐய்யப்பனை வழிபடுவது, அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் தரும்

விசேஷ நாட்களில் பிரசாதம் செய்து இறைவனுக்குப் படைத்து, அதை ஏழைகளுக்கு தானம் செய்யவும்

‘ஓம் வகீஸ்வராய வித்மஹே, வக்வதீன்யே தீமஹி, தன்னோ சரஸ்வதி ப்ரசோதயாத்’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்

‘ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் லக்ஷ்மிபயோ நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்

பரிகாரங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை நிறைவேற்றவும் கீழ்க்கண்ட மின் இணைப்பைக் ‘க்ளிக்’ செய்யுங்கள்

சாதகமான மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர்

சாதகமற்ற மாதங்கள்: ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர் (சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்)


banner

Leave a Reply