Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் கன்னி ராசி | 2020 New Year Rasi Palan Kanni

December 19, 2019 | Total Views : 891
Zoom In Zoom Out Print

பொதுப்பலன்கள் 


கன்னி ராசி அன்பர்களுக்கு, 2020 ஆம் ஆண்டில், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சிறந்து விளங்கும். இந்த காலகட்டத்தில், வேலை, தொழில், நிதி போன்ற பல முக்கியத் துறைகளில், உங்களுக்குப் பெரும் நன்மைகள் விளையக் கூடும். ஊக வர்த்தகம் போன்றவற்றிலிருந்து லாபம் பெறும் நீங்கள், எதிர்பாராத சில ஆதாயங்களையும் அடையக்கூடும். இப்பொழுது நீங்கள், லாபகரமான முதலீடுகளைச் செய்வதுடன், முதிர்ச்சியடைந்த முதலீடுகளிலிருந்து நல்ல வருமானமும் பெறுவீர்கள். நல்ல அறிவாற்றலுடன் செயலாற்றும் நீங்கள், உங்களைக் கவலை கொள்ளச் செய்த பிரச்சினைகளிலிருந்தும் கூட, விடுபடுவீர்கள். ஆகவே இந்த 2 மாதங்களில், நீங்கள் முன்னேறத்துடன் கூடிய சுகமான வாழ்க்கை நடத்த இயலும். மேலும், முன்பு நீங்கள் செய்த நல்ல செயல்களின் பலன்களும், இந்தக் காலகட்டத்தில் உங்களை வந்தடையும். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

வருடத்தின் கடைசிக் காலாண்டில், உங்கள் தைரியமும், பேச்சுத் திறனும் மேம்படும். இளைய சகோதர, சகோதரிகள், அண்டை, அயலார்கள் போன்றவர்களுடன் உறவு வலுப்பெறும். கடவுள் நம்பிக்கை பெருகும். அருகிலுள்ள இடங்களுக்கு நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் மகிழ்ச்சி அளிக்கும். இந்த 3 மாதங்கள், ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கும், நன்மை பயப்பதாக அமையும். 

வேலை

வேலைத் துறையைப் பொறுத்தவரை, ஜூலை என்பது சாதகமான மாதம் எனலாம். இந்த நேரத்தில் சலுகைகள், பதவி உயர்வு, வரவேற்கத்தக்க இடமாற்றம் போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் வெற்றிகளைப் பெற செப்டம்பர் சிறந்த மாதமாக இருக்கும். இவற்றைத் தவிர, மற்ற காலகட்டங்கள், வேலை, தொழிலுக்கு சாதகமாக அமையாமல் போகலாம். எனவே, இந்த நேரங்களில் நீங்கள் கடுமையாக உழைத்து, முன்னேற வேண்டியிருக்கும். 

வேலை, தொழில் மேம்பட Hayagriva Sahita Bhu Varaha Homa                    

காதல், மணவாழ்க்கை, உறவுகள் 

ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் காதல் ஜோடிகளுக்குள்ளும், மணமான தம்பதிகளுக்குள்ளும், அன்பு பெருக்கெடுக்கும். இந்த பரிவும், பாசப் பிணைப்பும் அவர்கள் உறவை வலுப்படுத்தும். வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கு, செப்டம்பர் மாதம் மட்டுமே ஏற்றதாக அமையும். மற்ற நாட்களில், இதற்காக கடும் முயற்சி செய்ய வேண்டி வரும்.  

உறவுகள் சிறக்க Parvathi Fire Lab (Homa) 

நிதி

பண விவகாரங்களைப் பொறுத்தவரை, இந்த வருடம் மந்தமாகவே துவங்கும். இதே நிலை, முதல் அரையாண்டு முழுவதும் தொடரக் கூடும். ஆனால், மூன்றாவது காலாண்டில், சூழ்நிலை சாதகமாக மாறும். வருமானமும், சேமிப்பும் பெருகும். இது பொருள் வளத்தையும், நிதிநிலையில் ஸ்திரத்தன்மையையும் கொடுக்கும். வருடத்தின் ஏனைய நாட்கள் பெருமளவு நன்மைகளை அளிக்க வாய்ப்பில்லையாதலால், சாதகமான காலத்திலேயே, எதிர்காலத்திற்க்குத் தேவையான பணத்தைச் சேமித்துக் கொள்வது நல்லது. தேவையற்ற செலவுகளையும் கட்டுப்படுத்துவது அவசியம்.  

நிதிநிலை ஏற்றம் பெற Lakshmi Narayana Fire Lab (Homa)

கல்வி 

சிம்ம ராசி மாணவர்களின் கல்வி, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சிறந்து விளங்கும். அவர்கள் கற்கும் திறன் மேம்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். இது பெற்றோரையும், ஆசிரியர்களையும் மகிழச் செய்யும். ஆராய்ச்சிகளும், அயல்நாட்டுக் கல்வி முயற்சிகளும் இந்த காலகட்டத்தில் வெற்றியடையக் கூடும். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், வெற்றிபெறப் போராட வேண்டியிருக்கும்.

கல்வியில் வெற்றி பெற Avahanti Homa    

ஆரோக்கியம் 

ஆண்டு முழவதும் உடல்நிலை சுமாராகவே இருக்கும். கடும் நோய்கள், ஆரோக்கியக் கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், உடல்நிலையைப் பொறுத்தவரை, எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நல்லாரோக்கியம் வேண்டி, கணபதி, ஹனுமான் போன்ற தெய்வங்களை வழிபடுவது பலன் தரும். 

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க Health Booster Package     

பரிகாரங்கள்

•    மாணவர்கள், அறிஞர்கள், அந்தணர்கள் ஆகியவர்களை மரியாதையுடன் நடத்தவும் 
•    உங்கள் பகுதியில் உள்ள பசுக்களுக்கும், காக்கைகளுக்கும் உணவளிக்கவும் 
•    ஆரோக்கியக் குறைபாடுகளைத் தீர்க்க, பகவான் மிருத்யுன்ஜயரை வணங்கவும் 
•    ‘ஓம் பூர் புவ ஸ்‌வக, ஓம் தத் ஸவிதுர் வரேண்யம், 
பர்க்கோ தேவஸ்ய தீமஹி, தீயோ யோ ந பிரசோ தயாத்’
என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்  
•    ‘ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய வாசுதேவாய தன்வந்தரயே
அம்ரித கலச ஹஸ்தாய, சர்வபய வினாஸாய, சர்வரோக நிவாரணாய 
திரிலோக்ய பதயே, திரிலோக்ய நிதயே 
ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபா, ஸ்ரீ தன்வந்திரி ஸ்வரூபா,
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய ஸ்வாஹா’   
என்ற தன்வந்திரி மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்  
பரிகாரங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை நிறைவேற்றவும்  கீழ்க்கண்ட மின் இணைப்பைக் ‘க்ளிக்’ செய்யுங்கள்:  

Gayatri Homa

சாதகமான மாதங்கள்: ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர்

சாதகமற்ற மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 

(சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்) 

banner

Leave a Reply

Submit Comment