Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் ரிஷபம் ராசி | 2020 New Year Rasi Palan Rishabam

December 19, 2019 | Total Views : 2,091
Zoom In Zoom Out Print

பொதுப்பலன்கள்   


ரிஷப ராசி அன்பர்களுக்கு, 2020 ஆம் வருடத்தின் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள், செல்வத்தில் புரளும் காலம் எனலாம். பொன்னான இந்த நேரத்தில், உங்கள் வருமானமும் சரி, லாபமும் சரி, பன்மடங்கு பெருகும் வாய்ப்புள்ளது; பொருளாதார நிலை நன்கு சீரடைந்து, முன்னேறும் வாய்ப்பும் உள்ளது. இந்த காலகட்டம், நிதித் துறை மட்டுமல்லாது, உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், சிறந்த பலன்களை அளிப்பதாக அமையும்.    

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

இந்த காலத்தில், பணியிலும், பெரும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் நீங்கள் செயலாற்றுவீர்கள். மிகச் சிறந்த செயல் திறனுடன் பணியாற்றி, உற்பத்தியைப் பெருக்குவீர்கள்; வெற்றிகளைக் குவிப்பீர்கள். கலைத் துறையிலும் நீங்கள் முத்திரை பதிக்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் நூதன சிந்தனையும், படைப்புத் திறனும் இந்த நேரத்தில் பளிச்சிடக் கூடும். இந்த நேரத்தில், உங்களது துணிச்சலும், போராடி வெல்லும் குணமும் மேம்படும்; சிலருக்கு எதிர்பாராத லாபங்கள் ஏற்படவும், பூர்வீக சொத்துகள் சேரவும் வாய்ப்புள்ளது.  


வேலை


2020 ஆம் வருடத்தின் இரண்டாவது அரையாண்டின் துவக்க நேரம், வேலைத் துறையில் புதிய திட்டங்களைத் தீட்டி, அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு ஏற்றது. இப்பொழுது, சொத்து வாங்கல், விற்றல் போன்றவற்றில் லாபம் ஈட்டுவதற்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு, அவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றமும் ஏற்படக்கூடும்; இது அவர்களுக்கு சாதகமாக அமையவும் கூடும். ஒப்பந்த வேலை, அதில் வரும் கமிஷன் வருமானங்கள் ஆகியவையும் சிறந்து விளங்கும். ஆனால், இந்த ஆண்டின் மற்ற காலகட்டங்களில், பணியில் வெற்றி காண்பதற்கு, குறைந்த வாய்ப்புகளே உள்ளன. எனவே, இந்த கால நேரங்களை அனுசரித்து, உங்கள் பணிகளை நன்கு திட்டமிட்டால், விளைவுகளை சாதகமாக மாற்றிக்கொள்ளலாம். பணியில் முன்னேறுவதற்கு பகவான் கணபதியை வழிபடவும்.   


வேலை, தொழில் மேம்பட Ganesha Fire Lab (Homa)   

காதல், மணவாழ்க்கை, உறவுகள் 

பொதுவாகவே இந்த ஆண்டில், கணவன் மனைவி உறவும், துணையுடனான உங்கள் உறவும் சுமாராகவே இருக்கக் கூடும். எனவே துணையைக் குறித்த உங்கள் எண்ணங்களையும், அணுகுமுறையையும் சந்தர்பத்துக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வது அவசியம். கடைசி 3 மாதங்கள் திருமணத்திற்கு வரன் தேடுவதற்கு ஏற்றவை அல்ல; எனவே அப்பொழுது அந்த முயற்சிகள் வேண்டாம். எனினும், வருடக் கடைசியில், துணை மீது உங்கள் காதல் உணர்வு பெரிதும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.  

உறவுகள் சிறக்க Krishna Yantra

நிதி

வருட ஆரம்பத்தில் எல்லாம் மந்தமாகவே இருக்கும் உங்கள் நிதிநிலை, ஜூன் - செப்டம்பர் காலகட்டத்தில் பெருமளவு முன்னேற்றம் அடையும். இந்த 4 மாதங்களில் நீங்கள் சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள்; அத்துடன் கூட, பணப்புழக்கமும், சேமிப்புகளும் கணிசமாக அதிகரிக்கும். வருமானமும் நன்றாகவே இருக்கும்; எனினும் கடைசி 3 மாதங்களில், நீங்கள், ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்க வேண்டி வரும். இந்த நேரத்தில், முதலீடுகளிலிருந்தும் நல்ல வருமானம் வந்து சேரும். எனினும், இந்த காலகட்டத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம்.          

நிதிநிலை ஏற்றம் பெற Hayagriva Sahita Bhu Varaha Homa

கல்வி 

மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு என்ற 4 மாதங்களும், பள்ளி, கல்லூரி தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் ஆகியவற்றை எழுதுவதற்கு சிறந்த நேரங்கள் ஆகும். ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் உயர் கல்வி, அயல்நாட்டுக் கல்வி போன்றவை தொடர்பான முயற்சிகளுக்குச் சாதகமாக அமையும். ஏப்ரல், டிசம்பர் மாதங்களில் கல்வி உதவித்தொகைகள் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மாணவர்களுக்கு, போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற, ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள் ஊக்கம் தருவதாக அமையும்.   

கல்வியில் வெற்றி பெற Saraswathi Fire Lab (Homa)  

ஆரோக்கியம் 

முதல் 6 மாதங்களில், நீங்கள் பல நோய்களாலும், உடற்கோளாறுகளாலும் பாதிக்கப்படக் கூடும்; எனவே அப்பொழுது உடல்நலத்தில் தகுந்த கவனம் செலுத்துங்கள். ஆனால், ஆண்டின் பிற்பகுதியில், நோய்கள் குணமடைந்து, ஆரோக்கியம் மேம்படும். எனினும், உடலில் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவற்றை அலட்சியப் படுத்தாமல், உடனடியாக கவனிப்பது அவசியம். இல்லாவிட்டால், மருத்துவமனை சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை வரை, உங்களை அழைத்துச் சென்று விடும். ஆரோக்கியக் குறைபாடுகளிலிருந்து விடுபட, பிரார்த்தனை, பூஜை போன்றவற்றைச் செய்வது, பலன் தரும்.   

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க Dhanvantri Homa    

பரிகாரங்கள்

•    பெற்றோர்களுக்கும், முதியவர்களுக்கும் உரிய மரியாதை அளியுங்கள். அனைவரிடமும் நட்புடன் பழகுங்கள்
•    ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள்  
•    பகவான் பைரவரையும், அன்னை லக்ஷ்மி தேவியையும் வழிபடுங்கள் 
•    ‘ஓம் கம் கணபதயே நமஹ’ என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபம் செய்யுங்கள்    
•    ‘ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஸஹ ராஹவே நமஹ’ என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபம் செய்யுங்கள்  
பரிகாரங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை நிறைவேற்றவும்  கீழ்க்கண்ட மின் இணைப்பைக் ‘க்ளிக்’ செய்யுங்கள்:  

Total Power Package

சாதகமான மாதங்கள்: ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர்  

சாதகமற்ற மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், அக்டோபர்  

(சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்) 

banner

Leave a Reply

Submit Comment