Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

2019 May Month’s Rasi Palan for Viruchigam

April 1, 2019 | Total Views : 2,459
Zoom In Zoom Out Print

விருச்சிக ராசி - பொதுப்பலன்கள்.

விருச்சிக ராசி அன்பர்களே! எந்த ஒரு செயலை செய்தாலும் திட்டமிட்டு கவனமாக மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுவதனால் பயன் எதுவும் இல்லை. அன்பும் அக்கறையும் உறவுகளை உங்கள்  வசப்படுத்தும். நீங்கள் அன்பினை வெளிபடுத்துவதன் மூலாம்  உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவை பராமரிக்க இயலும். இதனால் குடும்பத்தில் நல்லுறவும் அமைதியும் நிலவும். அவர்களுடன் வெளியிடங்களுக்கு செல்ல திட்டமிடுங்கள். திட்டமிடுவதோடு அல்லாமல் அதனை செயலாற்றுங்கள்.   பிற நபர்களிடமும் நீங்கள் ஒளிவு மறைவின்றி பழகுவதன் மூலம் உங்கள் நன் மதிப்பை காப்பாற்றிக் கொள்ளலாம். சொத்துக்கள் வாங்கும் எண்ணம் இருந்தால் இப்பொழுது அதனை தவிர்க்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

விருச்சிக ராசி - காதல் / திருமணம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் உறவுகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி காண்பீர்கள். வெளியிடத்தில் உள்ளவர்களிடமும் நீங்கள் நல்லறவு பராமரிப்பீர்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தகுந்த துணை கிடைக்கப் பெறுவார்கள். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை

விருச்சிக ராசி - நிதி

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் முயற்சி எதுவும் எடுக்காமலேயே பலன்கள் உங்கள் கை மேல் கிடைக்கும் காலம். உங்கள் முதலீடுகளிலிருந்து இப்பொழுது லாபம் காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும் காரணத்தால் உங்களுக்கு ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பதன் மூலம் நீங்கள் செலவைக் கட்டுபடுத்தலாம். 

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்:புதன்  பூஜை

விருச்சிக ராசி - வேலை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை புரிந்து கொண்டு நீங்கள் அலுவலகத்தில் உங்கள் சக பணியாளர்களுடன் ஒத்துழைப்பீர்கள். அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். பிறகென்ன. உங்கள் பணிகளை செவ்வனே செய்து முடித்து விடுவீர்கள். இதனால் பாராட்டு, பதவி உயர்வி, ஊதிய உயர்வு என பல சாதகமான பலன்களை பெறுவதற்கான வாய்ப்பினைப் பெறுவீர்கள். சக பணியாளர்களின் நட்பையும் பெறுவீர்கள்.

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்:சூரியன்  பூஜை

விருச்சிக ராசி - தொழில்

கவனம் சிதறாமல் பணியாற்றுவதன் மூலம் நீங்கள் பணியில் புதிய மற்றும் திடீர் வாய்ப்புகளைப் பெற இயலும். திடீர் வாய்ப்பு, அலுவலகப் பணி காரணமாக திடீர் பயணம் என நீங்கள் பணியில் ஈடுபடுவீர்கள். உங்கள் கூட்டாளிகளும் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள்.

விருச்சிக ராசி - தொழில்வல்லுநர்

கடமையைச் செய் :பலனை எதிர்பாராதே  என்று கண்ணன் கீதையில் கூறியது போல இந்த மாதம் நீங்கள் பலனை எதிர்பாராமல் உங்கள் கடமைகளை தொடர்ந்து செய்து வர வேண்டும். நேர்மையுடன் கடமை தவறாமல் பணியாற்றுவதன் மூலம் சூழ்நிலையின் கடுமையை உங்களால் சமாளிக்க இயலும். மெதுவான முன்னேற்றம் இருந்தாலும் நீங்கள் திருப்தி பெறும் வகையில் அது காணப்படும். பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விடாமல் கவனமாக உரையாடுங்கள். 
                                                                                                                                                                                                                                                                                              விருச்சிக ராசி - ஆரோக்கியம்

உணவு முறையில் கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கலாம். அதற்கு முக்கியமாக நீங்கள் எண்ணெய் வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். அடுத்ததாக நீங்கள் உடல் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காக்கலாம். மாசு மற்றும் தூசு மூலம் ஒவ்வாமை ஏற்படாமல் இருக்க சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

விருச்சிக ராசி - மாணவர்கள்

சிந்தனை செய்வதோடு நில்லாமல் அதை செயல்படுத்தவும் திட்டம் வகுக்கும் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்.  பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சரியான பாதையில் பயணம் செய்ய இயலும். அவர்களுடன் உங்கள் திட்டங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு பிறக்கும். உங்கள் மேற்கல்வி குறித்த உங்கள் நண்பர்களின் ஆலோசனையும் உங்களுக்கு நன்மை தரும் வகையில் அமையும். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:    1,2,3,6,7,11,14,15,16,18,20,21,23,24,25,26,29,30,31.

அசுப தினங்கள்:   4,5,8,9,10,12,13,17,19,22,27,28.
 

banner

Leave a Reply

Submit Comment