Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

2019 May Month’s Rasi Palan for Kumbam

April 1, 2019 | Total Views : 2,345
Zoom In Zoom Out Print

கும்ப ராசி - பொதுப்பலன்கள்

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் கவனம் சிதறாமல் காரியத்தில் கண்ணாய் இருப்பீர்கள்.  நீங்கள் சத்தியத்தின் பாதையில் நடப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியையே பெற்றுத் தரும். இந்த மாதம் நீங்கள் சமயோசிதமாக நடந்து கொள்வீர்கள். தெளிவாக செயல்பட்டாலேயே பாதி வெற்றி கிட்டிய மாதிரி தான். உங்கள் தெளிவான சிந்தனை  காரணமாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் யாவும் சரியாக இருக்கும். அதன் மூலம் உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும். முன் வைத்த காலை பின் வைக்காமல் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் லட்சியத்தை அடைய முயல்வீர்கள். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதற்கிணங்க நீங்கள் வெற்றியும் காண்பீர்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நீங்கள் உங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் ஒன்று பட்டு செயல்படுவீர்கள். அதற்கான பலனும் உங்களை வந்து சேரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்கள் சாதாரணமாக இருப்பீர்கள். 

கும்ப ராசி - காதல் /திருமணம்

நலமாக வாழ வேண்டும் என்று விரும்பினால், அத்தகைய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது நம் கையில் தான் உள்ளது என்பதை புரிந்து கொண்டு நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள். நல்ல சிந்தனையும் நல்ல செயலும் நல்ல முடிவுகளையே வழங்கும். பொறுமை கடலினும் பெரிது என்பதனை கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள்  உங்கள் வாழ்க்கைத் துணையிடம் காட்டும் அக்கறை காரணமாக உங்கள் உறவு சிறப்பாக இருக்கும்.திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் திகட்டாத வாழ்க்கை வாழலாம். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: புதன் பூஜை

கும்ப ராசி - நிதி 

நிதி நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் நிலைமை சாதாரணமாக இருக்கும். சிறு துளிகள் இணைந்தால்  பெரு வெள்ளம் ஆகும். சிறுக சிறுக சேமிப்பதன் மூலம் உங்கள் சேமிப்புத் தொகை உங்கள் எதிர்காலத்தை செழிப்பாக்கும். வரவுக்குள் செலவை அடக்கி தேவையற்ற செலவுகளை தவிர்த்து பணத்தை சேமிப்புத்  திட்டங்கள் மூலம் சேமிக்க இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தால் அதனைப் பெற்று மகிழ்வீர்கள்.

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: கேது  பூஜை

கும்ப ராசி - வேலை

மாதங்களில் இது சிறந்த மாதம் என்று கூறும் அளவுக்கு இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். எடுத்த காரியம் யாவும் வெற்றி தரும். அதன் காரணமாக மனதில் அமைதியும் திருப்தியும் நிலவும்.  உண்மைகள் என்றும் உறங்குவதில்லை. உங்கள் உண்மையான உழைப்பு  மூலம் நீங்கள் பாராட்டைப்  பெறுவீர்கள். அதீத நம்பிக்கையில் அதிக பணிகள் எதையும் நீங்கள் ஒத்துக் கொண்டு விடாதீர்கள். அதை உங்களால் முடிக்க இயலாமல் கூட போகலாம். ஒற்றுமையே உயர்வுக்கு வழி என்பதால் உங்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நட்போடு பழகி ஒற்றுமையாக பணியாற்றுவீர்கள்.

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி  பூஜை 

கும்ப ராசி - தொழில்

கும்ப ராசியைச் சார்ந்த வியாபாரிகள் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் புதிய வாய்புகள் தேடி வரும். தொழில் முன்னேற்றம் என்றால் மகிழ்ச்சி இருக்கத் தானே செய்யும். அதுவும் சாதகமாக இருந்தால் உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கத்தானே செய்யும். உட்கார்ந்த இடத்தில மட்டுமன்றி வெளியிடத்திலும் சென்று தொழில் செய்ய வேண்டும் என்று நீங்கள் போட்ட திட்டங்கள் யாவும் இப்பொழுது செயல் வடிவம் பெறும். எனவே வெளியிடங்களுக்கு பயணம் செல்லத் தயாராக இருங்கள். நம்பினார் கைவிடப்படார். நீங்கள் உங்கள் பங்குதாரரை நம்பி செயலாற்றுங்கள். அவர்களும் உங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவார்கள். 

கும்ப ராசி - தொழில் வல்லுநர் 

கும்ப ராசியைச் சேர்ந்த தொழில் துறை வல்லுனர்கள் தங்களுக்கென ஒரு முத்திரை பதிக்கும் நேரம். தொழிலில் முன்னேற்றம் காணும் மாதம். உங்களின் முன்னேற்றம் என்பது பதவி உயர்வாகவும் இருக்கலாம், ஊதிய உயர்வாகவும் இருக்கலாம். நீங்கள் வெளி நாடு செல்வதற்கு கூட வாய்ப்பு ஏற்படலாம். உங்களின் உண்மையான, கடினமான, அர்பணிப்பான பணி தான் உங்களுக்கு முன்னேற்றத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.  அதே சமயத்தில் பணிகளில் பொறுப்பும் அதிகரிக்கும். நீங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பணி செய்ய வேண்டிய சூழ்நிலையும் இருக்கும். எதுவாக இருந்த போதிலும் அலுவலகத்தில் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நீங்கள் சிறந்த பலன்களைக் காணலாம். 

கும்ப ராசி - ஆரோக்கியம்

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் நீங்கள் திறம்பட செயலாற்ற முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவும் ஓய்வும் அவசியம். சரியான நேரத்தில் உணவு உண்பதும் வேலைக்கு நடுவே ஒய்வு எடுத்துக் கொள்வதும் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சிறப்பாக பராமரிக்க உதவியாக இருக்கும். இந்த மாதம் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தோல் ஒவ்வாமை மற்றும் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பிரச்சினைகள் ஏதாவது இருந்தாலும்  ஆரம்பக் கட்டத்திலேயே கவனமும் சிகிச்சையும் மேற்கொள்ளுங்கள். வருமுன் காப்பது அதை விட நல்லது.  

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

கும்ப ராசி - மாணவர்கள்

ஊக்கமும் உற்சாகமுமாய் நீங்கள் செயல்படுவதற்கான நேரம் இது.  உங்கள் எண்ணங்கள் யாவற்றிற்கும் செயல் வடிவம் அளிக்க முயற்சி செய்வீர்கள். அதில் நீங்கள் திருப்தியும் காண்பீர்கள். உயர் படிப்பு விஷயத்தில் சரியான பாதையில் செல்ல உங்கள் ஆசிரியர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். கல்வி நிறுவனங்களும் உங்களுக்கு நிதி உதவி அளிக்கத் தயாராக் இருக்கும். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்: 1,2,3,6,7,9,10,11,18,20,21,23,24,25,26,29,30,31.
அசுப தினங்கள்:  4,5,8,12,13,14,15,16,17,19,22,27,28.

banner

Leave a Reply

Submit Comment