Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

July Monthly Thulam Rasi Palangal 2019 Tamil

May 3, 2019 | Total Views : 1,526
Zoom In Zoom Out Print

துலாம் ராசி - பொதுப்பலன்கள்

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு ஓரளவு நல்ல மாதமாகவே இருக்கும். உங்கள் திறமையும், கடின உழைப்பும் வெற்றியைக் கொடுக்கும். இதன் மூலம் உங்கள் விருப்பங்களும் நிறைவேறும். உங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் உங்கள் மதிப்பு உயரும். நீங்கள் இப்பொழுது அடையும் பொருளாதார சுதந்திரம், உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நீங்கள் எடுக்கும் சில முக்கிய முடிவுகள், உங்களுக்கு பலனுள்ளதாக அமையும். சொற்களிலும், செயல்களிலும் வெளிப்படும் உங்கள் கண்ணியம், உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். துணிவுடன் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், சாதனையின் உச்சிக்கே உங்களை இட்டுச் செல்லக்கூடும். ஆனால், சில சமயங்களில் உங்கள் கவனமின்மை காரணமாக, சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம். எச்சரிக்கை தேவை. ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். 

துலாம் ராசி - காதல் / திருமணம்
 
இந்த மாதம், குடும்பத்தில் சில பிரச்சினைகள் எழலாம். இதனால் நெருங்கிய உறவுகளில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகளும் தோன்றலாம். இது உங்கள் அமைதியைக் குலைத்து, பாதுகாப்பின்மை உணர்வையும், எதிர்மறை எண்ணங்களையும்  தோற்றுவிக்கலாம். எனவே, நேர்மறை உணர்வுகளையும், நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளவும்.   

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு  பூஜை

துலாம் ராசி - நிதி  

இந்த மாதம், நிதி தொடர்பான பலன்கள் கலந்து காணப்படும். பொருளாதாரத் தேவைகள் சிறிய தாமதங்களுக்குப் பின் நிறைவேறும். உங்கள் சேமிப்பிலிருந்து கணிசமான தொகையை, செலவுகளுக்காக  இப்பொழுது பயன்படுத்த வேண்டி வரலாம். கடன் பெற விண்ணப்பித்தீர்கள் என்றால், அது உங்களுக்குத் தடையின்றிக்  கிடைக்கும். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: அங்காரக  பூஜை

துலாம் ராசி - வேலை

பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். உரிய அதிகாரத்துடன் பணியாற்ற இயலும். முழு ஆற்றலுடனும்,  உற்சாகத்துடனும் செயலாற்றி உங்கள் இலக்குகளை நீங்கள் எட்டுவீர்கள். உங்கள் யோசனைகள் மற்றும் திட்டங்கள் செயல் வடிவம் பெறும். முயற்சிகளுக்கு சிறந்த பலன் கிட்டும். உங்கள் கடின உழைப்பு உரிய அங்கீகாரம் பெறும். பதவி உயர்வு போன்ற நன்மைகள் விளையும். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன்  பூஜை

துலாம் ராசி - தொழில்
 
இந்த காலகட்டத்தில், தொழிலில் கவனம் தேவை. அதில், எதிர்பார்த்த முன்னேற்றமோ, லாபமோ கிடைக்காமல் போகலாம். பங்குதாரர்களும் முக்கிய பணிகளைத் தவிர்க்க முயற்சிக்கலாம். எனவே, ஒவ்வொரு கட்டத்திலும், நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி வரும். இதனால் எதிர்மறை எண்ணங்கள் எழலாம். ஆகவே, கோபம், வாக்குவாதம் சச்சரவுகள் போன்றவற்றைத் தவிர்க்க முயலுங்கள். இந்த நேரத்தில், தொழில் துறையில் துணிகர முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. 

துலாம் ராசி - தொழில் வல்லுனர்கள் 

இது, தொழில் வல்லுனர்களுக்கு சிறப்பான மாதமாக அமையும். தொழிலில் மேன்மை அடையும் வாய்ப்பு ஏற்படும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பலவழிகளில் பண வரவு ஏற்படும். இதனால் மனதில் திருப்தி மிகுந்து காணப்படும். ஆனால், எந்தவித வாக்குவாதத்தையும் தவிர்த்து விடுவது நல்லது. இல்லாவிடில், உங்கள் மதிப்பும், மரியாதையும் குறைந்து போகலாம். ஆர்வக்கோளாறு போன்றவற்றையும் இப்பொழுது, கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் செயல்பாடுகள் எப்பொழுதும் நேர்மையாகவே இருக்கட்டும்.  

துலாம் ராசி - ஆரோக்கியம் 

இந்த மாதம், உங்கள் உடல்நிலை சிறப்பாகவே இருக்கும். இதனால், நீங்கள் மிகுந்த ஆர்வத்துடனும், ஆற்றலுடனும் செயலாற்ற முடியும். ஆனால், குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பாக, நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டி வரும். உங்களது உற்சாகமும், ஒத்துழைப்பும், குடும்பத்திற்கு ஆதரவாகவும், உதவிகரமாகவும் இருக்கும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை

துலாம் ராசி - மாணவர்கள் 

மாணவர்களின் அறிவுத் திறன் நன்கு பிரகாசிக்கும். பிறருக்கு உதவும் உங்கள் பண்பும், பணிவும், அடக்கமும் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் பெற்றுத் தரும். நண்பர்களிடம் உங்கள் மதிப்பு உயரும். நன்நடத்தை பாராட்டு பெறும். மேற் படிப்பு குறித்து நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும், நல்ல பலன் தரும். 

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை

சுப தினங்கள்: 4,5,7,11,12,13,14,16,17,18,19,20,22,23,24,30.
அசுப தினங்கள்: 1,2,3,6,8,9,10,15,21,25,26,27,28,29,31.

banner

Leave a Reply

Submit Comment