Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

July Monthly Simmam Rasi Palangal 2019 Tamil

May 3, 2019 | Total Views : 999
Zoom In Zoom Out Print

சிம்ம ராசி - பொதுப்பலன்கள்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் வேலைகள் அனைத்தும், குறைகள் எதுவுமின்றி முழுமையாக நிறைவேறும். நீங்கள் இப்பொழுது, பொதுக் காரியங்கள் மற்றும் சமூக சேவைகளில் உங்களை பெரிதும் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இதனால் உங்கள் மதிப்பு உயரும். பலரும் உங்கள் வழிகாட்டுதலைப் பின்பற்றும் நிலை ஏற்படும். இதன் மூலம், உங்களுக்கு ஆத்ம திருப்தியும் கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள், பயனுள்ளதாக அமையும்; திருப்தியையும் அளிக்கும். ஆனால், உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான சிலரே உங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். கவலை வேண்டாம். உங்கள் நற்பெயர்,  நம்பகத்தன்மை மூலம் நீங்கள் இவற்றிலிருந்து மீள்வீர்கள். சில நேரங்களில், அலைமோதும் எண்ணங்கள் காரணமாக, நீங்கள் உணர்ச்சி வசப்படலாம்; சிந்தனை மற்றும் செயல்களில் தடுமாற்றங்களும்  ஏற்படலாம். இது உறவுமுறையை பாதிக்கக் கூடும். எனவே எச்சரிக்கையாக இருக்கவும். எனினும், உங்கள் பணிகளைத் தயக்கமின்றித் தொடருங்கள். இறுதியில் நல்ல பலன்களே விளையும். கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, சிலர், தேவையற்ற செலவுகளைச் செய்வீர்கள். எனவே, சேமிப்புகள், கையிருப்புகள் போன்றவற்றை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் இனிய சுபாவம் காரணமாக, குடும்பத்திலும், சமூக வட்டத்திலும் உங்கள் உறவு மேம்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

சிம்ம ராசி - காதல் / திருமணம்

துணையுடனான காதல் மற்றும் திருமண உறவுகள் மனநிறைவு தரும். காதல் விஷயங்களில், உங்கள் நடவடிக்கைகள் அந்த உறவை வலுப்படுத்துவதாக அமையும். குடும்ப விவகாரங்களில் முக்கிய முடிவுகளை, மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே எடுப்பது நல்லது. தக்க முயற்சி செய்தால், திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்புள்ளது. 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு  பூஜை

சிம்ம ராசி - நிதி 

நிதிநிலை சுமாராக இருக்கும். அவ்வப்போது சிறிது ஏறத்தாழ்வுகள் ஏற்படலாம். இந்த நேரத்தில், குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் அளியுங்கள். உறவினர்கள், தேவைப்படும் நேரத்தில் பண உதவி செய்து உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன்  பூஜை

சிம்ம ராசி - வேலை

வேலையைப் பொறுத்தவரை, இந்த மாதம், நல்லவை, அல்லாதவை என  பலன்கள் கலந்து காணப்படும். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களுடன், நல்லுறவைப் பராமரிப்பதில் சில தடைகள் எழலாம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் சில குறைபாடுகள் நேரலாம். இது உங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கலாம். எனவே, விட்டுக் கொடுத்து, நெளிவு சுளிவு அறிந்து நடந்து கொள்வது நன்மை பயக்கும். எனினும், சிலருடனான தொடர்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். பணி தொடர்பான பயணங்கள் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை

சிம்ம ராசி - தொழில் 

தொழில் வளர்ச்சிக்கு இது மிக நல்ல காலமாக அமையும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். தொழில் மனநிறைவு தரும். கடின உழைப்பின் மூலம் நீங்கள் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால், தொழிலில் பெரும் வெற்றி பெறலாம். சில வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, வேறு சில பணிகளை நீங்கள் ஒத்திவைக்கக் கூடும். ஆனால் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவேறும். நீங்கள் இப்பொழுது, சமூக சேவையிலும் பங்கு கொண்டு சிறப்பாக பணியாற்றுவீர்கள். 

சிம்ம ராசி - தொழில் வல்லுனர்
 
தொழில் வல்லுனர்கள் ஏற்றம் காணும் நேரம் இது. தியானப் பயிற்சிகள்  மூலம், மன ஆற்றலை வளர்த்துக் கொண்டு, நீங்கள் நல்ல பயன்பெற முடியும். இதன் மூலம் சவாலான பணிகளையும் வெற்றிகரமாக சந்திக்க இயலும். சக பணியாளர்களும் உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு நல்குவார்கள். மேலதிகாரிகளுடனான உங்கள் தொடர்பு வலுப்பெறும்.  எனினும், அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். தொழிலை விரிவுபடுத்த, பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். 

சிம்ம ராசி - ஆரோக்கியம் 

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். பணிச்சுமை காரணமாக, உடல் வலி ஏற்படலாம். தொண்டை வலி போன்ற பிரச்சினைகளும் எழலாம். குளிர்ந்த தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும். தகுந்த உடற் பயிற்சிகளை மேற்கொள்ளவும். தியானம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.  

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை

சிம்ம ராசி - மாணவர்கள்

மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் தேவைப்படும் காலம் இது. எதையாவது சாதிக்க வேண்டும்’ என்ற எண்ணம் உங்களை அலைக்கழிக்கக் கூடும். இதனால் மனம் அமைதியிழக்கவும் நேரிடலாம் இருப்பினும், இந்த மாதம், உங்கள் சாதனைகளை நினைத்து நீங்கள் பெருமைப்படும விதமாக அமையும்.

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை

சுப தினங்கள்: 4,5,7,11,12,13,14,16,17,18,19,20,27,28,29,30.
அசுப தினங்கள்: 1,2,3,6,8,9,10,15,21,22,23,24,25,26,31.

banner

Leave a Reply

Submit Comment