Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

July Monthly Midhunam Rasi Palangal 2019 Tamil

May 2, 2019 | Total Views : 1,086
Zoom In Zoom Out Print

மிதுன ராசி - பொதுப்பலன்கள்

மிதுன ராசி அன்பர்களே! இது பல வகைகளிலும் உங்களுக்கு முன்னேற்றம் தரும் மாதமாக விளங்கும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள், உங்களுக்கு நல்ல பலன் தரும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்புகள் உங்களை நாடி வரும். உங்கள் ஊக்கமும், செயல் திறனும் மற்றவர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றுத் தரும். ஆயினும், பணிகளை சிறப்பாக முடிக்க நீங்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். முடிவுகள் எடுப்பதிலும் அவசரம் வேண்டாம். உங்கள் செயல்களுக்கான பலன்களும் சில நேரம் தாமதமாகக் கிடைக்கலாம். அதுவரை பொறுமை காக்கவும். சில நேரங்களில், உங்கள் தயக்கம், உறவு முறைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஆனால் கவலை வேண்டாம். உங்களுக்கு நெருங்கியவர்களே, இது போன்ற இக்கட்டுகளிலிருந்து வெளிவர உங்களுக்கு உதவுவார்கள். ஆரோக்கியத்தில் முறையான கவனம் தேவை. 

மிதுன ராசி - காதல் / திருமணம்

நீங்கள், மனத் தெளிவுடனும், தாராள அணுகுமுறையுடனும் செயலாற்ற வேண்டிய காலம் இது. இதனால் உறவுகள் மேம்படும். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். சில சமயங்களில், உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் நடந்து கொள்ளும் முறை, உங்களுக்கு எரிச்சல் தரலாம். திருமண வயதில் உள்ளவர்களுக்கு, கடும் முயற்சிக்குப் பின்னர், தகுந்த துணை அமைய வாய்ப்புள்ளது.

   

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை 

மிதுன ராசி - நிதி  

இந்த மாதம், உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நல்ல பணப்புழக்கமும் காணப்படும். இதனால், உங்கள் தேவைகள் எளிதில் நிறைவேறும். செலவுகளும் சாதாரணமாகவே இருக்கும்; நியாயமான காரணங்களுக்காகச் செய்யப்படுபவையாகவும் இருக்கும். தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நண்பர்களிடமிருந்து பணம் கடனாகக் கேட்டால், அதுவும் தாராளமாகக் கிடைக்கும்.   

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: ராகு பூஜை

மிதுன ராசி - வேலை

அலுவலகம், வேலை போன்றவை நன்றாகவே இருக்கும். எனினும், நன்கு யோசித்து, விவேகத்துடன் முடிவெடுக்கவும். இதில் அவசரம் வேண்டாம். சில நேரங்களில், நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு, பொறுமை இழக்கக் கூடும். எச்சரிக்கையாக இருக்கவும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். நீங்கள் விழிப்புடன் இருந்து, அவற்றை  சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பணியிடத்தில் உங்கள் யோசனைகளுக்கும், பரிந்துரைகளுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடன் உங்கள் தொடர்பு வலுப்படும்.   

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு பூஜை

மிதுன ராசி - தொழில் 

தொழில் துறையில் உள்ளவர்களுக்கு இது சிறந்த மாதமாக அமையும். உங்கள் இலக்குகளை எட்ட, முழு ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் செயலாற்றுவீர்கள். எனவே, முன்னேற்றமும், ஆதாயமும் பெற, இது மிகவும் உகந்த தருணமாகும். உங்கள் யோசனைகள் நல்ல முறையில் செயல் வடிவம் பெறும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் தீவிர முயற்சிகள், நல்ல பலன்களைப் பெற்றுத் தரும். 

மிதுன ராசி - தொழில் வல்லுனர் 

தொழில் வல்லுனர்களுக்கும், இது ஒரு நல்ல மாதமாகவே விளங்கும். உங்கள் நிர்வாகத் திறன் பளிச்சிடும். வேலை மட்டுமின்றி, உங்கள் சமுதாயச் செயல்பாடுகளும் சிறந்து விளங்கும். தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையும்; இதனால் நல்ல ஆதாயமும் கிடைக்கும். நீங்கள் பன்முகத்திறமையோடு செயலாற்றினால், உங்கள் பணி மேலும் சிறக்கும்; அங்கீகாரமும் பெறும்.  

மிதுன ராசி - ஆரோக்கியம் 

இந்த நேரத்தில், நீங்கள், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சளி, இருமல் மற்றும் கண்களில் ஏற்படும் பிரச்சினை காரணமாக நீங்கள் அவதிப்பட நேரலாம். தேவை ஏற்படும் பொழுது எல்லாம், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளத் தவறாதீர்கள். வழக்கமான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.  

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: புதன்  பூஜை

மிதுன ராசி - மாணவர்கள் 

இந்த மாதம் மாணவர்களுக்கு, படிப்பில் ஆர்வம் குறையலாம். நண்பர்களுடன் உல்லாசப் பயணம் செல்வது, அவர்களுடன் பொழுது போக்குவது  போன்றவற்றில் உங்கள் நேரத்தைச் செலவிடலாம். சோம்பலும் உங்களை பாதிக்கலாம். இவற்றின் காரணமாக, மேற்படிப்பு குறித்த நல்ல வாய்ப்புகளை நீங்கள் தவறவும் விட்டுவிடலாம். எச்சரிக்கை தேவை. படிப்பு விஷயத்தில் இப்பொழுது, அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். சிறிய விஷயங்களையும் பெரிது படுத்தாதீர்கள்.

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை

சுப தினங்கள் : 4,5,7,11,12,13,14,16,20,22,23,24,27,28,29,30
அசுப தினங்கள் : 1,2,3,6,8,9,10,15,17,18,19,21,25,26,31

banner

Leave a Reply

Submit Comment