மகர ராசி - பொதுப்பலன்கள்
மகர ராசி அன்பர்களே! இந்த மாதம், கடினமாக சில சூழ்நிலைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும். உங்கள் மனநிலையில், ஏற்றத்தாழ்வுகளும், மாற்றங்களும் இருந்து கொண்டே இருக்கும். எண்ணங்களை சீராக்கி, மனதை ஒருநிலைப்படுத்த நீங்கள் யோகப் பயிற்சி மேற்கொள்வது நல்லது. பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்வதும், இந்நேரத்தில் நன்மை தரும். எனினும், தன்னம்பிக்கையுடன் செயலாற்றினால், நுட்பமான பிரச்சினைகளையும் உங்களால் எளிதில் சமாளிக்க முடியும். குடும்பத்தினருடன் நல்லுறவைப் பராமரிப்பீர்கள். குழந்தைகளின் வளர்ச்சி, உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கும். பேச்சு மற்றும் உரையாடல் திறன் மூலம் நன்மைகள் விளையும். இதனால் பல பிரச்சினைகளும் தீரும். உங்கள் சாதுரியமான நடவடிக்கைகளும், சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ளும் நடைமுறைத் திறனும், சிறந்த முடிவுகளை எடுக்க உதவும். இப்பொழுது, சமூக விழாக்களில் கலந்து கொள்ள அதிக ஆர்வம் இருக்காது. ஆனால், உங்களது சில செயல்கள் காரணமாக, பதட்டம் ஏற்படலாம்; இதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப் படலாம். எச்சரிக்கையாக இருக்கவும்.
மகர ராசி - காதல் / திருமணம்
பேச்சு, செயல் இரண்டிலும், கவனம் தேவைப்படும் காலம் இது. வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் மனம் திறந்து பேசுவதும், கலந்துறவாடுவதும், உங்கள் இருவரிடையே நல்லுறவு நிலவத் துணைபுரியும். உங்களின் சீரிய அணுகுமுறை, குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை நன்கு சமாளிக்க உதவும். நீங்கள் பொறுமையைக் கடைபிடிப்பதும், உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதும், காதல் மற்றும் குடும்ப உறவுகளில் அமைதியை ஏற்படுத்தும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை
மகர ராசி - நிதி
நிதிநிலை, ஆதாயம் தரும் வகையில் அமையும். பொருளாதாரத்தில் ஸ்திரத் தன்மையும் காணப்படும். பழுதுபார்ப்பு, பராமரிப்பு, அல்லது புனரமைப்புப் பணிகளுக்காக, இந்த மாதம் உங்கள் சேமிப்பிலிருந்து சிறிய அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கலாம். சுப காரியங்கள் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளுக்காகவும், நீங்கள் பணம் செலவு செய்வீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: குரு பூஜை
மகர ராசி - வேலை
உங்கள் கருத்துக்களும், திட்டங்களும், பணியில் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். முடிக்கப்படாமல், நிலுவையில் இருக்கும் பணிகளை, முழுமுயற்சி செய்து, குறித்தநேரத்தில் உங்களால் முடித்து விட இயலும். புதிய வேலை வாய்ப்புகளும் இப்பொழுது உருவாகும். உங்கள் நன்மதிப்பிற்கு சில பாதகங்கள் வரக் கூடும். எச்சரிக்கையாக இருந்தால், அவற்றைத் தவிர்த்து விடலாம்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: அங்காரக பூஜை
மகர ராசி - தொழில்
தொழில் துறையில், உங்கள் பணிகளை முடிப்பதில் சில தாமதங்கள் ஏற்படலாம். நீங்கள் சிறிது கூடுதல் முயற்சி செய்தால், இவை சாதாரணமாக நடந்து முடிந்து விடும். தொழில் போட்டி பலமாக இருக்கும். இது உங்களுக்கு சவாலாக அமையும். போட்டியாளர்களிடம் சண்டை, சச்சரவுகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். பொதுவாக, தொழில் முன்னேற்றம் மந்தமாக இருக்கக் கூடும். வாடிக்கையாளர்களிடம் ஆழ்ந்த தொடர்பு வைத்துக் கொள்வதும், நல்ல முறையில் தகவல் பரிமாறிக் கொள்வதும் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
மகர ராசி - தொழில் வல்லுனர்கள்
தொழில் வல்லுனர்கள் சீரான வளர்ச்சி காண்பார்கள். மேலதிகாரிகள் மதிப்புடன் பழகுவார்கள். அவர்களின் ஆதரவு, மனநிறைவு அளிப்பதாக இருக்கும். உங்கள் பணிகள், உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணைபுரிவதாக விளங்கும். வேலையில் உங்கள் அர்ப்பணிப்பு உணர்வும், கண்டிப்பான அணுகுமுறையும், பணியிடத்தில் உங்களுக்கு நல்ல மரியாதையைப் பெற்றுத் தரும்.
மகர ராசி - ஆரோக்கியம்
உங்கள் உடல்நிலை சுமாராகவே இருக்கும். உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, உணவில், பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான பானங்களையும் அருந்துங்கள். உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திலும், நீங்கள் இப்பொழுது கவனம் செலுத்துவது நல்லது.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
மகர ராசி - மாணவர்கள்
மாணவர்கள் தங்கள் பாடங்களை, உடனுக்குடன், முறையாகப் படிப்பது நன்மை பயக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், அதிக நற்பலன்கள் விளையும். ஆசிரியர்கள் உங்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்டிருப்பர்கள். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் உண்டாகும். தியானம் மேற்கொள்வதன் மூலம், கல்வியில், மேலும் சிறந்த பலன்களைப் பெற முடியும். மேற்படிப்புக்காக, சிலர், பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 4,5,11,12,13,14,16,17,18,19,20,22,23,24,27,28,29,30.
அசுப தினங்கள்: 1,2,3,6,7,8,9,10,15,21,25,26,31.

Leave a Reply