Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

2019 April Month’s Rasi Palan for Meenam

March 6, 2019 | Total Views : 1,601
Zoom In Zoom Out Print

மீனம் ராசி - பொதுப்பலன்கள்

இந்த மாதம் நீங்கள் ஈடுபாட்டுடன் செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எனவே நீங்கள் சிறப்பான விஷங்களை மேற்கொள்ள சிறந்த மாதம் ஆகும். உங்கள் சிறந்த அணுகுமுறையால் நீங்கள் வெற்றி காண்பீர்கள். நீங்களாக எடுக்கும் முடிவுகள் சில சமயங்களில் உங்களுக்கு பாதகமான விளைவுகளை அளிக்கலாம்.  எனவே நீங்கள் சற்று கவனமாகவும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.  இந்த மாதம் உங்கள் வாழ்கையின் ஆதாரமாகிய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிரச்சினையற்ற சீரான பொருளாதார நிலை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பணியில் உங்கள் பொறுப்புகள் அதிகமாகும். எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்கள் அறிவாற்றல் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பெயர் மற்றும் புகழ் அதிகரிக்கும். உங்கள் உடல்நலம் சாதாரணமாக இருக்கும். மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

மீனம் ராசி - காதல் / திருமணம்

சுற்றத்தாரை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உறவை நன்கு பராமரிக்க முடியும். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருடனும் நல்லுறவு பராமரிப்பதன் மூலம் அமைதியை தக்க வைத்துக் கொள்ள முடியும். நல்லுறவு பராமரிக்க உணமையாகவும் நடந்து கொள்ள வேண்டும். பதட்டமான சூழ்நிலைகள் இந்த மாதம் உருவாகும் என்பதால் நீங்கள் பொறுமையுடன் இருங்கள். எந்தவித அவசர முடிவுகளையும் எடுக்காதீர்கள். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சந்திரன் பூஜை

மீனம் ராசி - நிதி

பொருளாதாரமே ஒருவரின் வாழ்கைக்கு ஆதாரம். இந்த மாதம் உங்கள் வாழ்கையின் ஆதாரமாகிய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிரச்சினையற்ற சீரான பொருளாதார நிலை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இந்த மகிழ்ச்சியை நீங்கள் உறவினர்களுடன் இணைந்து கொண்டாடுவீர்கள். அதற்காக பணம் செலவு செய்வீர்கள். அதற்காக வீண் செலவுகளை செய்யாதீர்கள். செலவுகளில் கட்டுப்பாடு வேண்டும். நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் நிதி உதவி செய்வீர்கள்.


நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: செவ்வாய்  பூஜை

மீனம் ராசி - வேலை

இந்த மாதம் நீங்கள் பணியைப் பொறுத்தவரை அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. நீங்கள் கடினமாக முயன்றால் தான் நல்ல பலன்களைப் பெற முடியும். பணயில் உங்கள் பொறுப்புகள் அதிகமாகும்.சக பணியாளர்களுடன் உரையாட வேண்டிய அவசியம் இருந்தால் எதைப் பற்றி பேச வேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள். தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள. 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு  பூஜை 

மீனம் ராசி - தொழில் 

சிதறிய காரியம் பதறிப் போகும். எனவே நீங்கள் உங்கள் கவனம் சிதறாமல் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திட்டமிட்டு பணிபுரிவதன் மூலம் நீங்கள் உங்கள் வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளலாம். சீராக இயங்கும் வியாபர நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தியை அளிக்கும். உங்கள் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் நட்பு ரீதியாக பழகுவீர்கள். பயணங்களுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். 

மீனம் ராசி - தொழில் வல்லுநர்

இந்த மாதம் நீங்கள் தேனியைப் போல சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். எனவே பணிகளை உரிய நேரத்தில் முடித்து உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பணியாற்றுவீர்கள். இது உங்களுக்கு பல நற்பலன்களை பெற்றுத் தரும். கடினமான பணிகளைக் கூட நீங்கள் எளிதாக மேற்கொள்வீர்கள். உங்கள் எண்ணங்களை பிறர் புரிந்து கொள்ளும்படி வெளிப்படையாகப் பேசுவீர்கள். 

மீனம் ராசி - ஆரோக்கியம்

ஆரோக்கியமான உணவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.  குறிப்பாக கால்சியம் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். கால்சியம் சத்து குறைபாட்டால் நீங்கள் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஆளாக நேரும். அதிக வேலைகள் இருந்தாலும் ஒய்விற்கென சிறிது நேரம் ஒதுக்காவிடில் உடல் வலி போன்ற உபாதைகள் ஏற்படும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

மீனம் ராசி - மாணவர்கள் 

மீன ராசி மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு அழகு கீழ்படிந்து நடத்தலே ஆகும். நீங்கள் உங்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் பேச்சை கேட்டு நடந்து கொள்ள வேண்டும். மேல்படிப்பு சம்பந்தமாக நீங்கள் நன்கு யோசித்து புத்திசாலித்தனமாக முடிவு எடுக்க வேண்டும். சிறந்த கல்வி நிறுவனம், சிறந்த துறை என சிறப்பாக தேர்வு செய்தால் தான் உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். எனவே நீங்கள் பொறுமையுடனும் பெரியவர்களின் வழிகாட்டுதலுடனும் செயல்படுவது உங்களுக்கு நன்மை தரும். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்   :   1,2,3,7,8,10,11,12,15,16,17,22,24,25,26,29,30.
அசுப தினங்கள்:  4,5,6,9,13,14,18,19,20,21,23,27,28.

banner

Leave a Reply

Submit Comment