Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

2019 April Month’s Rasi Palan for Dhanusu

March 6, 2019 | Total Views : 2,031
Zoom In Zoom Out Print

தனுசு ராசி - பொதுப்பலன்கள்

தனுசு ராசி அன்பர்களே! நீங்கள் இந்த மாதம் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பதறாமல் கவனமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு அதிகமான பொறுப்புகள் கொடுக்கப்படும் காரணத்தால் பணிகளும் அதிகமாக இருக்கும். வழக்கமான பணிகளுடன் சில கூடுதல் பணிகள் சேரும் போது உங்கள் கவனம் சிதற வாய்ப்புள்ளது. மேலும் நேரமின்மை காணப்படும். இதனால் நீங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம். தவறைக் கண்டுபிடித்து குறை கூறுவதற்கென்று நாலு பேர் தயாராக இருப்பார்கள். பணியில் தவறுகளையும் தவிர்க்க வேண்டும். சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும். இதற்கு ஒரே வழி நீங்கள் கவனமாக பணிகளை முடிக்க முயற்சி எடுக்க வேண்டும். உங்களிடம் தான் திறமை இருக்கிறதே. பிறகென்ன. திறமையுடன் கவனமாக பணியாற்றுங்கள். நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேண உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். 

தனுசு ராசி - காதல்/திருமணம்

சேர்ந்து வாழும் போது சோர்வான நேரத்தில் கூட சொர்கத்தைக் காணலாம். இந்த மாதம் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான முறையில் சேர்ந்து வாழ்ந்து சொர்கத்தைக் காண்பீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். பிறகென்ன. இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் அன்பு வெள்ளத்தில் மிதப்பீர்கள். அக்கறையான பராமரிப்பை மேற்கொள்வீர்கள். திருமணத்திற்கு தயாராக இருப்பவர்களுக்கு சிறந்த வரன் அமையும் மாதம் இது. 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: செவ்வாய் பூஜை       

தனுசு ராசி - நிதி 

இந்த மாதம் நீங்கள் வாங்கும் வருமானம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளப் போதுமானதாக இருக்கும். நீங்கள் ஆடம்பரமான செலவுகளை செய்ய விரும்புவீர்கள். சுயநலமாக இல்லாமல் உங்கள் குடும்பத்தினரின் தேவைகளையும் புரிந்து அவற்றையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டிய நேரம் இது. அவர்களின் தேவைகளுக்கும் நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால்  அதனை வசூல் செய்ய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். 

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சனி  பூஜை    

தனுசு ராசி - வேலை

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பதை கருத்தில் கொண்டு நீங்கள் சிறப்பான முயற்சிகளை எடுக்க வேண்டிய தருணம் இது. நடைமுறைக்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் நீங்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். தன்னம்பிக்கையைத்  தளர விடாமல் நீங்கள் முயற்சி செய்து உங்களுக்கு மேலதிகாரிகளால் இடப்பட்ட பணிகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன்  பூஜை

தனுசு ராசி - தொழில்

இந்த மாதம் உங்கள் வியாபாரம் மெதுவாக நடந்தாலும் சீராக நடக்கும். தொழிலில் உங்கள் கூட்டாளிகளின் கருத்துக்கும் நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தொழில் அபிவிருத்திக்கு நீங்கள் புதிய திட்டங்களை வகுப்பீர்கள். அதில் வெற்றி கண்டு உங்களைச் சுற்றியுள்ளவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் நன்மதிப்பு மேலும் கூடும். 

தனுசு ராசி - தொழில் வல்லுநர் 

நேரம் நன்றாக இருந்தால் நடப்பவை யாவும் நன்றாக நடக்கும். நீங்கள் உங்கள் பணிகளை மிகச் சிறப்பாகவும் குறித்த நேரத்திற்குள்ளும் முடிப்பீர்கள். எனவே உங்களுக்கு பணியைப் பொறுத்தவரை எந்த பாதிப்பும் இல்லாமல் அமைதியான நிலை காணப்படும். காலம் கூடி வரும் போது கூட இருப்பவர்களும் அனுசரனையாக இருப்பார்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். பிறகென்ன. செல்லுமிடமெல்லாம் உங்களுக்கு நல்ல பெயரும் மதிப்பும் கிடைக்கும். இன்னுமொரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். 

தனுசு ராசி - ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. எந்தப் பிரச்சினை என்றாலும் முளையிலேயே கிள்ளி எறிவது தான் நல்லது. உங்கள் ஆரோக்கியத்தில் கூட சிறிய அளவிலான பிரச்சினைகள் காணப்பட்டாலும் நீங்கள் உடனடியாக கவனிக்க வேண்டும். உண்ணும் உணவிற்கும் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள். எண்ணெய் வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

தனுசு ராசி - மாணவர்கள் 

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கேற்ப நீங்கள் முயற்சி செய்தால் கல்வியில் சிறந்து விளங்க முடியும். வெற்றிப்பாதையை நோக்கி நீங்கள் அடிவைப்பதில் காணப்படும் மந்த நிலையை உங்கள் முயற்சியால் முறியடிக்க வேண்டும். சக மாணவர்களுடன் நீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் அவர்களுடனான நெருக்கமும் உறவும் அதிகரிக்கும். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:    1,2,3,7,8,10,11,12,15,16,17,19,21,22,24,25,26,29,30.
அசுப தினங்கள்:   4,5,6,9,13,14,18,20,23,27,28.

banner

Leave a Reply

Submit Comment