Dattatreya Jayanthi 2023: Power Day to Invoke Dattatreya to Remedy Problems in Life, Regain Prosperity & Attain Material Fulfillment Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2019 April Month’s Rasi Palan for Thulam

March 6, 2019 | Total Views : 2,647
Zoom In Zoom Out Print

துலாம் ராசி  -  பொதுப்பலன்கள்  

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். நல்லதே நடக்கும். நன்மைகள் கிடைக்கும். நண்பர்களுடன் உறவு சிறப்பாக இருக்கும். வீட்டிலும் சுமூகமான உறவு காணப்படும். எண்ணங்கள் யாவும் செயல்வடிவம் பெறும். குடும்பத்தினர் உங்களை நல்ல முறையில் புரிந்து கொள்ளும் நேரம் இது. வெற்றி உங்கள் வீட்டு வாயிற் கதவை தட்டும். உங்கள் முடிவுகள் பிறரால் எற்றுக் கொள்ளப்படும். எல்லாமே சந்தோஷமான விஷயங்கள் தான். இதே சந்தோஷத்தில் நீங்கள் வெளியிடத்திலும் அதவாது சமூகத்திலும் பழகுவீர்கள். கலகலப்பாக பழகுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடக்கும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். 

துலாம் ராசி  - காதல் / திருமணம் 

இந்த மாதம் துலாம் காதலர்களின் காதல் பயணம் கேளிக்கை மிகுந்ததாக இருக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்கள். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கை சீராக செல்வதைக் காண்பார்கள். தங்கள் ஆலோசனை மூலம் குடும்பத்தினரை வழி நடத்துவார்கள். திருமணமாகாதவர்களுக்கு கெட்டி மேளம் கொட்டும் நேரம் கை கூடி வந்து விட்டது. 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை

துலாம் ராசி  - நிதி

வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குவது பொருளாதாரம். இந்த மாதம் நீங்கள் பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ள ஏற்ற நேரமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் பயணத்தின் போது பல செலவினங்களை சந்திக்க நேரும் என்பதால் பொறுமையும் சிக்கனமும் கடைபிடிக்க வேண்டும். செலவுகளை குறைப்பதே சேமிப்பு தானே. இந்த வகையில் நீங்கள் பணத்தை சேமித்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணலாம். நீங்கள் அசையா சொத்துக்களில் பணத்தை  முதலீடு செய்வீர்கள். அது உங்களுக்குத் திருப்தியை அளிக்கும்.  

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: செவ்வாய்  பூஜை

துலாம் ராசி  - வேலை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கேற்ப நீங்கள் உங்கள் அலுவலகத்தில் அனைவரிடமும் குறிப்பாக உங்கள் கீழ் பணி புரிபவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் நீங்கள் நன்மை பெறலாம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல அதே சமயத்தில் நீங்கள் உங்கள் திறமையையும் வெளிப்படையாக நிரூபிக்கலாம். எனவே உங்களுக்கு சாதகமாக உள்ள இந்த நேரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களைத்தேடி வரும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். அதே சமயத்தில் பொறுமையையும் மேற்கொள்ளத்  தவறாதீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன்  பூஜை 

துலாம் ராசி  - தொழில்

நாளை செய்வோம் என்று எதையும் நீங்கள் ஒத்திப் போடாதீர்கள். இன்றே அதையும் இப்பொழுதே முடிக்க வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டு அவற்றை முடித்து விடுங்கள்.நீங்கள் எதை தருகிறீர்களோ அதைத் தான் பெற முடியும். நீங்கள் வாடிக்கையாளர்களுடன் நடந்து கொள்ளும் விதம் தான் அவர்கள்  உங்களை அணுகவும் விலகவும் வழி செய்யும். எனவே அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். உங்கள் பேச்சிலும் செயலிலும் ஒரு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.  நீங்கள் அளிக்கும் பொறுப்புகளை உங்கள் தொழில் கூட்டாளிகள் சிறந்த முறையில்  நேர்மையுடன் முடித்து அளிப்பார்கள். 

துலாம் ராசி  -  தொழில்வல்லுநர்

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை எனலாம். நீங்கள் பணியிடத்தில் பிறருடன் ஒத்துப் போவது தான் உங்களுக்கும் நன்மை பயக்கும். அம்மாதிரி சூழ்நிலையில் கடுமையான காலக் கட்டங்களைக் கூட நீங்கள் எளிதாக அணுகலாம். எனவே பணிகள் அதிகமாக காணப்பட்டாலும் உங்கள் மனதில் அமைதியை வளர்த்துக் கொண்டு சிறிது கூடுதலாக முயற்சி செய்தால் உங்கள் பணிகளை செவ்வனே முடிக்கலாம். இவற்றுடன் உங்கள் நேர்மை குணமும் சேரும் போது உங்கள் செல்வாக்கு, பதவி, ஊதியம் அனைத்திலும் நீங்கள் முன்னேற்றத்தைக் காணலாம். பணி தொடர்பான பயணங்களுக்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

துலாம் ராசி  - ஆரோக்கியம்

ஆரோக்கியமான உணவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். குறிப்பாக கால்சியம் சத்து அதிகமுள்ள உணவை உண்ணுங்கள். கால்சியம் குறைபாடு காரணமாக மூட்டு வலி மற்றும் பலவீனம் காரணமாக கீழே விழும் அபாயம் கூட ஏற்படலாம். எனவே கவனமாக இருங்கள். உணவுக்கு அடுத்தபடியாக நம் ஆரோக்கியத்தைப் பேண உதவுவது நல்ல தூக்கமும் ஓய்வும் தான். அதையும் முறையாக மேற்கொள்ளுங்கள். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

துலாம் ராசி  -  மாணவர்கள்

துலாம் ராசி மாணவர்களுக்கு கல்வியைப் பொறுத்தவரை இந்த மாதம் மகிழ்ச்சியும் திருப்திகரமான நிலையும் காணப்படும். நீங்கள் உங்கள் முயற்சிகள் மூலம் பல சாதனைகளை படைப்பீர்கள். நாம் நன்றாக படிப்பது ஒரு புறம் இருந்தாலும் பிறரின் பாராட்டு உற்சாகத்தை அள்ளித் தரும். அந்த வகையில்  உங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்று நீங்கள் மிகுந்த உற்சாகம் அடைவீர்கள்.  உங்கள் பெற்றோருக்கும் பெருமையை தேடித் தருவீர்கள். உற்ற நண்பர்கள் இருந்துவிட்டால் ஊழ்வினை காலத்தைக் கூட எளிதாக கடந்து விடலாம். எனவே நீங்கள் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் எதிர்காலத்திற்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் நுட்ப படிப்புகளில் நீங்கள் சேரலாம். அது உங்களுக்கு சாதகமாக  இருக்கும்.

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்    : 1,2,3,7,8,12,15,16,17,19,21,22,24,25,26,29,30.
அசுப தினங்கள்     : 4,5,6,9,10,11,13,14,18,20,23,27,28.

Leave a Reply

Submit Comment