மகரம் ராசி - பொதுப்பலன்கள்
மகர ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சிறந்த பலன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடையும் மாதமாக இருக்கும். நீங்கள் சூழ்நிலைகளை சிறப்பாக கையாளும் திறன் பெற்றவர்கள். உங்களின் திறன் இந்த மாதம் கைகொடுத்து உங்களை தூக்கி விடும். குடும்பத்தை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் வலது கையாக இருந்து உதவிகள் புரிவீர்கள். இதனால் இருவரும் சிறந்த அன்னியோன்னியத்தை பராமரிப்பீர்கள். குடும்ப உறவில் திருப்தியைக் காண்பீர்கள். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்துடன் புனித ஸ்தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக நீங்கள் நடத்தும் பேச்சு வார்த்தைகள் அனுகூலமாக இருக்கும். பண விஷயங்களில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கி ஒரு ஸ்திரமான நிதி நிலை இருக்கக் காண்பீர்கள். செலவினங்கள் இருந்தாலும் சிறந்த முறையில் சமாளிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையை முன்னேற்றம் பெற வைக்கும் முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பில்லை.
மகரம் ராசி - காதல் திருமணம்
மகர ராசி காதலர்கள் தங்கள் காதல் உறவை திருமண உறவாக மாற்ற எண்ணம் கொண்டு தங்கள் துணையிடம் அதற்கான கோரிக்கையை முன் வைப்பீர்கள். காலமும் நேரமும் கூடி வந்தால் நல்லது தானாக நடக்கும். எனவே உங்கள் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படும். அதே சந்தோசத்தில் உங்கள் காதலை நீங்கள் வலுப்படுத்த விசுவாசமாக நடந்து கொள்வீர்கள். திருமணமான மகர ராசி அன்பர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவக் காண்பீர்கள். உங்களின் முயற்சியால் மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை
மகரம் ராசி - நிதி
உங்கள் நிதி நிலைமையில் ஏற்படும் வளர்ச்சி கண்டு நீங்கள் திருப்தி அடைவதற்கான நேரம் இது. உங்கள் பண வரவு அதிகமாக இருப்பதால் நீங்கள் கடன்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை அடைத்து முடிப்பீர்கள். வாங்கிய கடனை அடைக்கும் நீங்கள், பிறருக்கு உங்களால் கொடுக்கப்பட்ட பணத்தை வசூலிப்பதிலும் கவனம் செலுத்துவீர்கள். இரண்டையும் சரிவர செய்து உங்கள் கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வீர்கள். இந்த மாதம் நீங்கள் பிறருக்கு கடன் உதவி செய்வதை தவிர்ப்பதன் மூலம் நீங்கள் பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: குரு பூஜை
மகரம் ராசி - வேலை
இந்த மாதம் வேலை விஷயத்தில் நீங்கள் மதில் மேல் பூனை போல அல்லாமல் சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள். நல்ல முடிவுகள் நல்ல பலன்களையே அளிக்கும் என்பதால் நீங்கள் நற்பலன்களைப் பெற்று மகிழ்வீர்கள். இந்த முடிவு உங்கள் வேலை மாற்றம் சார்ந்த விஷயமாகக் கூட அமையலாம். அதன் மூலம் நீங்கள் புதிய வேலை வாயப்பினைக் கூட பெறலாம். புதிய வானம் புதிய பூமி போல நீங்கள் புது வேலை, புது சூழ்நிலை என்று எல்லாம் புதிதாய்க் காணும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்வீர்கள். சிறப்பாக பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: அங்காரக பூஜை
மகரம் ராசி - தொழில்
இந்த மாதம் நீங்கள் மேற்கொண்டிருக்கும் தொழிலில் மகிழ்ச்சிகரமான பலன்களைக் காண்பீர்கள். மிக்க ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் நீங்கள் மேற்கொண்ட பணிகளின் உங்கள் செயல்திறன் அடிப்படையில் புதிய தொழிலுக்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். இதற்கு முந்தைய பணிகளில் கிடைத்த லாபங்களுடன் ஒப்பிடும் போது இதில் லாபம் அதிகம் பெறுவீர்கள். உங்கள் பணிகளை மேற்கொள்ள ஒருவரை நீங்கள் நியமிப்பீர்கள். பணியில் ஒத்துழைக்க நீங்கள் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
மகரம் ராசி - தொழில் வல்லுநர்
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதற்கிணங்க நீங்கள் உங்கள் முயற்சியால் சிறப்பாக செயல்பட்டு உங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பணிகள் அதிகமாக இருந்தாலும், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று நீங்கள் கூடுதல் நேரம் பணி புரிய மனம் வைத்தால் உங்கள் பணிகளை நீங்கள் சிறப்புற செய்து முடிப்பீர்கள். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும் வண்ணம் செயல்பட்டால் பிரச்சினைகள் ஏற்படாது. எனவே வேலை விஷயத்தில் நீங்கள் ஒன்றை செய்வதாக வாக்கு அளிப்பதாக இருந்தால் அதனை உங்களால் நிறைவேற்ற முடியுமா என நன்கு யோசித்து வாக்கு அளிப்பது நல்லது.
மகரம் ராசி - ஆரோக்கியம்
நீங்கள் உற்சாக இருக்கும் அளவிற்கு உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதனைக் கொண்டாடும் விதமாக நீங்கள் வெளியிடங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். வித்தியாசமான சூழ்நிலை மன அமைதியை அளிக்கும். நீங்கள் இந்த மாதம் உங்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எனவே வேறு வகையில் உங்கள் உற்சாகத்தை கொண்டாட திட்டமிடுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை
மகரம் ராசி - மாணவர்கள்
சிறந்த முறையில் கல்வி பயின்றால் தானே படிப்பில் சிறந்து விளங்க முடியும். அதற்கான முயற்சி இந்த மாதம் உங்களிடம் அதிகமாகவே இருக்கும். பாடங்களை சிறந்த முறையில் படித்தாலும் தேர்வு எழுத மனதில் நம்பிக்கை வேண்டும். இந்த மாதம் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாகவே இருக்கும் காரணத்தால் நீங்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி முடிப்பீர்கள். உங்களில் சிலர் கல்வி நிறுவனங்களின் மூலம் நிதி உதவி பெறுவீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,2,3,7,8,10,11,12,19,21,22,24,25,26,29,30.
அசுப தினங்கள்: 4,5,6,9,13,14,15,16,17,18,20,23,27,28.
Leave a Reply