Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

மே மாத துலாம் ராசி பலன்கள் 2018 (May Matha Rasi Palan for Thula 2018)

March 7, 2018 | Total Views : 2,026
Zoom In Zoom Out Print

துலாம் ராசி - பொதுப்பலன்கள் உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கான பல சூழ்நிலைகள் காணப்படும். நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அரசு சம்பந்தமான கட்டணங்கள் மற்றும் வரி போன்றவற்றை சரியாக செலுத்த வேண்டும். பணியிடத்தில் அதிகமாக பணிபுரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அரசுப்பணியில் உள்ளவர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு இடமாற்றம் கிடைக்கப் பெறுவார்கள். ஆரோக்கியமற்ற சூழ்நிலை காரணமாக சமூக உறவுகளில் சில சுணக்ககங்கள் ஏற்படும். நீங்கள் புனித ஸ்தலங்களுக்கு செல்வதன் மூலம் ஆற்றலும் மன அமைதியும் பெறலாம். ஆரோக்யத்தில் சில சிறு சிறு பிரச்சினைகள் காணப்படும். துலாம் ராசி - காதல் / திருமணம் இந்த மாதம் உங்களின் உண்மையான துணையை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அதில் சில தாமதங்கள் காணப்படும். நீங்கள் உங்கள் துணையிடம் உங்கள் கருத்துக்களை திணிப்பதை விட அவரை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். உல்லாசப் பயணத்திற்கு திட்டமிடுவது உங்களுக்கு நல்லது. தம்பதியர்களின் திருமண வாழ்வு மிகவும் இனிமையாக காணப்படும். உங்களுக்கு பல தரப்பிலிருந்தும் திருமணத்திற்கு வரன்கள் தேடி வரும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : குரு பூஜை 2018 May Matha Rasi Palan for Thula துலாம் ராசி - நிதிநிலைமை இந்த மாதம் நிதிநிலைமை சுமாராக இருக்கும். கவனமாக இருங்கள். ஆர்வப்பட்டு எதையாவது வாங்கிவிடாதீர்கள். குடும்பத் தேவைகளுக்கான பொருட்களை மட்டும் வாங்குங்கள். நண்பர்களுக்காக செய்யும் செலவு இந்த மாதம் அதிகரிக்கும் என்பதால் அதனை கண்காணியுங்கள். பணத்தை முதலீடு செய்வதற்கு திட்டமிடுங்கள். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : அங்காரக பூஜை துலாம் ராசி - வேலை இந்த மாதம் உங்கள் அலுவலக வாழ்க்கை சாதரணமாக இருக்கும். நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் அதன் காரணமாக பணியிடத்தில் ஏமாற்றங்கள் ஏற்படலாம். உங்களுக்கு கூடுதல் பணிகள் வழங்கப்படலாம். உங்கள் கடின உழைப்பும் உண்மையான முயற்சியும் சுமாரான பலன்களையே அளிக்கும். நீங்கள் உங்கள் பணிகளை கவனமாகச் செய்ய வேண்டும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சந்திரன் பூஜை துலாம் ராசி - தொழில் இந்த மாதம் தொழிலில் உங்களுக்கு மிதமான வளர்ச்சி காணப்படும். நீங்கள் உங்கள் பணிளை சிறப்பாக ஆற்ற வேண்டும். புதிய பணிகளைப் பெற வேண்டும். பணியில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க வேண்டும். மன நிலை மாறுபாட்டை தவிர்க்க வேண்டும். துலாம் ராசி - தொழில் வல்லுநர்கள் இந்த மாதம் நீங்கள் மிகவும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆலோசனை வழங்கும் ஆலோசகராக செயல்படுவீர்கள். உங்களின் சில பணிகளை சக பணியாளர்களிடம் ஒப்படைப்பீர்கள். அவர்கள் உங்கள் சார்பாக பணிகளை முடித்துத் தருவார்கள். தேவைக்கேற்றவாறு நீங்கள் பல பணிகளை புரிவீர்கள். துலாம் ராசி - ஆரோக்கியம் இந்த மாதம் நீங்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். உள்ளுக்குள் இருந்து வெளியில் தெரியாத சில உடல் பிரச்சினைகள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். தக்க நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். ஒய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஆற்றல் இழக்க வாய்ப்புள்ளதால் இரும்புச் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை துலாம் ராசி - மாணவர்கள் இந்த மாதம் நீங்கள் குறுகிய கால வகுப்புகளில் சேருவீர்கள். அதன் மூலம் கூடுதல் ஞானம் பெறுவீர்கள். தேர்வுகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் தொடர்பாடல் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். அது உங்கள் எதிர் காலத்திற்கு உதவும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 3rd, 4th, 5th, 13th, 19th, 20th, 21st and 31st அசுப தினங்கள்: 8th, 11th, 15th, 23rd and 28th

banner

Leave a Reply

Submit Comment