Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
AstroVed Menu
AstroVed
search
search

மே மாத சிம்மம் ராசி பலன்கள் 2018 (May Matha Rasi Palan for Simha 2018)

March 7, 2018 | Total Views : 2,163
Zoom In Zoom Out Print

சிம்ம ராசி - பொதுப்பலன்கள் உங்கள் வாழ்விற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய இந்த மாதம் சிறப்பான மாதம். உங்கள் அடையாளத்தை நிரூபிக்க முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுப்பது சிறந்தது. உங்கள் திறமை மூலம் உங்களுக்கு தொழிலில் பெருமை சேரும். உங்கள் தொழில் இலக்குகள் நிறைவேறும். உங்கள் குடும்பத்தில் கொண்டாட்டங்கள் காணப்படும். உங்கள் துணையுடன் உல்லாசமாக வெளியிடங்களுக்கு செல்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெளிவாக உரையாடுங்கள். உங்கள் மன திருப்திக்கு தொண்டு செய்ய விரும்புவீர்கள். நீங்கள் அந்நிய மொழிகளை கற்கும் வாய்ப்பு பெறுவீர்கள். நீங்கள் ஆற்றலுடன் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். சிம்ம ராசி - காதல் / திருமணம் உங்கள் துணையுடன் இனிமையான நேரத்தை கொண்டாடி மகிழ்வீர்கள். திருமணத்திற்கான உங்கள் வேண்டுகோளை உங்கள் காதல் துணையார் ஏற்றுக் கொள்வார். உங்கள் வாழ்க்கையை திட்டமிடுவதில் புதிய நம்பிக்கை உங்களிடம் காணப்படும். உங்கள் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நிச்சயமாக வாய்ப்பு உண்டு தம்பதிகள் சிறந்த நேரத்தை கொண்டாடி மகிழ்வார்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் பெற பரிகாரம்: குரு பூஜை 2018 May Matha Rasi Palan for Simha சிம்ம ராசி - நிதி நிலைமை சென்ற மாதத்தை விட இந்த மாதம் உங்கள் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகமாக காணப்படும். செலவுகள் குறைந்து காணப்படும். நீங்கள் உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இந்த மாதம் நீங்கள் ஆன்மீக காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். உங்கள் நண்பர்கள் வேண்டுகோள்படி அவர்களுக்கு பண உதவி செய்வீர்கள். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : புதன் பூஜை சிம்ம ராசி - வேலை இந்த மாதம் பணியில் படிப்படியான முன்னேற்றம் காணப்படும். சிறப்புடன் பணியாற்ற இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணி நிமித்தமான பயணம் இந்த மாதம் காணப்படும். உங்கள் அனைத்துப் பணிகளுக்கும் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக பணியாளர்களுடன் நட்பாக நடந்து கொள்ளவும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சனி பூஜை சிம்ம ராசி - தொழில் உங்கள் தொழில் திட்டங்கள் வெற்றி பெறும். தொழில் சம்பந்தமான உங்கள் ஆரம்ப கட்ட பணிகளுக்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்களுடனான பேச்சு வார்த்தை வெற்றி அளிக்கும். ஒப்பந்தம் மற்றும் பண விஷயங்களில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் பணியில் உதவும் கீழ்மட்ட பணியாளர்களை அவர்களின் சிரத்தையான பணிக்கு பாராட்டு அளியுங்கள். சிம்ம ராசி - தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தொழிலைப் பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான மாதம். இந்த நேரத்தில் நீங்கள் விரும்பும் பலன்களை அடைவீர்கள். பணியில் உங்கள் சுறுசுறுப்பு காரணமாக நீங்கள் குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். உங்கள் பணிக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழிலில் மேம்பட்ட நிலை காண நீங்கள் வெளிப்படையாகப் பேசுவது நல்லது. சிம்ம ராசி - ஆரோக்கியம் உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி மற்றும் வெற்றி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நீங்கள் உங்கள் அன்றாட பணிகளை ஆற்றலுடன் செய்வீர்கள். இலை வகை உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் எதிர்ப்பு சக்திகளை வளர்த்துக் கொள்ளலாம். உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட உலர் பழ வகைகளை உட்கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை சிம்ம ராசி - மாணவர்கள் இந்த மாதம் கல்வியல்லாத பிற கலைகளில் உங்கள் திறமையை சோதித்துப் பார்க்க சிறந்த நேரம். நிறுவனம் சார்பாக நீங்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளலாம். அதன் மூலம் வெற்றியும் திருப்தியும் கிடைக்கும். உங்கள் செயல் திறனுக்கு நீங்கள் பாராட்டும் அங்கீகாரமும் பெறுவீர்கள். உங்கள் நண்பர்களுடன் உல்லாச யாத்திரை செல்ல நீங்கள் திட்டமிடலாம். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 6th, 16th, 17th, 18th, 21st, 26th and 27th அசுப தினங்கள்: 8th, 19th, 22nd, 29th and 30th banner

Leave a Reply

Submit Comment