Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

2018 March Month’s Rasi Palan for Simha

February 20, 2018 | Total Views : 1,708
Zoom In Zoom Out Print

சிம்ம ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்கள் முயற்சிக்கும் உங்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் உகந்த நேரம். நீங்கள் அதிக பொறுப்புகளை எதிர்கொள்வீர்கள். உங்கள் பணிகளை நீங்கள் முடிக்க அதிக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் பணி சம்பந்தமாக நீங்கள் புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். புதிய நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இந்த மாதத்தின் பிற்பகுதியில் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். சிம்ம ராசி - காதல் / திருமணம் இந்த மாதத்தின் முதல் பகுதி உங்கள் காதலுக்கு உகந்ததாக காணப்படுகின்றது. இது புதிய தொடக்கங்களுக்கு வழி வகுக்கும். உங்கள் காதல் மலரும். திருமணம் போன்ற சுப நிகழ்சிகளுக்கு இது உகந்த மாதம். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் புரிந்துணர்வின்மை காரணமாக உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். உங்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம்: ராகு பகவான் ஹோமம் 2018-march-months-rasi-palan-for-simha சிம்ம ராசி - நிதிநிலைமை இந்த மாதத்தின் முதல் பகுதியில் நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக காணப்படும். சேமிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். உங்கள் சேமிப்பை கவனமாகக் கையாள வேண்டும். இல்லையெனில் சில பிரச்சினைகள் ஏற்படும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே செலவுகளை கட்டுப்படுத்தி முடிந்த அளவு சேமிப்பது சிறந்தது. உங்கள் நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : லக்ஷ்மி குபேர ஹோமம் சிம்ம ராசி - வேலை பணியைப் பொறுத்தவரை மாதத்தின் பிற்பகுதியில் சற்று அனுகூலமற்ற நிலைமை காணப்படும். நீங்கள் வேலை இழக்க நேரலாம். அல்லது பணிச்சுமைகள் அதிகமாகக் காணப்படலாம். எனவே புதிய வேலை தொடர்பான முடிவுகளை மாதத்தின் முதற் பகுதியில் எடுப்பது சிறந்தது. மாதத்தின் முதற் பகுதியில் முன்கூட்டி திட்டமிட்டு பணியாற்ற வேண்டியது அவசியம். சிம்ம ராசி - தொழில் இந்த மாதம் உங்கள் தொழிலுக்கு உகந்த மாதம் அல்ல. மாதத்தின் முதற் பகுதியில் தொழிலை மேம்படுத்துவதற்கான அல்லது நல்ல லாபம் காண்பதற்கான சாத்தியமில்லை. என்றாலும் நீங்கள் முயற்சி எடுத்தால் ஓரளவு சமாளிக்க இயலும். மாதத்தின் பிற்பகுதியில் தொழிலில் போட்டியாளர்கள் அதிகம் காணப்படுவார்கள். உங்களால் அதனை சமாளிக்க இயலாத நிலை காணப்படும். சிம்ம ராசி - தொழில் வல்லுநர்கள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் விரைவாகவும் உறுதியுடனும் செயல்படுவீர்கள். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும். வேலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பரிகாரம் : ஹனுமான் ஹோமம் சிம்ம ராசி - ஆரோக்கியம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக காணப்படாது. மாதத்தின் பிற்பகுதியில் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உணவு முறையில் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் கண்களில் கவனம் செலுத்த வேண்டும். பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ தன்வந்தரி ஹோமம் சிம்ம ராசி - மாணவர்கள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் படிப்பில் கவனம் இழக்க வாய்ப்புள்ளது. மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். படிப்பில் கவனம் சிறந்து காணப்படும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரலாம். தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள் : 1,3,4,6,7,8,11,12,13,14,21,22,23,26,27,28,30 அசுப தினங்கள் : 2,5,9,10,15,16,17,18,19,20,24,25,29,31 banner

Leave a Reply

Submit Comment