துலாம் ராசி - பொதுப்பலன்
இந்த மாதம் உங்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உகந்த மாதம். அதிலும் மாதத்தின் முதற் பகுதியில் நீங்கள் வசீகரம் மற்றும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு உங்கள் பணிகளை ஒரு கலை நயத்தோடு முடிப்பீர்கள். இந்த மாதத்தில் நீங்கள் முக்கிய முடிவுகள் எடுத்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் பயணங்கள் அதிகமாக காணப்படும்.
துலாம் ராசி - காதல்/ திருமணம்
இந்த மாதத்தின் முதற் பகுதியில் உங்கள் உறவில் அன்பும் புரிந்துணர்வும் நிறைந்து காணப்படும். நீங்கள் உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். உங்களின் நகைச்சுவை போக்கு காரணமாக உங்கள் துணையின் மீது காதல் உணர்வு மற்றும் அன்பு அதிகரிக்கும்.
திருமண உறவில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம் : அங்காரக ஹோமம்துலாம் ராசி - நிதிநிலைமை
மாதத்தின் முதற் பகுதியில் நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். இதனால் உங்கள் சேமிப்பு உயரும். உங்கள் கடின உழைப்பிற்கான ஊக்கத் தொகை பெறுவீர்கள். மாதத்தின் முதற் பகுதியில் வேலையில் பதவி உயர்விற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் உங்கள் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது. என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் பணப்புழக்கதில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : லக்ஷ்மி நாராயணா ஹோமம்துலாம் ராசி - வேலை
மாதத்தின் முதல் பகுதியில் பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக காணப்படும். சக பணியாளர்களுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணி சம்பந்தமான நீண்ட தூரப் பயணம் ஒன்றை நீங்கள் மேற்கொள்ள நேரும். இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
துலாம் ராசி - தொழில்
மாதத்தின் முதல் பகுதியில் நீங்கள் முக்கிய திட்டங்கள் மற்றும் முடிவுகளை எடுக்கலாம். இது உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். எனினும் அதிக லாபம் காண நீங்கள் தொழிலில் தற்போதைய யுக்திகளை புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் வர்த்தகத் துறையில் நீங்கள் சிறப்பாக போட்டியிட இயலும்.
துலாம் ராசி - தொழில் வல்லுநர்கள்
தொழில் வல்லுநர்களுக்கு மாதத்தின் முதல் பகுதி மிகவும் சிறப்பாக உள்ளது. சிக்கல்கள் காணப்பட்டாலும் உங்களின் முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் அவ்வளவு சிறப்பான பலன்கள் கிடைக்காது.
வேலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பரிகாரம் : சனி பூஜைதுலாம் ராசி - ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். உங்களின் நம்பிக்கை மற்றும் மன உறுதி காரணமாக உடலில் உங்கள் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே இந்த மாதம் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜைதுலாம் ராசி - மாணவர்கள்
மாதத்தின் முதல் பகுதியில் உங்களிடம் கூடுதல் திறமை காணப்படும். உங்களின் உறுதி மற்றும் கவனம் காரணமாக நீங்கள் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். சக மாணவர்களுக்கு நீங்கள் எடுத்துக்காட்டாய் விளங்குவீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்:
1,3,4,6,7,8,11,12,13,14,18,19,26,27,28,30
அசுப தினங்கள்:
2,5,9,10,15,16,17,20,21,22,23,24,25,29,31
Tags: 2018 Thula Rasi Palan March Tamil March Month Thula Palan 2018 Matha Rasi Palan 2018 Thula Rasi Palangal 2018 March Thula March Month Thula Palan 2018 2018 Thula Rasi Palan March Matha Rasi Palan 2018 Thula Rasi Palangal 2018 March Thula
Leave a Reply