மிதுனம் ராசி - பொதுப்பலன்கள்
நீங்கள் இந்த மாதம் அதிக பயணம் மேற்கொள்வீர்கள். அதிலும் ஆன்மீக சம்பந்தமான பயணம் அதிகமாக காணப்படும். ஆன்மீக ஈடுபாட்டிற்கு இந்த மாதம் மிகவும் சிறந்தது. நீங்கள் பிறரைக் கவர்வீர்கள். அது உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை சிறப்பாக பயன்படுத்துவீர்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மிதுனம் ராசி - காதல் / திருமணம்
இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வும் அன்யோன்யமும் வளரும். மாதத்தின் இரண்டாம் பகுதி திருமணம் போன்ற சுப நிகழ்சிகளுக்கு மிகச் சிறந்தது.
திருமண வாழ்வில் நல்லுறவு காண பரிகாரம்: கணபதி ஹோமம்மிதுனம் ராசி - நிதி நிலைமை
இந்த மாதத்தின் முதல் பகுதியை விட இரண்டாம் பகுயில் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்களால் பணத்தை சிறப்பாக சேமிக்க இயலும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நீங்கள் மாதத்தின் இரண்டாம் பகுதியில் முதலீடு செய்வீர்கள். அது உங்களுக்கு லாபகரமாக அமையும்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : லக்ஷ்மி பூஜைமிதுனம் ராசி - வேலை
மாதத்தின் இரண்டாம் பகுதியை விட முதல் பகுதியில் உங்கள் பணியில் நீங்கள் மிகவும் திருப்திகரமாக உணர்வீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். சக பணியாளர்கள் உங்களுடன் விரும்பி பணியாற்றுவார்கள்.
மிதுனம் ராசி - தொழில்
மாதத்தின் இரண்டாம் பகுதியில் தொழிலில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் தடைகளை உடைத்தெறிவீர்கள். தொழிலில் வெற்றியின் உச்சத்தை அடைவீர்கள். மனமிருந்தால் மார்கமுண்டு என்று உறுதியாக நம்புவீர்கள். என்றாலும் மாதத்தின் முதல் பகுதி உங்கள் தொழிலுக்கு சாதகமாக அமையாது.
மிதுனம் ராசி - தொழில் வல்லுநர்கள்
உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் சமயோசித புத்தியால் நீங்கள் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்கள் தனித் திறமையை வெளிப்படுத்தி உங்கள் சக பணியாளர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள்.
வேலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பரிகாரம் : சனி ஹோமம்மிதுனம் ராசி - ஆரோக்கியம்
உங்கள் தன்னம்பிக்கையும் உறுதியும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால் உற்சாகத்துடனும் முழு ஆரோக்கியத்துடனும் இருப்பீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் தைரியத்துடன் காணப்படுவீர்கள். நீங்கள் துடிப்புடனும் நம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ தன்வந்தரி ஹோமம்மிதுனம் ராசி - மாணவர்கள்
நீங்கள் உங்கள் தனித்திறமை மற்றும் கற்றல் திறமையை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் தன்னிச்சையாக செயல்பட்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்
1,3,4,6,7,8,11,12,18,19,21,22,23,26,27,28,30
அசுப தினங்கள்:
2,5,9,10,13,14,15,16,17,20,24,25,29,31
Tags: 2018 Mithuna Rasi Palan March March Month Mithuna Palan 2018 Matha Rasi Palan 2018 Mithuna Rasi Palangal 2018 March Mithuna March Month Mithuna Palan 2018 2018 Mithuna Rasi Palan March Matha Rasi Palan 2018 Mithuna Rasi Palangal 2018 March Mithuna
Leave a Reply