Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

2018 March Month’s Rasi Palan for Makara

February 20, 2018 | Total Views : 1,867
Zoom In Zoom Out Print

மகரம் ராசி - பொதுப்பலன் இந்த மாதம் உங்களுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் இலக்குகளில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் சிறந்த பலன்களைப் பெற்று மகிழ்வீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். என்றாலும் மாத முற்பகுதியில் உங்கள் முயற்சிகளில் தடைகள் ஏற்படும் என்பதால் நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். மகரம் ராசி - காதல்/திருமணம் மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் உங்கள் உறவில் நேர்மையுடனும் பொறுப்புடனும் காணப்படுவீர்கள். திருமண முடிச்சு போடுவதற்கு உகந்த நேரம். என்றாலும் மாத முன் பகுதியில் நீங்கள் அமைதியின்மை மற்றும் கருத்து வேறுபாட்டை எதிர் கொள்வீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம் : சுக்ரன் ஹோமம் 2018-march-months-rasi-palan-for-makara மகரம் ராசி - நிதிநிலைமை மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் கடின உழைப்பின் மூலம் நிதி நிலையில் சிறந்த பலன்கள் காண்பீர்கள். இந்த மாதம் நீங்கள் அதிக பணம் சேமிப்பீர்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : லக்ஷ்மி பூஜை மகரம் ராசி - வேலை மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் உங்கள் அலுவல் சம்பந்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். சக பணியாளர்கள் நல்லாதரவு அளிப்பார்கள். மகரம் ராசி - தொழில் மாதத்தின் முதல் பாதியில் லாபம் காண்பது கடினமாக இருக்கும். தொழிலில் கடுமையான போட்டி காரணமாக உங்கள் வளர்ச்சி குறையும். லாப நஷ்டமில்லாத நடுநிலை காணப்படும். மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் லாபம் காண்பதற்கான வாய்ப்பு உள்ளது. வர்த்தகத் துறையில் உங்களால் சிறப்பு அம்சத்தை உருவாக்க முடியும். மகரம் ராசி - தொழில் வல்லுநர்கள் தொழில் வல்லுநர்களுக்கு இது ஒரு சாதகமான மாதம். கடினமான பணிகளையும் எளிதாக முடித்து கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக ஆற்றி வெற்றியின் உச்சத்திற்கு செல்வார்கள். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி ஹோமம் மகரம் ராசி- ஆரோக்கியம் மாதத்தின் முதல் பாதியில் உங்கள் ஆரோக்கியம் ஸ்திரமாக இருக்காது. கண்களில் பிரச்சினைகள் காணப்படலாம். இது உங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பாதிக்கும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : தன்வந்தரி ஹோமம் மகரம் ராசி - மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் இருப்பீர்கள். மாதத்தின் முதல் பகுதியில் நீங்கள் படிப்பில் கவனம் குறைந்து காணப்படுவீர்கள். அதனால் குறைந்த மதிப்பெண் காரணமாக உங்களுக்கு பின்னடைவு காணப்படும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள் 4,6,7,8,11,12,13,14,18,19,21,22,23,26,27,28 அசுப தினங்கள் 1,2,3,5,9,10,15,16,17,20,24,25,29,30,31 banner

Leave a Reply

Submit Comment