2018 March Month’s Rasi Palan for Kadaga

கடக ராசி - பொதுப்பலன்
இந்த மாதத்தில் பதட்டமும் குழப்பமும் காணப்படும். அது உங்கள் முயற்சிகளின் வெற்றிக்கு தடையாக இருக்கும். உங்கள் முடிவுகள் பயனற்றுப் போகும். எனவே எந்த முக்கிய நடவடிக்கை எடுத்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செயல்பட வேண்டும். மேலும், உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். மன அமைதியுடன், தெளிவான சிந்தனையுடன் சாதகமான பலன்கள் பெற தியானம் மேற்கொள்ளவும்.
கடக ராசி - காதல் / திருமணம்
மாதத்தின் முதல் பாதி பகுதியை விட இரண்டாம் பகுதியில் திருமண பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். குறைந்த புரிந்துணர்வு காரணமாக தம்பதியரிடையே கருத்து வேறுபாடு காணப்படும். ஆரோக்கியமான உறவு பராமரிக்க உங்கள் துணையுடன் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். மாதத்தின் முதற் பகுதியில் உணர்ச்சி வசப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அது மகிழ்ச்சியை பாதிக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம் ; துர்கா ஹோமம்
கடக ராசி - நிதிநிலைமை
மாதத்தின் முதல் பகுதியை விட இரண்டாம் பகுதியில் பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் எதிர்பாராத பண வரவு காணப்படும். அதன் மூலம் நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அனுகூலமாக இருக்கும். மாத முதல் பாதி தொடக்கத்தில் நீங்கள் பணம் இழக்க வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருக்கவும்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : லக்ஷ்மி குபேர ஹோமம்
கடக ராசி - வேலை
இந்த மாதம் உங்கள் இலக்குகளை வெற்றிகரமாக முடிக்க நீங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். மாதத்தின் முதல் பகுதியில் பணி வளர்ச்சி நீங்கள் எதிர்பார்த்த அளவில் இருக்காது. பணிகள் அதிகமாக காணப்படும். இதனால் உங்கள் பணியில் தவறுகள் நேரலாம். நீங்கள் அதிக கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த மாத கடைசியில் நீங்கள் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.
கடக ராசி - தொழில்
தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் பலன்கள் கலந்து காணப்படும். உங்களின் விரைவான முடிவுகளின் காரணமாக உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மாத முதல் பாதியில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் எந்த புதிய தொழில் முயற்சியிலும் இறங்க வேண்டாம். சந்தையில் புதிய போட்டியாளர்கள் உங்களுக்கு அச்சத்தையும் லாப நஷ்டமில்லாத நிலையையும் அளிப்பார்கள். என்றாலும் மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் புதிய தொழில் முயற்சியில் லாபத்தையும் வெற்றியையும் காண்பீர்கள்.
கடக ராசி - தொழில் வல்லுநர்கள்
தொழில் வல்லுநர்கள் தவறான முடிவு மற்றும் தெளிவற்ற தன்மை காரணமாக கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியில் வெற்றிக்கும் புதிய வாய்ப்புகளுக்கும் சாத்தியம் உள்ளது.
வேலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பரிகாரம் : சனி ஹோமம்
கடக ராசி - ஆரோக்கியம்
மாதத்தின் முதல் பாதியில் பதட்டம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. எனவே சரிவிகித உணவை மேற்கொள்ள வேண்டும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம்: ஸ்ரீ தன்வந்தரி ஹோமம்
கடக ராசி - மாணவர்கள்
மாதத்தின் முதல் பகுதியில் கவனக் குறைபாடு காணப்படும். எனவே நீங்கள் படிப்பில் சிறந்து விளங்க, சிறந்த செயல்திறன் அமைய அதிக மதிப்பெண்கள் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும். கல்வியில் வெற்றி பெற பெரியவர்கள் மற்றும் பெற்றோரின் ஆலோசனை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்
1,3,4,6,7,8,11,12,13,14,18,19,21,22,23,26,27,28,30
அசுப தினங்கள்
2,5,9,10,15,16,17,20,24,25,29,31

