2018 June Month’s Rasi Palan for Mithunam

மிதுனம் ராசி – பொதுப்பலன்கள்
இந்த மாதம் சாதாரணமான பலன்களே காணப்படும். நிலுவையில் உள்ள பணிகள் முடிப்பது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் பணிக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். கால மாற்றங்கள் உங்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கும். பணியில் உங்கள் தன்னம்பிக்கையை புதுப்பித்துக் கொள்வீர்கள். யதார்த்தமாக சிந்தித்து செயல்படுவதன் மூலம் நற்பலன்கள் காணலாம். உங்களின் கவனமின்மை காரணமாக உங்களுக்கு இழப்புகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்கள் குடும்பப் பிரச்சினைகளில் உங்கள் ஆலோசனையை கேட்பார்கள். சில சமயங்களில் நீங்கள் உணர்ச்சி வசப்படுவதன் மூலம் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். நீங்கள் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
மிதுனம் ராசி – காதல் / திருமணம்
இந்த மாதம் நீங்கள் விரும்புபவரை வாழ்க்கைத் துணையாக அடைவீர்கள். தம்பதியரிடையே மகிழ்ச்சி நிலவும். உங்கள் துணையின் தேவைக்கு நீங்கள் முக்கியத்துவம் அளித்து அவரின் கவனத்தை கவர்வீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைக்கு வரன் அமையும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சுக்கிரன் பூஜை
மிதுனம் ராசி – நிதிநிலைமை
இந்த மாதம் நீங்கள் முதலீட்டிலிருந்து பணம் பெறுவீர்கள். மேலும் முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள். பல வகையிலிருந்தும் பண வரவு காணப்படும். நிலுவைப் பணம் பெற கடுமையான முயற்சி தேவை. சிறிய பயணம் மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கு செலவு செய்வீர்கள்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : ராகு பூஜை
மிதுனம் ராசி – வேலை
இந்த மாதம் நீங்கள் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் பணியிடத்தில் ஏமாற்றங்கள் காணப்படும். பணி வளர்ச்சி மந்தமாக இருக்கும். பணியில் தாமதங்கள் காணப்படும். கூடுதல் பணிகள் உங்களுக்கு வழங்கப்படும். பணிச் சுமை காரணமாக நீங்கள் பதட்டமடைவீர்கள். சில பணிகளை தள்ளிப் போடுவீர்கள். உங்கள் பணிகளை கவனமுடன் குறித்த நேரத்தில் செய்ய வேண்டும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : குரு பூஜை
மிதுனம் ராசி – தொழில்
இந்த மாதம் தொழில் முன்னேற்றம் சாதரணமாக காணப்படும். செயல்களின் விளைவுகளை தெளிவாக புரிந்து கொண்டு உங்கள் பணிகளை திட்டமிட வேண்டும். முக்கியமான பிரச்சினைகளில் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களுடன் உங்கள் சுமூகமான உறவு பணியில் ஆதரவாக இருக்கும்.
மிதுனம் ராசி – தொழில் வல்லுநர்கள்
இந்த மாதம் தொழிலில் சில அசௌகரியங்கள் உணர்வீர்கள். உங்கள் வார்த்தைகள் பிறரை பாதிக்காத வகையில் கவனம் தேவை. அதிகாரிகளிடம் நட்புணர்வு கொள்ளுங்கள். செயல்கள் சுமூகமாக முறையாக நடைபெறாது. உங்கள் பணிகளை சிறப்பாக முடிக்க புத்திசாலித்தனம் தேவை.
மிதுனம் ராசி – ஆரோக்கியம்
இந்த மாதம் நீங்கள் சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க தொடர் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆர்கானிக் உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : புதன் பூஜை
மிதுனம் ராசி – மாணவர்கள்
இந்த மாதம் மாணவர்களுக்கு சிறந்த மாதம். நீங்கள் புதிய பாடங்களை படிப்பீர்கள். மேற்படிப்பில் இணைவீர்கள். தேர்வில் நீங்கள் விரும்பிய பலன் கிடைத்து மகிழ்வீர்கள். விளையாட்டுத் துறையில் உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்களின் அன்பு மற்றும் அரவணைப்பு உங்களுடன் படிப்பவர்களை ஈர்க்கும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 1st, 8th, 9th, 11th, 15th, 18th, 19th, 25th, 26th and 27th
அசுப தினங்கள்: 5th, 7th, 13th, 16th, 22nd, 23rd, 29th and 30th


Leave a Reply
arivazhagan
I am mithunam rasi mirugasrisham 3,4patham lakanam magaram June month palan
June 14, 2018