2018 June Month’s Rasi Palan for Makara

மகர ராசி – பொதுப்பலன்கள்
இந்த மாதம் பலன்கள் கலந்து காணப்படும். உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். ஆனால் சற்று தாமதமாகும். குடும்ப விஷயங்களை சாதுர்யமாகக் கையாள வேண்டும். சிலசமயங்களில் நீங்கள் உணர்ச்சிவசப்பட நேரலாம். எனவே பிறருடன் பேசும் போது கவனம் தேவை. பணிச்சுமை காரணமாக நீங்கள் உங்கள் தனிப்பட்ட நேரத்தை இழக்க நேரும். என்றாலும் உங்கள் பணி நிமித்தமான பயணம் நல்ல பலன்களை பெற்றுத் தரும். உங்கள் குடும்ப வட்டாரத்தில் பதட்டமும் சர்ச்சைகளும் காணப்படும். நீங்கள் ஆன்மீக அறிவு பெற விரும்புவீர்கள். ஆன்மீக நிகழ்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மகர ராசி – காதல் / திருமணம்
இந்த மாதம் உங்கள் உண்மையான உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். அதன் மூலம் அன்பான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் துணையுடன் உங்களின் வெளிப்படையான பேச்சு பாராட்டுக்குரியதாக இருக்கும். பொருத்தமான துணை தேடும் உங்கள் முயற்சி பலனளிக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் பெற பரிகாரம் : சுக்கிரன் பூஜை
மகர ராசி – நிதிநிலைமை
இந்த மாதம் உங்கள் நிதிநிலைமை சுமாராக இருக்கும். ஏற்ற இறக்கங்கள் காணப்பட வாய்ப்புள்ளது. பண வரவு காணப்பட்டாலும் தேவையற்ற செலவுகள் காணப்படும். அதனால் உங்கள் சேமிப்பு பாதிக்கப்படும். நண்பர்களுக்கு கடன் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்தால் திரும்ப வசூலிப்பதற்கான சாத்தியம் இல்லை. பெரும்பாலான உங்கள் செலவுகள் குடும்ப ஆரோக்கியம் குறித்ததாக இருக்கும்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : குரு பூஜை
மகர ராசி – வேலை
உங்கள் பணியில் நன்மை மற்றும் தீமை இரண்டையும் எதிர்கொள்வீர்கள். சில கடினங்களை எதிர் நோக்கிய பின் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பணியிடத்தில் சக பணியாளர்கள் மூலம் சில இன்னல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பொறுப்புக்களை எற்றுக் கொள்வதில் பயம் காணப்படலாம். இதனால் உங்கள் பணி வளர்ச்சி பாதிக்கப்படும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம் : அங்காரக பூஜை
மகர ராசி – தொழில்
இந்த மாதம் தொழில் சார்ந்த முடிவுகளை நீங்கள் தைரியமாக எடுப்பீர்கள். என்றாலும் பொறுமையின்மை காரணமாக சில வாடிக்கையாளர்களிடம் சர்ச்சைகள் ஏற்படும். உங்களின் செயல்கள் மூலம் நீங்கள் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள். கடின உழைப்பின் மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். சில விஷயங்கள் தேவையில்லாமல் தள்ளிப் போகும். அதற்கு உங்களின் சீரிய தொடர் முயற்சிகள் தேவைப்படும்.
மகர ராசி – தொழில் வல்லுநர்கள்
தொழில் வல்லுநர்களுக்கு இது ஒரு சாதாரண மாதம். நல்ல வளர்ச்சி அல்லது புதிய வாய்ப்புகள் காணப்படும். நீங்கள் நேர்மறையான எண்ணம் கொள்ள வேண்டும். கடின உழைப்பு வேண்டும். பணியில் பின்னடைவு ஏற்படும் சாத்தியம் உள்ளது. துணிச்சலான நடவடிக்கை மூலம் அதனை நீங்கள் சமாளிக்கலாம்.
மகர ராசி – ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியப் பிரச்சினைகள் காரணமாக உங்கள் உடல் நிலை பாதிக்கப்படலாம். அதனால் உங்கள் வழக்கமான பணிகள் பாதிக்கப்படும். எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படலாம். குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை
மகர ராசி – மாணவர்கள்
இந்த மாதம் படிப்பில் நீங்கள் துடிப்புடனும், விழிப்புடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுவீர்கள். உங்களின் கிரகிக்கும் ஆற்றல் அதிகமாக காணப்படும். பாடங்களின் குறிப்புகளை நீங்கள் எளிதில் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் தவறாமல் பள்ளிக்குச் செல்வீர்கள். இதனால் உங்கள் மீது ஆசிரியர்களுக்கு நல்ல அபிப்பிராயம் காணப்படும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 2nd, 3rd, 8th, 9th, 15th, 16th, 17th, 22nd, 23rd 25th, 26th and 30th.
அசுப தினங்கள்: 7th, 10th, 12th, 18th, 19th, 24th, 28th and 29th.

