சிம்ம ராசி – பொதுப்பலன்கள்
இந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சியான மாதம். உங்கள் சொந்த பந்தங்களுடன் நல்ல தொடர்பு கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினருடனான உறவு வலுவுடன் காணப்படும். நிதிநிலைமை முந்தைய தினங்களை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். தொலை தூர பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பயணத்தின் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். நீங்கள் உங்கள் பணிகளை நம்பிக்கையுடன் ஆற்றுவீர்கள். உங்கள் பணியில் கவனம் அதிகரிக்க தியானம் மேற்கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். நீங்கள் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்.
சிம்ம ராசி – காதல் / திருமணம்
நீங்கள் உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவருடன் காதல் வயப்பட வாய்ப்புள்ளது. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதனால் வரும் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராய் இருங்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்யோன்யமாய் இருப்பார்கள். உங்கள் துணையுடன் புதிய வாழ்க்கையை துவக்குவீர்கள். உங்களுக்கு நல்ல வரன் அமையும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : குரு பூஜை
சிம்ம ராசி – நிதிநிலைமை
உங்கள் நிதிநிலைமை சாதரணமாக இருக்கும். நீங்கள் பண விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். பயணத்தின் போது தேவையற்ற செலவுகள் ஏற்படும். நீண்ட கால முதலீட்டு திட்டங்களில் பங்கு கொள்ள இது சரியான தருணம். நண்பர்களுக்கு கடனுதவி செய்வதை தவிர்க்கவும். பணம் கொடுத்தால் அதனை திரும்பப் பெறுவதற்கான சாத்தியமில்லை.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : புதன் பூஜைசிம்ம ராசி – வேலை
நீங்கள் உங்கள் புத்திசாலித்தனமான முயற்சிகளை திறமையுடன் ஆற்றி பணியில் நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்கள் வாழ்வில் தற்காலிக பின்னடைவு காணப்படும். வாழ்கைத் தரம் குறைந்தவர்களுடன் தொடர்பு கொள்வீர்கள். பணிகள் எல்லாம் தேவையில்லாமல் தள்ளிப் போகும். எனவே எதிர்காலத்தில் இதன் மூலம் சாதகமான பலன் கிடைக்குமா கிடைக்காதா என்று பாராமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சனி பூஜைசிம்ம ராசி – தொழில்
இந்த மாதம் தொழில் சம்பந்தமான பிரச்சினைகள் உங்கள் பதட்டத்தை அதிகரிக்கும். உங்கள் பணிகளை நீங்களே தலை மேல் போட்டுக் கொண்டு செய்வதைக் காட்டிலும் அதனை உங்கள் கூட்டாளிகளுடன் பகிர்ந்து செய்யுங்கள். உங்கள் பணிகளை கீழ் பணிபுரிபவர்களுக்கு பகிர்ந்தளித்து பணிகள் தேவைப்படி முடிகின்றதா என்று கண்காணியுங்கள். இந்த மாதம் உங்கள் பணத்தை பெறுவது கடினமாக இருக்கும்.
சிம்ம ராசி – தொழில் வல்லுநர்கள்
இந்த மாதம் தொழிலில் உங்களின் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் பெரிய பொறுப்பை மேற்கொள்வீர்கள். முடிவுகளை எடுப்பதற்கு முன் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுங்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கி உங்கள் கடின உழைப்பிற்கு ஆதரவு தருவார்கள்.
சிம்ம ராசி – ஆரோக்கியம்
இந்த மாதம் சோர்வு காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதனால் மருத்துவச் செலவு அதிகரிக்கும். கண்களில் அயர்ச்சி அதிகரிக்கும். உங்களின் தூக்க நேரத்தை சிறிது அதிகரித்துக் கொள்ளுங்கள். வெளி உணவுகளை உட்கொள்வீர்கள். இதனால் அஜீரணக் கோளாறு ஏற்படும்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜைசிம்ம ராசி – மாணவர்கள்
நீங்கள் பொறுப்புடன் கல்வி பயின்று அதன் காரணமாக நிறுவனத்தின் அங்கீகாரம் பெறுவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்புடன் ஆற்றுவீர்கள். உங்களுக்கு ஆசிரியர்களின் வழ்காட்டுதல் கிடைக்கும். உங்கள் அழகான உரையாடல் திறன் கண்டு உங்கள் பெற்றோரும் ஆசிரியர்களும் மகிழ்வார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்: 2nd, 3rd, 4th, 5th, 12th, 15th, 18th, 19th, 22nd, 23rd and 30th
அசுப தினங்கள்: 6th, 7th, 8th, 17th, 21st, 25th, 26th and 30th
Tags: 2018 Simha Rasi Palan June June Month Simha Palan 2018 Matha Rasi Palan 2018 Simha Rasi Palangal 2018 June Simha சிம்மம் மாத ராசி பலன் 2018 June Month Simha Palan 2018 2018 Simha Rasi Palan June Matha Rasi Palan 2018 Simha Rasi Palangal 2018 June Simha சிம்மம் மாத ராசி பலன் 2018
Leave a Reply