Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

2018 August Month’s Rasi Palan for Mesham

June 21, 2018 | Total Views : 1,584
Zoom In Zoom Out Print

மேஷ ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதத்தில், உங்களுடைய மாறுபடும் இயல்பை நீங்கள் கடந்துவிட்டால், இன்னும் சிறந்த பலன்களைப் பெறலாம். தொழில் வாய்ப்புக்கள் மீது கவனம் செலுத்துங்கள். அதனால் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம். நீங்கள் அதிகாரப்பூர்வமான மக்களுடன் பயணம் செய்ய நேரிடும். நிதி விஷயங்களில் நீங்கள் கவனமாகவும் முன்யோசனையோடும் செயல்பட வேண்டும். இல்லாவிடில் இடர்பாடுகளை சந்திக்க நேரும். விரைவான வழிமுறைகளைத் தேடுவதை நிறுத்தவும். இது மோசமான மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்தும். வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் நல்ல ஆதாயங்களைக் பெறுவீர்கள். நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கத் தேவையில்லை. ஆனால் செயல்கள் முறையாக நடைபெறுகிறதா என்பதில் கவனிப்போடு இருங்கள். நீங்கள் விரைவான முன்னேற்றம் அடைந்தாலும், உங்கள் வேலையை மெதுவாகவும் முறைப்படியும் தொடர வேண்டும். ஆரோக்கிய நிலை சராசரியாக இருக்கும். 2018-august-months-rasi-palan-for-mesham மேஷ ராசி – காதல் / திருமணம் இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் துணையின் தேவைகளைக் கவனித்துக்கொள்வீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். இது மிகவும் ஆறுதலாக இருக்கும். வீட்டில் அதிக நேரத்தைச் செலவிட முயற்சி செய்யுங்கள். இது அனைவரையும் நல்ல மனநிலையில் வைக்கும். உங்களுடைய வலுவான முயற்சிகளால் திருமண ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை அடையும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை மேஷ ராசி – நிதி நிலைமை இந்த மாதம், உங்கள் நிதி நடவடிக்கைகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கான செலவு மற்றும் உங்கள் தேவைகளுக்கு ஆடம்பர பொருட்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு சேமிப்புகளைத் திட்டமிட வேண்டும். உங்கள் நிலையான சொத்துகளின் மூலம் தொடர்ந்து வருமானம் பெறுவது பற்றித் திட்டமிடுங்கள். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை

 

மேஷ ராசி – வேலை இந்த மாதம் உங்கள் வேலையில் உகந்த சூழ்நிலையைக் காண முடியும். வேலை மாற்றத்திற்கான உங்கள் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். மேலும் உங்கள் தற்போதைய தொழிலில் உங்களுடைய மேலதிகாரிகளிடமிருந்து ஆதாயம் பெறுவீர்கள். உங்கள் தகுதி மற்றும் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் குறிப்பிடத்தக்க செயல்களுக்காகப் பாராட்டப்படுவீர்கள். நியமிக்கப்பட்ட பணிகளை முடித்த பிறகு அதற்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: ஸ்ரீ கணேச பூஜை மேஷ ராசி – தொழில் நீங்கள் மிகவும் தைரியமானவராகவும், எளிதில் விஷயங்களைச் சமாளிக்க கூடியவராகவும் இருப்பீர்கள். உங்கள் முயற்சிகளை சரியான விதத்தில் முன்னெடுத்துச் செல்வதன் மூலமும், அதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் விதத்தில் தொழிலில் முன்னேற்றம் காணலாம். நீங்கள் மிகக் கவனமாகவும் மற்றும் பொறுமையாகவும் பணிகளைச் செய்ய வேண்டும். இந்த மாதத்தில் கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மேஷ ராசி – தொழில் வல்லுநர் இந்த மாதம் உங்கள் தொழிலில் பலன்கள் கலந்து காணப்படும். உங்களுடைய குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குக் கடினமாக உழைப்பீர்கள். அதை அடைய நல்ல ஊக்கத்துடன் காணப்படுவீர்கள். நீங்கள் மக்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறலாம். உங்களுடைய நேர்மையான வேலைக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும். மேஷ ராசி – ஆரோக்கியம் உங்கள் உடல் நிலை இந்த மாதத்தில் சிறப்பாக இருக்காது. நீங்கள் வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகளாலும், வாயு பிரச்சினையினாலும் பாதிக்கப்படுவீர்கள். உங்களின் மோசமான மனநிலை காரணமாக நீங்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படுவீர்கள். வேலையில் கவனம் மற்றும் மன உறுதியை மேம்படுத்த தியானம் பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை மேஷ ராசி – மாணவர்கள் இந்த மாதம், நீங்கள் விரும்பிய பாடத்தில் உங்கள் ஆர்வத்தைப் புதுப்பிக்க வேண்டும். நீங்கள் உயர்கல்விக்கு முன்னேறுவதற்குத் திடமான திட்டமிடுதல் அவசியம். படிப்பைத் தவிர இதர நடவடிக்கைகளில் அறிவைப் பெற ஆர்வம் காட்டுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 3, 9, 14, 15, 16, 17, 23, 24, 25, 27, 30 மற்றும் 31 அசுப தினங்கள்: 7, 10, 11, 19, 22, 28 மற்றும் 29

banner

Leave a Reply

Submit Comment