Rahu Ketu Transit 2023 – 2025 : 18-Month Period to Remedy Snake Planet Afflictions & Boost Success, Self-Growth & Balance Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2018 August Month’s Rasi Palan for Kumbam

June 21, 2018 | Total Views : 1,965
Zoom In Zoom Out Print

கும்ப ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்களுக்குச் சாதகமான காலமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் தரம் மற்றும் பணியில் நீங்கள் முன்னேற்றம் காணலாம். உங்களுடைய வழியில் தென்படும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்துங்கள். உங்கள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு வரும். சட்ட சிக்கல்களைத் தீர்க்க வேண்டிய நேரமாக அமையும். உங்கள் மனதிற்கு புரியாத போதிலும் உங்கள் ஆழ்மன உள்ளுணர்வு கூறுவதைக் கேளுங்கள். அதிக வெற்றியைப் பெற வேறுபட்ட கோணங்களில் சிந்தியுங்கள். இது அனைத்து விஷயங்களிலும் நேரடி அணுகுமுறைக்கான நேரமாகும். உங்கள் தொழிலில் உங்கள் திறன் மற்றும் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் எளிதாகப் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உடல் ரீதியாக, நீங்கள் நல்ல ஆரோக்கியமாக இருப்பீர்கள். மனநிலையைப் பொறுத்தவரை கவனம் தேவை. 2018-august-months-rasi-palan-for-kumbam கும்ப ராசி – காதல் / திருமணம் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உறவு இந்த மாதத்தில் சுமூகமாக இருக்கும். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் தங்கும். உங்களுடைய துணைக்கு அதிக முக்கியத்துவம் மற்றும் மரியாதை கொடுப்பீர்கள். இதனால் உங்கள் துணையுடன் நல்லுறவிற்கான பிணைப்பு மேம்படும். மகிழ்ச்சி மற்றும் நகைச்சுவை உங்களைப் பின்தொடரும். உங்கள் துணையுடன் ஆரோக்கியமான உறவைப் பெற்று மகிழ்வீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: புதன் பூஜை கும்ப ராசி – நிதி நிலைமை இந்த மாதத்தில் நிதியைப் பொறுத்தமட்டில் அதிக விழிப்புணர்வோடு இருப்பது நல்லது. ஒவ்வொரு செலவும் மிகவும் இயல்பான செலவாகவும் அத்தியாவசியமானதாகவும் இருக்கும். ஆனால் அதில் உங்களுக்கு உண்மையான தேவை என்ன என்பதை உணர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தொகையை வருங்கால நிதிக்காகச் சேமிப்பது நல்லது. சூதாட்டத்தில் செலவிடாதீர்கள். அது உங்களுக்கு நஷ்டத்தையே தரும். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: கேது பூஜை

 

கும்ப ராசி – வேலை வேலையில் உங்கள் திறமை அதிகரிக்கும். உங்களுடைய மேலதிகாரிகளின் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு அல்லது உயர் பதவிகள் உங்களைத் தேடிவரும் இருப்பினும், அதனை தக்க வைக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் சக ஊழியர்களிடம் நல்லுறவைத் தொடருங்கள். அது நட்பான சூழ்நிலைக்கு உருவாக்க உதவி புரியும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை கும்ப ராசி – தொழில் வணிகச்சந்தையில் நுழைவதற்கு உங்கள் தயாரிப்புகளுக்கான விளம்பரத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த மாதத்தில் நீங்கள் எடுக்கும் புதிய தொழில் முயற்சிகள் எதிர்கால வாய்ப்புக்களுக்கு வழி வகுக்கும். விலைமதிப்பற்ற செயலாக அமையும் எனவே, நீங்கள் அந்தச் செயலில் ஈடுபட முயற்சி செய்யுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களுடன் நட்புடன் இருங்கள். அவர்களின் தேவைகள் அல்லது கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உடனடியாக தயாராக இருங்கள். கும்ப ராசி – தொழில் வல்லுநர் இந்தக் காலம் உங்கள் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான ஊக்கத்தை ஏற்படுத்தும். புதிய வேலைகள் அல்லது பணிகள் உங்கள் வேலையைச் சார்ந்ததாக இருக்கலாம். நீங்கள் எளிதாகப் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உங்கள் போட்டியாளர்களை நீங்கள் வெல்ல முடியும். உங்களுக்கு சில அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். உங்களின் சில பழைய பிரச்சினைகள் இந்த மாதத்தில் தீர்வுக்கு வரும். கும்ப ராசி – ஆரோக்கியம் இந்த மாதத்தில் குறிப்பிடத்தக்க முக்கிய ஆரோக்கியப் பிரச்சனைகள் எதுவும் இல்லை. உணவு சாப்பிடுவதை தள்ளிப்போடாமல் வழக்கம் போல் உங்கள் அன்றாட உணவு கட்டுப்பாட்டை தொடருங்கள். கடுமையான வேலை அல்லது மன அழுத்தம் காரணமாக நீங்கள் மனந்தளர்ந்து கவலைப்பட நேரிடும். இந்தச் சூழ்நிலையை கட்டுப்படுத்தத் தினசரி நீங்கள் தியானம் செய்ய வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை கும்ப ராசி – மாணவர்கள் இந்த மாதத்தில் நீங்கள் அதிகமான தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்கள் செயல்பாடுகளை அடைய உங்கள் சொந்த சிந்தனைகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக உங்களுடைய படிப்பு விஷயங்களைப் பற்றி ஆசிரியரிடம் ஆலோசிப்பது நல்லது. உங்கள் சக மாணவர்களிடமும், பெற்றோரிடமும் தவறான அணுகுமுறையைத் தவிர்க்கவும். அத்தகைய நடவடிக்கைகளை நீங்கள் செய்யக்கூடாது. அது உங்கள் நன்மதிப்பைக் கெடுத்துவிடும். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுபதினங்கள்: 1, 4, 10, 13, 21, 22, 28 மற்றும் 31 அசுப தினங்கள்: 8, 11, 17, 19, 23, 27 மற்றும் 30

Leave a Reply

Submit Comment