கடக ராசி – பொதுப்பலன்கள்
இந்த மாதம் உங்களுடைய நிலையில் படிப்படியாக அனுகூலம் காணப்படும். உங்கள் தற்போதைய வாழ்க்கை நிலை உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்காது. பொறுமையுடன் இருங்கள். எதிர்மறை எண்ணங்களைத் தவிருங்கள். உங்கள் குடும்பத்தாருடன் அகந்தைப் போக்கினால் ஏற்படும் சச்சரவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கடுமையான சூழ்நிலை காணப்பட்டாலும் உங்கள் பொது வாழ்க்கை பாதிபின்றி நிலையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செல்ல நீங்கள் திட்டமிடலாம். அது பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சமூக புகழ் அதிகரிக்கும் மற்றும் முக்கியமான விஷயங்களில் உங்கள் ஆலோசனையை மக்கள் பெற நேரிடும். சமூக வாழ்வின் மேல் உங்கள் கவனம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தைச் சிறப்பாக கவனித்துக் கொண்டால் பல்வேறு பணிகளை மிகத்திறமையாகச் செயல்படுத்தலாம்.
கடக ராசி – காதல் / திருமணம்
இந்த மாதத்தில் உறவு நிலை பற்றிய கவலை காணப்படும். நீங்கள் உறவை கவனமாகக் கையாள வேண்டும். இந்த மாதம் உறவு கடுமையாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் காணப்படும். உங்கள் துணையுடன் மோதல்கள் மற்றும் சச்சரவுகளை தவிர்க்கவும். பதட்டமான சூழ்நிலையை தவிர்க்க உங்கள் துணையின் தேவைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜைகடக ராசி – நிதி நிலைமை
உங்களை கவலைக்குள்ளாக்கிய நிதி சம்பந்தமான தேவைகள் அனைத்தையும் இந்த மாதம் நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். அதே நேரத்தில், நிலுவையிலுள்ள வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்களை வசூலிப்பது நல்லது. இருக்கும் நிதியைக் கொண்டு நிதி நிலைமையைச் சரி செய்து கொள்ள நேரிடும். செலவினங்களைக் கட்டுப்படுத்துவதால் ஒரு குறிப்பிட்ட தொகை நீங்கள் சேமிக்கலாம்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சுக்கிரன் பூஜைகடக ராசி – வேலை
நீங்கள் உங்கள் மதிப்பை நிரூபிக்கச் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அது உங்களுக்கு ஆறுதல் மற்றும் திருப்தியை அளிக்கும். வேலையில் உங்களுடைய நம்பகமான செயல்கள் அங்கீகாரத்தைப் பெறலாம். அனைவருடனும் ஒரு நல்ல உறவைத் தொடரவும். உங்களின் உயர் அதிகாரிகள் புதிய பொறுப்புகளுக்கு உங்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம். இதை நிறைவேற்றுவதற்கு நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: செவ்வாய் பூஜைகடக ராசி – தொழில்
தொழிலில் வளர்ச்சி மந்தமாக இருக்கும். உங்களின் எதிர்ப்பர்புக்கேற்ப காணப்படாது. அதற்காகக் கவலைப்படுவதற்கு பதிலாக செய்யும் செயல்களில் வெற்றியடைவதற்கு வேறு என்னென்ன வழி வகைகள் இருக்கிறது என்பது பற்றி சிந்தியுங்கள். உங்கள் தொழில் கூட்டாளிகள் அவர்களுடைய வேலையை முடிக்க முடியாமல் போகலாம். அதனால் பணிகள் நிலுவையில் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காண உங்களுடைய சக ஊழியர்களுக்கு நன்கு பயற்சி அளியுங்கள்.
கடக ராசி – தொழில் வல்லுநர்
தொழில் வல்லுநர்களுக்கு இது அனுகூலமான மாதமாக காணப்படுகின்றது. உங்கள் தொழில் வாழ்க்கை சுமூகமாக இயங்குவதோடு, நீங்கள் அங்கீகாரத்தையும் முன்னேற்றத்தையும் பெறுவீர்கள். பணியிடத்தில் சவாலான சூழல்நிலையை நீங்கள் சந்திக்க நேரிடும். நீங்கள் பலதரப்பட்ட பணிகளைச் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். உங்களுடைய செயலில் உள்ள செயல்திறன் உங்கள் திறன்களை வெளிப்படுத்தி நன்மதிப்பை பெற்றுத் தரும்.
கடக ராசி – ஆரோக்கியம்
இந்த மாதம் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். நீங்கள் கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதிக புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். உங்களை வலுவாக ஆக்கிக் கொள்ளுங்கள். மன உறுதிப்பாட்டிற்காக மன அழுத்தத்திலிருந்து வெளியேற முயற்சிக்கவும். தியானப் பயிற்சி உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜைகடக ராசி – மாணவர்கள்
இந்த மாதம் நீங்கள் எது செய்வதாக இருந்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். மூத்தவர்கள் மற்றும் உங்கள் நலத்தை விரும்புபவர்களின் ஆலோசனையைக் கேட்டு அதைக் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள். அதை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். உங்கள் பாடத்திட்டத்தை அட்டவணையின் படி முடியங்கள். கூடுதல் வேலைகளைச் சரியான நேரத்தில் செய்வதற்கு தயாராகுங்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்: 3 , 6 , 7, 14, 15, 20, 21, 23, 24, 30, மற்றும் 31
அசுப தினங்கள்: 8, 9, 11, 19, 22, 28 மற்றும் 29.
Tags: August Month Kadagam Palan 2018 2018 Kadagam Rasi Palan August Matha Rasi Palan 2018 Kadagam Rasi Palangal 2018 August Kadagam மேஷ மாத ராசி பலன் 2018
Leave a Reply