Sins & Curses Removal Program: Invoke Shiva to help Destroy Sins & Curses, Remove Negativity & Grant Security, Success & Salvation Join Now
ரிஷப ராசி பலன் 2024 | Taurus Horoscope 2024 in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
taurus

ரிஷபம் வருட ராசி பலன் 2024

இந்த வருடம் சுயமாக தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வருடமாக உள்ளது. நீங்கள் தொழில் சார்ந்து எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றியையும், நல்ல தன லாபத்தையும் ஏற்படுத்தி கொடுப்பதாக உள்ளது. புதிய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகி சுய தொழில் சம்மந்தப்பட்ட பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பதாகவும் குழந்தை பிறப்பில் தடை மற்றும் தாமதத்தை அனுபவித்தவர்களுக்கு குழந்தை பிறப்பு போன்ற சுப நிகழ்வுகளையும் ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக இந்த வருடம் அமையப்போகிறது. இந்த வருடம் உங்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். சென்ற வருடம் வரை சரியில்லாமல் இருந்த உங்கள் சகோதர சகோதரிகளுடனான உறவுநிலை பலப்படும். ஏப்ரல் மாதத்தில் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவதற்காகவும் வீட்டு பராமரிப்பு பணிக்காகவும் கணிசமான பணத்தை செலவு செய்ய வேண்டியது வரலாம்.

வருட ராசி பலன் 2024

ரிஷபம்: குணாதிசயங்கள்

ரிஷப ராசியினர் கலை சார்ந்த துறையில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். மற்ற ராசியினரைவிட அதிக செல்வம் பெற்றிருப்பார்கள். உடல் வலிமை, மன வலிமை இரண்டையும் பெற்றிருப்பார்கள். ரிஷப ராசியினர் கடினமாக உழைப்பார்கள். நன்றாக சாப்பிட்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். இவர்கள் பல்வேறு சூழ்நிலைகளை அனுசரித்து சமாளித்தாலும் பிடிவாதமான அணுகுமுறையை தவிர்ப்பதன் மூலம் நல்ல பெயரைப் பெறுவார்கள். பொறுமை அவர்களின் மிகப் பெரிய பலமாகும். பிடிவாதம், பேராசை மற்றும் கோபம் இவர்களின் பலவீனங்களாகும்.

பரிகாரங்கள்:

  • மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாடு செய்து வர படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.
  • உத்தியோகத்தில் மேன்மை அடைய சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயர் கோவிலில் நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு.
  • தாயார் வயதை உடையவர்களுக்கு அன்னதானம் செய்வது வாழ்வில் ஏற்றத்தை கொடுக்கும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

வாழ்வில் ஏற்றம் பெற சனி பூஜை

சாதகமான மாதங்கள் : ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, நவம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC