Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
கன்னி ராசி பலன் 2024 | Virgo Horoscope 2024 in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
virgo

கன்னி வருட ராசி பலன் 2024

இந்த வருடம் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். குறிப்பாக மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகளுடனான உறவுகள் பலப்படும். உங்களுக்கு நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதிதாக கிடைத்த நட்பு மூலம் ஆதாயங்கள் உண்டு. குறிப்பாக கூட்டுத்தொழில் முயற்சிகளில் புதிய நண்பர்கள் மூலம் தன லாபம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உங்கள் குடும்பத்தில் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த வருடம் தங்களின் பொருளாதார நிலை ஏற்றம் காணும் வகையில் கிரக நிலைகள் சிறப்பாக உள்ளன. உங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரித்து காணப்படும். ஆன்மீகத்திற்காக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் நிலையும் வரலாம். உங்கள் பெற்றோரின் உடல் நலனில் அக்கறை தேவை. தாயாருக்கு தலைவலி, முதுகு வலி போன்ற சிறு சிறு உபாதைகள் வந்து நீங்கும். கல்விக்கான உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தாங்கள் விரும்பும் வகையில் உதவித் தொகை பெறுவார்கள்.

வருட ராசி பலன் 2024

கன்னி: குணாதிசயங்கள்

கன்னி ராசியினர் நடைமுறைக்கேற்ப நடந்து கொள்வார்கள். எதையும் முழுமையாக முறையாக செய்பவர்கள். சாதகமற்ற நிலையையும் கையாளும் திறன் மிக்கவர்கள். இவர்கள் வணிக இயலுணர்வு மிக்கவர்கள். பல் திறன் பெற்றவர்கள். புத்திசாலிகள். ஆனால் அடிக்கடி மாறும் இயல்பு கொண்டவர்கள். இவர்கள் நிர்வாகம். சட்டம், கணிதம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களில் விருப்பம் உள்ளவர்கள். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களை செய்தல் / ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் மூலம் சம்பாதித்தல் இவர்களின் இயல்பு.

பரிகாரங்கள்:

  • புதன்கிழமைகளில் பாசிபருப்பை சமைத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் உள்ள மகாவிஷ்ணுவிற்கு நெய்வேத்தியமாக படைத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கி வருவதன் மூலம் உங்கள் தொழிலில் ஏற்றம் ஏற்படும்.
  • திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப்பெண்களுக்கு புது துணி வகைகளை தானமாக கொடுப்பது உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
  • புதன்கிழமைகளில் பச்சை வண்ண வஸ்திரம் அணிவது வெற்றியை கொடுக்கும்
  • .
  • சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு.
  • மாணவர்கள் கல்வி கற்பதற்கு உதவி புரிவது வாழ்கையில் ஏற்றத்தை கொடுக்கும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

அனைத்திலும் வெற்றி கிடைக்க கணபதி பூஜை

சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர்.

சாதகமற்ற மாதங்கள் : மார்ச், ஏப்ரல், ஜூலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC