இன்றைய கன்னி ராசி பலன் – அதிர்ஷ்ட மாற்றங்கள் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
virgo

கன்னி வருட ராசி பலன் 2026

கன்னி ராசிக்காரர்களைப் பொறுத்தவரை 2026ஆம் ஆண்டு எதிரிகளை சமாளித்து முன்னேற்றம் காணும் சூழல் உருவாகும். பொருளாதார நிலைமைக்கும் சாதகமான காலமாக இருக்கும். புதிய தொடர்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது, அதே நேரத்தில் பழைய தொடர்புகள் தற்காலிகமாக விலகக்கூடும். ஆனால் ஆண்டின் தொடக்கத்தில் வாழ்க்கைத் தேவைகள் குறித்த அச்சம் மற்றும் கவலை உருவாகும். உடல் நலத்தில் இருந்த சிக்கல்கள் மெல்ல மெல்ல சரியாகும். கடந்த கால மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகரிக்கும். பெற்றோரின் உடல்நலத்தில் சிறிய சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பும், புரிதல் குறைவுகளும் தோன்றலாம். இந்த ஆண்டில் நீண்ட தூரப் பயணங்கள், தீர்த்த யாத்திரைகள் நடைபெறக்கூடும். ஆண்டின் இறுதி பகுதியில் ஆன்மீக ஆர்வமும், ஆராய்ச்சி சிந்தனையும் அதிகரிக்கும். மொத்தத்தில் வாழ்க்கை நிலை சீராக இருந்தாலும், தாழ்வு மனப்பான்மை மற்றும் பிறருடன் ஒப்பீடு செய்வதால் சில சிக்கல்கள் உருவாகலாம்.

வருட ராசி பலன் 2026

கன்னி: குணாதிசயங்கள்

கன்னி ராசியில் பிறந்தவர்கள் யதார்த்தமாக நடந்து கொள்வார்கள். எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படுபவர்கள், சிறு விஷயங்களிலும் முழுமையை நாடுபவர்கள். சூழ்நிலை எவ்வளவு சவாலானதாக இருந்தாலும் அதை சமாளிக்கும் திறமை இவர்களிடம் இருக்கும். வணிக உணர்வு, பலதரப்பட்ட திறமைகள், கூர்மையான புத்தி இவர்களின் அடையாளமாகும்; ஆனால் மனநிலையிலும் விருப்பங்களிலும் அடிக்கடி மாற்றம் காணப்படும். நிர்வாகம், சட்டம், கணிதம், கணக்கியல் போன்ற துறைகளில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை மேற்கொள்வதும், பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டுவதும் இவர்களின் இயல்பான தன்மையாகும்.

பரிகாரங்கள்:

சனிக்கிழமைகளில் ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்வது நல்ல ஆரோக்கியத்தையும் தம்பதியருக்குள் நல்ல ஒற்றுமையையும் அளிக்கும். ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் விநாயகர் மற்றும் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்வது நல்ல நித்திரை, மன அமைதி மற்றும் குடும்பத்தில் ஆரோக்கியத்தை வழங்கும். தினமும் அல்லது குறைந்தபட்சம் புதன்கிழமையும் சனிக்கிழமையும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஜபிப்பது நல்ல பலன்களை அளிக்கும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

உத்தியோகத்தில் மேன்மை பெற : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகத்தில் மேன்மை பெற : கேது பூஜை

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர்பூஜை

கல்வியில் சிறந்து விளங்க : சனி பூஜை

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : மகா விஷ்ணு பூஜை

சாதகமான மாதங்கள் : ஜூன், ஜூலை, நவம்பர் டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஆகஸ்ட், அக்டோபர், செப்டம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC