ராசி பலன் - கன்னி
பொதுப்பலன்கள்: இந்த வருடம் கன்னி ராசி அன்பர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் கிட்டும். இந்த வருடம் முழுவதும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வார். சனி காரணமாக உங்கள் போக்கில் மந்த நிலை இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பிரிந்து இருப்பீர்கள். உங்கள் பூர்வ புண்ணிய பலன்களை இந்த காலக் கட்டத்தில் பெறுவீர்கள். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பார். இந்த இடம் பாக்கிய ஸ்தானம் என்றும் தர்ம ஸ்தானம் என்றும் கூறப்படும். நீங்கள் அசாதரணமான வகையில் ஆன்மீக ஈடுபாடு கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உங்கள் தந்தையுடனான உறவு முறை சிறப்பாக இருக்காது. இந்த வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருப்பார். பின் ஆறாம் வீட்டில் சஞ்சரித்து மீண்டும் ஐந்தாம் வீட்டிற்கு வந்து விடுவார். ஐந்தாம் வீட்டில் குரு இருக்கும் போது குழந்தைகளுடன் நல்லுறவு இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஆனால் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் போது சில உடல் உபாதைகளை ஏற்படுத்தும். வருட மத்தியில் சில பிரச்சினைகள் இருந்தாலும் வருட ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு இந்த வருடம் லாபங்கள் பெருகும். ஆனால் தொழில் கூட்டாளிகளிடம் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருட ஆரம்பமும் முடிவும் நல்ல பலன்களைக் கொண்டுவரும். கல்வியில் வெற்றி பெற மாணவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். கவனச் சிதறல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். குடும்ப உறவுகள் ஆரம்ப மாதங்களில் சிறப்பாக இருந்தாலும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் குடும்பத்தில் சில சலசலப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு
வேலை: உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சனி இருப்பதால் வேலையைப் பொறுத்தவரை இந்த வருட ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தாலும் சிறிய அளவிலான சவால்களை சந்திக்க நேரும். சனி காரணமாக உங்கள் புத்திசாலித்தனத்தில் சிறிது மந்த நிலை ஏற்படும். நீங்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்ய நினைப்பீர்கள். இதனால் ஒரு வேலையிலும் உங்களால் முழு கவனம் செலுத்த இயலாது. இந்த வருடம் நீங்கள் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு மாற நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நீங்கள் புது வேலையிலும் சேரலாம் அல்லது ஏற்கனவே இருந்த பணியிலும் சேரலாம். எனவே எந்த வேலை என்பதை யோசித்து நிதானமாக அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுங்கள். உணர்ச்சிப் பூர்வமாக செயல் படாதீர்கள். வருடக் கடைசியில் வேலைக்கான வாய்ப்ப்புகள் அதிகம் கிடைத்தாலும் சில குறிப்பிட்ட மாதங்கள் அதாவது ஜனவரி, மார்ச் மற்றும் மே மாதங்கள் அதிர்ஷ்டம் அளிப்பதாக இருக்கும். ஆனால் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் பணியிடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சக பணியாளர்கள் இடத்தில் கவனமாகப் பழகவும். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறவும். செப்டம்பர் மத்திய காலம் முதல் நவம்பர் மத்திய காலம் வரை உங்களுக்கு நன்மை தரும் காலமாக அமையும். ஒன்பதாம் வீட்டில் ராகு இருப்பதன் காரணமாக நீங்கள் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் வெற்றி காண – குரு ஹோமம்
காதல் / திருமணம்: கன்னி ராசி அன்பர்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்து காணப்படும். உங்கள் உறவு முறைகளைப் பொறுத்தவரை வருட ஆரம்பத்தில் பதட்டமான நிலை இருக்கும். வருட மத்தியில் சாதாரணமாகவும் வருட முடிவில் உங்களுக்கு சாதகமாகவும் ஆறுதலாகவும் இருக்கும். வருட மத்தியில் நீங்கள் உங்களுக்கு பிரியமானவர்களுடன் வாக்குவாததத்தில் ஈடுபடாதீர்கள். குறிப்பாக பூர்வீகச் சொத்து குறித்த விஷயங்களில் கவனமாகப் பேசவும். செப்டம்பர் முதல் நீங்கள் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவீர்கள். செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக் கட்டங்களில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கைத்துணை வருட ஆரம்ப நான்கு மாதங்கள் பணியில் வெற்றி காண்பார். ஆனால் அவரது முழு கவனமும் வேலையில் மட்டுமே இருக்கும். உங்கள் முதல் குழந்தை குறிந்த கவலை காரணமாக உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். உங்கள் இரண்டாம் குழந்தை நிலை சிறப்பாக இருக்கும். குறிப்பாக கல்வியில் சிறந்த முறையில் வெற்றி காணும் வகையில் இருக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண – சிவ சக்தி ஹோமம்
நிதிநிலைமை: இந்த வருடம் உங்கள் நிதிநிலை சாதாரணமாக இருக்கும். லாபம் நஷ்டம் இரண்டும் கலந்து இருக்கும். இந்த வருடம் குரு மற்றும் சனி இணைந்து உங்கள் பதினொன்றாம் வீட்டை ஏழாம் பார்வையாகப் பார்ப்பதால் வருட ஆரம்பத்தில் இருந்தே உங்கள் வாழ்வில் ஸ்திரத்தன்மை இருக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் வெளிநாட்டு ஆதாயம் கிட்டும். நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உள்ளது. ஒன்பதாம் வீடு பாக்கியம் மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் . தந்தை வழிச் சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும் போது உங்களுக்கு மறைமுக வருமானமும் கிட்டும். உங்கள் செலவுகள் இந்த வருடம் அதிகரிக்கும். இதனால் நிதிநிலையில் சிறிது பதட்ட நிலை ஏற்படும். ஆனால் இந்த வருட முடிவில் உங்கள் பணப் பை நிரம்பும். சனி உங்கள் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பொழுதுபோக்கு, ஷேர் மார்க்கெட் மற்றும் ஊகவணிகம் மூலம் பணம் கிட்டும்.
நிதிநிலை சிறக்க – குபேர ஹோமம்
மாணவர்கள்: கன்னி ராசி மாணவர்கள் கடினமாக உழைப்பதன் மூலம் நல்ல வளத்தைக் காண்பார்கள். பள்ளி பயிலும் மாணவர்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். ஆசிரியர் சொல்வதை புரிந்து கொள்வதிலோ அல்லது வீட்டுப்பாடங்கள் எழுதுவதிலோ பிரச்சினைகள் எழலாம். படிப்பது மற்றும் எழுவதில் சோம்பல் காணப்படும். கவனமின்மை காரணமாக நல்ல பெயர் பெற இயலாது. ஆனால் குறித்த நேரத்திற்குள் வீட்டுப் பாடங்களை முடித்தால் நீங்கள் இந்தக் காலக் கட்டத்தை எளிதாகக் கடக்கலாம். போட்டித் தேர்வுக்கு தயார் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் தான் வெற்றி காண இயலும். மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலக் கட்டத்தில் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிட்டும். அரசியல் துறை, தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் சமூகவியல் படிக்கும் மாணவர்கள் இந்த வருடம் சிறப்பாக செயலாற்றுவார்கள்.
கல்வியில் வெற்றி பெற – ஹயக்ரீவ ஹோமம்
ஆரோக்கியம்: இந்த வருட ஆரமபத்தில் கன்னி ராசி மாணவர்கள் உடல் நிலை சிறப்பாக இருக்கும். குரு உங்கள் லக்னத்தைப் பார்ப்பதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஆனால் குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்களில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களில் சிலருக்கு நீரிழிவு மற்றும் யூரின் ட்ராக் சார்ந்த நோய்கள் ஏற்படலாம். அஜீரணக் கோளாறும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம் சிறக்க – தன்வந்தரி ஹோமம்